1. இஸ்ரவேல் புத்திரர் விக்கிரக ஆராதனைக்காரர்களாக மாறின போது கர்த்தருடைய பட்சத்தில் நின்றது ஒரு லேவி கோத்திரம் மட்டுமே – யாத் 32:26
2. ராஜாவும், ஜனமும் பயப்பட்ட போது இராட்சதனான கோலியாத்தோடு போராடினது தாவீது ஒருவன் மட்டுமே – 1சாமு 17:32, 36
3. ராஜாவும், ஜனங்களும் விக்கிரக ஆராதனை செய்தபோது அதற்கு எதிராக நின்றது எலியா ஒருவன் மட்டுமே – 1இரா 18:22
4. எல்லா தீர்க்கதரிசிகளும் பொய் தீர்க்கதரிசனம் சொல்லும்பொழுது “தேவன் சொல்வதை சொல்வேன்” என்றது மிகாயா தீர்க்கதரிசி ஒருவன் மட்டுமே – 2நாளா 18:12, 13
5. ஜனங்கள் அவபக்தியாய் நடந்த காலத்தில் முன்னூறு வருஷங்கள் தேவனோடு சஞ்சரித்தது ஏனோக் மட்டுமே – ஆதி 5:21 – 24
6. யாக்கோபின் 12 குமாரர்களில் மிக உயர்ந்த ஆசிகளைப் பெற்றது யோசேப்பு ஒருவன் மட்டுமே – ஆதி 50:20
7. ஜனங்கள் எல்லாரும் ராஜாவை நோக்கி ஜெபம் பண்ணிய போது தேவனை நோக்கி ஜெபம் பண்ணியது தானியேல் மட்டுமே – தானி 6:10
8. சிறைப்பட்டவர்கள் அநேகராயிருந்தாலும் தன் தேசத்திற்காக அழுது உபவாசித்து ஜெபித்தது நெகேமியா ஒருவன் மட்டுமே – நெகே 1:4
9. இயேசுவின் 12 சீஷர்களில் அவரது மார்பில் சாய்ந்தது யோவான் ஒருவன் மட்டுமே – யோ 13:23, 25
10. சிலுவை மரணத்தின்போது எல்லா சீஷர்களும் பயந்து ஓடினபோது அவரைக்காண கல்லறைப் பக்கம் வந்து அழுததும், அதனால் உயிர்த்தெழுந்தத இயேசுவை முதலில் தரிசித்ததும் மகதலேனா ஒருத்தி மட்டுமே – யோ 20:11 – 17
11. பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடர்ந்தது பவுல் மட்டுமே – பிலி 3:10 – 15
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…