ஒன்று முதல் பத்து வரையிலிலுள்ள முக்கிய காரியங்கள்

1. ஒன்று செய்: பிலி 3:13, 14 “ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரமஅழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.”
2. இரண்டையும் விட்டு விடாதே: நீதி 3:3 “கிருபையும் சத்தியமும் உன்னை விட்டு விலகாதிருப்பதாக;”
3. மூன்றில் நிலைத்திரு: 1கொரி 13:13 “விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது;”
4. நான்கையும் தரித்துக்கொள்: எபே 4:23, 24 “உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொள்ளுங்கள்.”
5. ஐந்தையும் அழித்துப் போடு: கொலோ 3:5 “விபச்சாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயங்களை அழித்துப்போடுங்கள்.”
6. ஆறையும் வெறுத்து விடு: நீதி 6:16 – 19 “ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை, தூராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால், அபத்தம்பேசும் பொய்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.”
7. ஏழையும் எடுத்துக்கொள்: சத்தியம் என்னும் கச்சை, நீதியென்னும் மார்கவசம், சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை, விசுவாசமென்னும் கேடகம், இரட்சண்யமென்னும் தலைச்சீரா, தேவ வசனமாகிய ஆவியின் பட்டயம், ஜெபம் பண்ணி விழித்திருத்தல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும் – எபே 6:14 – 18
8. எட்டையும் விட்டுவிடாதே கூட்டி வழங்குங்கள்: 2பே 1:5 – 7 “நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தொடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.”
9. ஒன்பதையும் அனுபவமாக்கு: கலா 5:22, 23 “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,”
“சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.”
ஆவியின் வரங்கள்: ஞானத்தைப் போதிக்கும் வசனம், அறிவை உணர்த்தும் வசனம், அற்புதங்களைச் செய்யும் சக்தி, தீர்க்கதரிசனம் உரைத்தல், ஆவிகளைப் பகுத்தறிதல், பற்பல பாஷைகளைப் பேசுதல், பாஷைகளை வியாக்கியானம் பண்ணுதல், ஆவியினாலே விசுவாசம், அந்த ஆவியினாலே குணமாக்கும் வரங்களும் அளிக்கப்படுகிறது.” – 1கொரி 12:1, 4 – 12
10. பத்தையும் பற்றிக்கொள்: மத் 22:35 – 40 “அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரை சோதிக்கும்படி: போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான்.”
“இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுமனதோடும் அன்பு கூறுவாயாக;“
“இது முதலாம் கற்பனை.”
“இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூறுவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூறுவாயாக என்பதே.”
“இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.”

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago