1. கிட்டி சேர்க்கும் ஏணி: பெற்றோரை விட்டு தூரமாய் யாக்கோபு செல்வதால் தவிப்பு வேண்டாம் “நான் உனக்கு சமீபமாயிருக்கிறேன்” என்று காட்டினார்.
2. விண் எட்டும் ஏணி: யாக்கோபு பார்த்த ஏணியின் ஒரு நுனி வானத்தையும் மறுநுனி பூமியையும் தொட்டிருந்தது. அந்த ஏணியானவர் கிறிஸ்து. பூமியிலிருந்த ஏணியின் பகுதி அவர் மனுஷகுமாரன் என்பதை வெளிப்படுத்தியது. பரலோகத்தில் அவர் தேவகுமாரன் என்பதை விண்ணைத்தொட்ட பகுதி வெளிப்படுத்தியது.
3. வழியான ஏணி: ஏணியின் இரகசியம் பரலோகத்திற்குச் செல்லும் வழியைக் காண்பிக்கிறது. இயேசு ஒருவரே பரலோகத்திற்குச் செல்லும் வழியானவர். அவராலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் செல்ல முடியாது.
4. இணைக்கும் ஏணி: யாக்கோபு கண்ட ஏணி வானத்தையும், பூமியையும் இணைக்கும் ஏணி. இதில் தேவதூதர்கள் ஏறுகிறவர்களாகவும், இறங்குகிறவர்களாகவும் இருந்தார்கள். ஜெபத்தை எடுத்துக் கொண்டு பரலோகத்துக்கு ஏறினார்கள். தேவனுடைய பதிலைப் பெற்றுக் கொண்டு கீழே இறங்கினார்கள்.
5. ஏறி வர அழைக்கும் ஏணி: வெளி 4:1 “இங்கே ஏறிவா, பின்பு சம்பவிக்க வேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன்.” உலகப் பிரகாரமான ஏணியில் பல சட்டங்கள் இருப்பதைப் போல ஆவிக்குரிய ஏணியிலும் அநேக உபதேச சட்டங்கள் இருக்கின்றன. அவைகளை கீழ்படிதலோடு பின்பற்றி பரலோகம் செல்லலாம்.
6. வானத்தின் வாசலான ஏணி: ஆதி 28:17 “இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல்.” யாக்கோபு காலையில் கண் விழித்து இந்த வார்த்தைகளைக் கூறினான். பாதாளத்திற்கு பல வாசல்கள் உண்டு. ஆனால் பரலோகத்திற்குரிய வாசல் ஒன்றே ஒன்று தான். அந்த வாசல் இயேசுவே.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…