தேவசெய்தியை உவமை மூலமாக எசேக்கியேல் வெளிப்படுத்துகிறான். இந்த உவமையில் கூறப்பட்ட பெரிய கழுகு பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக் குறிக்கிறது. இதிலிலுள்ள லீபனோன் எருசலேமைக் குறிக்கிறது. வேறொரு பெரிய கழுகு எகிப்தின் பார்வோனைக் குறிக்கிறது. கொண்டல்காற்று பாபிலோனிய சேனையைக் குறிக்கிறது. கேதுருமரம் யூதா தேசத்தைக் குறிக்கிறது.
நேபுகாத்நேச்சார் யோயாக்கீம் அரசரை பாபிலோனுக்குக் கொண்டு சென்றார். அப்போது அவர் சிதேக்கியாவை பாவை அரசராக எருசலேமில் வைத்துச் சென்றார். எகிப்து சிதேக்கியாவை நைசாக ஆசைகாட்டிக் கவர்ந்தது. நேபுகாத்நேச்சாருடன் உள்ள உடன்படிக்கையை சிதேக்கியா முறித்தார். சிதேக்கியா பாபிலோனில் மரிப்பார் என்று தீர்க்கதரிசனம் வந்தது. எகிப்து சிதேக்கியாவைக் கைவிட்டது.
இங்கு கூறப்படும் இளந்தளிர் மேசியாவாகிய இயேசுகிறிஸ்துவும், உயரமான பர்வதம் சீயோன்மலையுமாகும். இந்த மேசியா அரசரின் கீழ் அனைத்து இன மக்களும் ஒன்றாகத் திகழுவர். பட்டுப்போன அத்திமரமான இஸ்ரவேல் செழித்து விளங்கும். அனைத்துப் பேரரசுகளும் அவர் பாதத்தின் கீழ் வரும். அப்போது உலகம் எல்லாம் ஒரு குடையின் கீழ் வரும். கர்த்தர் சொன்னார், அதை நிறைவேற்றுவார். வெகுவிரைவில் உலகம் அதைக் காணும் – எசே 17:1 – 24
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…