அரை மனதுடன் கீழ்படிந்து ஆபத்தை அனுபவித்தவர்கள்

1. ஆதாமிடமும், ஏவாளிடமும் நன்மை, தீமை அறியத்தக்க மரத்தின் கனியைச் சாப்பிடக்கூடாது என தேவன் கட்டளையிட்டிருந்தும் மீறி சாப்பிட்டதால் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். வேதனையும், மரணமும் மனித குலத்தை தாக்கியது – ஆதி 3:1 – 6, 24
2. நாதாபும், அபியூவும் பலிபடைப்புக்குப் பலிபீட அக்கினியை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்று – லேவி 8:12, 13 தெரிந்தும் கீழ்படியாமல் அந்நிய அக்கினியை பயன்படுத்தி இறந்து போனார்கள் – லேவி 10:1, 2
3. மோசேயிடம் கர்த்தர் தண்ணீரைத் தர கன்மலைப் பார்த்துப் பேசு என்று கட்டளையிட்டும், மோசே தன் கையை ஓங்கி கோலினால் இரண்டு தடவை அடித்ததால் கானானுக்குள் நுழைய முடியவில்லை – எண் 20:8, 11, 12
4. கர்த்தர் சவுலிடம் அமலேக்கியரை முறியடித்து அவர்களுக்குள்ள எல்லாவற்றையும் கொன்று போடக் கட்டளையிட்டார். ஆனால் சவுல் கால்நடைகளில் சிறந்தனவற்றையும் அவர்களது அரசரையும் கொல்லவில்லை. எனவே கர்த்தர் சவுலை ராஜாவாயிராதபடி புறக்கணித்துத் தள்ளினார் – 1சாமு 15:3, 21, 26
5. ஊசா உடன்படிக்கை பெட்டியைத் தொட ஆசாரியர்களுக்கு மட்டுமே உரிமை என்றறிந்ததும் – எண் 4:15 அவசரத்தில் பெட்டியைப் பிடித்ததால் கர்த்தர் கோபத்தில் அவனை அடித்து அவன் இறந்தான் – 2சாமு 6:6, 7
6. உசியாவுக்கு ஆலயத்தில் தூபங்காட்ட ஆசாரியர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு எனத் தெரிந்தும் – எண் 16:39, 40 தான் தூபங் காட்ட பரிசுத்த ஸ்தலத்துக்குள் சென்றதால் தொழுநோயால் பாதிக்கப்பட்டான் – 2நாளா 26:18, 19

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago