இயேசு எதிர்கொண்ட விசாரணைகளும், முடிவும்

காயபா முன் இயேசுவின் இரண்டாவது விசாரணை (மத்தேயு 26 : 57, 59 – 68, மாற்கு 14 : 53, 55 – 65)

மத்தேயு 26 : 57 “இயேசுவைப்பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள்.”

அன்னா இயேசுவைக் கட்டுண்டவராய் பிரதான ஆசாரியனாகிய காய்பா வினிடத்தில் விசாரிக்கும்படி கொண்டு போனார்கள். பிரதான ஆசாரியரும், மூப்பரும், ஆலோசனை சங்கத்தார் அனைவரும் இரவோடிரவாக விசாரணை செய்து, இயேசுவைக் கொலை செய்யப் பொய்சாட்சி தேடினார்கள். தேடியும் கிடைக்கவில்லை. இச்சங்கத்தில் ஆரோன் பரம்பரையினரின் பிரதான ஆசாரியரும், மூப்பர்களுமிருந்தனர். இயேசுவைப் பிடித்துக் கொண்டு வருவதற்கு முன்பாகவே விசாரணை செய்வதற்காக இவர்கள் காத்திருந்தது, இவர்கள் சதித்திட்டம் தீட்டியிருந்ததைக் காட்டுகிறது. இறுதியாக இரண்டு பொய்சாட்சிகளைக் கண்டுபிடித்தனர். அங்குள்ள ஒருவன் தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும் மூன்று நாளைக்குள்ளே அதைக்கட்டவும் என்னாலே ஆகும் என்று இயேசு சொன்னதாகக் கூறினான். அதை அவன் சரியாகக் கூறவில்லை. இயேசு என்ன கூறினாரென்றால்,

யோவான் 2 : 19 “இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்.”

இதை அவர் எருசலேம் தேவாலயத்தைக் குறித்துச் சொல்லவில்லை. தன்னு டைய சொந்த சரீரத்தைக் குறித்தே சொன்னார். அவருடைய சரீரமாகிய ஆலயம் அடித்து நொறுக்கப்படும், ஆனாலும் மூன்று நாட்களில் அது உயிரோடு எழுப்பப்படுமென்பதை கிறிஸ்து அறிவிக்கிறார். யூதர்கள் அழித்துப்போட்ட தன்னுடைய சரீரம், மரித்தோரிலிருந்து உயிரோடெழும்புவதையே அவர் அடையாளமாக யூதர்களுக்கு அறிவிக்கிறார். இயேசுவுடைய சிலுவை மரணத் தையும், உயிர்த்தெழுதலையும் குறித்து இயேசுவிடமிருந்து வெளிப்பட்ட முதல் தீர்க்கதரிசன வார்த்தை இதுதான். இதைக் குறித்து எரிச்சலடைந்த யூதர்கள், சமயம் கிடைக்கும்போதெல்லாம் அதை அறிவித்து ஜனங்களைக் கிறிஸ்துவுக்கு எதிராக எழுப்பி வந்தார்கள். அதைத்தான் இங்கும் சாட்சியாகக் கூறினர். காய்பா இயேசுவை நோக்கி “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து தானா” என்று கேட்டான். அதை ஜீவனுள்ள தேவன் பேரில் ஆணையிட்டுக் கேட்டார். அதற்கு இயேசு

மத்தேயு 26 : 64 “அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும் மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்ப தையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.” 

இந்த வார்த்தையைப் பிடித்துக் கொண்டு அவரை அவருடைய கன்னத்தில் அறைந்தனர். அவருடைய முகத்தில் துப்பினர். அவரைக் குட்டினார்கள். அவர் கண்களைக் கட்டி, உன்னை அடித்தவன் யார் என்று ஞானதிருஷ்டியினால் சொல்லும் என்று இயேசுவைக் கேட்டுப் பரிகாசம் பண்ணினார்கள். மேலும் அநேக தூஷண வார்த்தைகளையும் இயேசுவுக்கு விரோதமாகச் சொன்னார்கள் .மத்தேயு 26 : 67, 68. குற்றம் புரிந்தவனைக் கைது செய்து விசாரிப்பதே சரியானது. இவர்களோ இயேசுவைக் கைது செய்த பின்னர் குற்றம் கண்டு பிடிக்க முனைந்ததும், பொய்யாய்க் குற்றம் கண்டுபிடிக்க முயன்றதும் அநீதியான செயலாகும். யூதர்களின் தலைவர்கள் கர்த்தரைக் கொலை செய்ய அவர்களுக்குக் கிடைத்த ஒரே காரணம், அவர் தம்மைத் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று கூறியதுதான் என்றனர் (மத்தேயு 26 : 63). இதைக் கேட்டவுடன் பிரதான ஆசாரியன் தன்னுடைய வஸ்திரங்களைக் கிழித்தான். இவ்வாறு அவன் கிழித்தது நியாயப்பிரமாணத் தின்படி தவறு (லேவியராகமம் 21 : 10). தாம் தேவனுடைய வலதுபுறத்தில் உட்காரப் போவதையும், மீண்டும் மேகங்கள் மேல் வரப்போவதையும், இயேசு கூறினார். இதன் மூலம் தான் கிறிஸ்து என்பதையும் (சங்கீதம் 110 : 1), தான் கர்த்தர் என்பதையும் (சங்கீதம் 104 : 3, ஏசாயா 19 : 1). தெரிவித்தார், இவ்வாறு இயேசு கூறியதைத் தேவதூஷணம் என்று அவர்கள் கருதினர் (மத்தேயு 26 : 64 – 66).

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago