யோவான் 18 : 12 13 “அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச் சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப் பிடித்து, அவரைக் கட்டி, முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கு மாமனாயிருந்தான்.”
ரோம போர் சேவகரும், ஆயிரம் போர்சேவகர்களுக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் சேர்ந்து, வானத்தையும் பூமியையும் அதிலுள்ள சகலத்தையும் தன்னுடைய வார்த்தையினால் படைத்த இயேசுவைப் பிடித்து, அவர் தப்புவித்து விடாதபடி கயிறுகளினால் கட்டி, வியாழன் அன்று இரவோடு இரவாக அன்னா என்பவரிடத்தில் விசாரிக்கும்படி கொண்டு போனார்கள். அவன்வயது சென்றவன். அந்த வருஷத்து பிரதான ஆசாரியனான காய்பாவுக்கு மாமனாயிருந்தான். காய்பாவின் மேல் வீட்டில் தான் அன்னா தங்கி இருந்தான். நம்முடைய பாவமும், நாம் பிசாசின் கட்டுகளிலிருந்து விடுதலை பெறவும் கட்டப்பட்ட பலிஆடாய் தன்னை ஜீவபலியாக ஒப்புக் கொடுக்க, இயேசு சென்றார். அவரைக் கைது செய்தவர்களின் பட்டியலில் முதலாவது இடம் பெறுவது போர்சேவகர்கள், இரண்டாவது ஆயிரம் போர்சேவகர்களின் தலைவன். மூன்றாவதாகத்தான் யூதருடைய ஊழியக்காரர்கள் குறிப்பிடப் பட்டுள்ளது. இயேசுவை பிரதான ஆசாரியனிடம் ஒப்புவித்ததோடு அவர்கள் பொறுப்பு முடிந்தது. இயேசு இராப்போஜனம் பண்ணி முடித்து சுமார் இரண்டு மணி நேரத்துக்குள் அவர் கைது செய்யப் படுகிறார்.
எரேமியா (40 : 1), யோவான் ஸ்நானகன் (மாற்கு 6 : 18), பேதுரு (அப்போஸ்தலர் 12 : 6), பவுல் (அப்போஸ்தலர் 16 : 24, 25, 21 : 33, 22 : 25, 28 : 20). ஆகியோரும் கட்டப்பட்டு நியாயம் விசாரிக்கப்பட்டதை வேதத்தில் பார்க்கிறோம். இயேசு வைக் கட்டுவதற்குத் தேவையே இல்லை. அவர் தப்பித்துக்கொள்ள முயலும் குற்றவாளியுமல்ல. தானாகவே முன் வந்து தன்னை ஒப்புக்கொடுத்தவர். பிலாத்து அவரைக் குற்றவாளியென்று கருத வேண்டுமென்பதற்காக இவ்வாறு செய்தனர். அன்னா இயேசுவிடம் சீஷர்களைக் குறித்தும், போதகத்தைக் குறித்தும் விசாரித்தான். அதற்கு இயேசு உடனே தான் யாவரும் கேட்கும் விதத்தில் வெளிப்படையாகவும், யூதர்களின் ஜெப ஆலயங்களிலும், எருசலேம் தேவாலயத்தில் மட்டுமே பேசி வந்தேன் என்கிறார். ஒளிவுமறைவாக தான் எதையும் பேசவில்லையென்றார். நீதிபதிகள் முதலாவது சாட்சிகளை வரவழைத்து, அவர்களை விசாரித்துப் பிரதிவாதிக்கு ஆதரவான சாட்சிகள் யார், எதிரான சாட்சிகள் யாரென்பதைக் கண்டறிந்து அதின் அடிப்படையில் குற்றவாளியை விசாரிப்பதுதான் சரியான ஒழுங்குமுறை. ஆனால் அன்னாவோ சாட்சிகள் யாருமில்லாமல் விசாரிக்கிறான்.
இது சட்டத்திற்கு விரோதமான விசாரணை. சாட்சிகளை தன்னுடைய போத னைகளைக் கேட்டவர்களை முதலாவது விசாரித்தீர்களானால், தான் பேசிய காரியங்களை எளிதாக உங்களால் புரிந்து கொள்ள முடியுமென்று இயேசு கூறுகிறார். அங்கு நின்ற சேவகரில் ஒருவன் கிறிஸ்துவின் பதிலைக் கேட்டு எரிச்சலடைந்து இயேசுவை அறைந்தான். இதை ஏசாயா தீர்க்கதரிசி முன்னமே “அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடை மயிரைப் பிடுங்குகிறவர் களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்.. “ என்று ஏசாயா 50 : 6 ல் கூறியதைப் பார்க்கிறோம். இயேசு அப்பொழுதும் சேவகனிடம் கோபப்படாமல் பொறுமையோடு தான் பேசினது அவனுக்குப் பிடிக்கவில்லையென்றால் அதைச் சுட்டிக்காட்டு. அதற்காகத் தன்னை அறைவது நியாயமல்ல என் றார். அவன் தன்னுடைய எஜமானைப் பிரியப்படுத்த முயற்சிக்கிறான் என்பதை இயேசு உணர்ந்தார். இயேசு மலைப் பிரசங்கத்தில் மத்தேயு 5 : 39 ல் “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு.” என்ற தன்னுடைய உபதேசத்தின்படி செயல்படுகிறார்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…