இயேசுவின் வருகைக்கு முன் நடப்பது:
இயேசுவானவர் முதல்முறை வரும்போது ஜனங்களின் பாவத்தை மன்னிக் கவும், அவர்களைப் பாவத்திலிருந்து மீட்டு இரட்சிக்கவும் வந்தார். இரண்டாவது முறை இயேசுவானவர் வரும்போது, நம்மைப் பாவத்தின் பிரசன்னத்திலிருந்து மீட்க வருகிறார். இதைத்தான் கொலோசெயர் 3 : 3, 4 ல் நாம் மரித்தபின் நம்முடைய ஜீவன் கிறிஸ்துவுடன் தேவனுக்குள் மறைந்திருக்கிறது என்றும் கிறிஸ்து வெளிப்படும்போது நாமும் அவரோடுகூட மகிமையில் வெளிப்படுவோம் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதன்பின் நம்மை பாவம் மேற்கொள்ள முடியாது. எபிரேயர் 9 : 28 ல் இயேசு தமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருள இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார் என்றுள்ளது. வேதத்தில் இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அதிகமாக இதைப் பற்றி மத்தேயு 24, 25 அதிகாரங்களிலும், வெளிப்படுத்தல் புத்தகத்திலும் முழுமையாக நாம் அறியலாம். இயேசு தன்னுடைய வாயால் தன்னுடைய இரண்டாம் வருகைக்கு முன் அநேகர் தான் தான் கிறிஸ்து என்று வந்து அநேகரை வஞ்சிப்பார்களென்றும், யுத்தங்களையும், யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்களென்றும், உலகத்தின் பல இடங்களில் ஜனத்துக்கு விரோதமாக ஜனமும், ராஜ்ஜியத்துக்கு விரோதமாக ராஜ்ஜியமும் எழும்புமென்றும், பல இடங்களில் பஞ்சங்களும், கொள்ளை நோய்களும், பூமி அதிர்ச்சிகளும் உண்டாகுமென்றும், இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பமென்றும், ஆனாலும் முடிவு உடனே வராது என்றும் முன்னமே கூறினார். பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் சாட்சியாகப் பிரசங்கிக்கப்பட்ட பின்தான் முடிவு வருமென்றார். எப்படி அத்திமரம் துளிர் விடும்போது வசந்தகாலம் சமீ பமாயிற்று என்று நாம் அறிவது போல இவைகளெல்லாம் சம்பவிக் குமென்றும் இயேசு கூறினார் (மத்தேயு 24 : 4 – 8, 14, 32– 34).
இயேசுவின் வருகையில் நடக்கும் நிகழ்ச்சிகள்:
இரகசிய வருகை
வேதத்தில் நோவா மட்டும் பூமியானது ஜலத்தினால் அழியப் போவதை கர்த்தர் சொன்னார் என்று பிரசங்கம் பண்ணினார். அப்பொழுதுள்ள ஜனங்கள் யாரும் அவர் கூறியதை நம்பவில்லை. அதேபோல் கர்த்தர் இஸ்ரவேலர்களுக்கு கானானை சுதந்திரமாகக் கொடுப்பேன் என்று கூறிய பொழுது யோசுவாவும், காலேபும் தவிர யாரும் நம்பவில்லை. ஆயிரக்கணக்கான ஜனங்கள் இருந்தும் மேல் வீட்டறையில் இருந்த 120 பேர் மட்டுமே பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றனர். அதேபோல் கர்த்தருடைய பிள்ளைகள் மட்டுமே இயேசுவின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். யோவான் 14 : 3ல் இயேசு “நாம் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்” என்றார். மனிதனை இரட்சிக்கும்படியாக வந்த இயேசுகிறிஸ்து, அந்த இரட்சிப்பை ஏற்றுக்கொண்டவர்களைத் தன்னோடு சேர்த்துக் கொள்ளும்படியாக மீணடும் வரவிருக்கிறாரென்பதை முன்னமே கூறியிருப்பதைப் பார்க்கிறோம். ”ராப்சு” என்னும் லத்தீன் சொல்லிலிருந்து “ராப்சர்” என்னும் சொல் பெறப்பட்டுள்ளது. இதன் பொருள் “எடுத்துக் கொள்ளப்படுத்தல்” அல்லது “பிரித்தெடுக்கப்படுத்தல்” என்பதாகும்.
1 தெசலோனிக்கேயர் 4 : 16, 17 ல் பவுல் “ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.”
இரகசிய வருகையென்பது இரகசியமாக நடக்கும். இது கர்த்தருடைய பிள்ளை களுக்காகவும், இயேசுவை விசுவாசிப்பவர்களுக்காகவும் நடக்கும். மரித்து உயிரோடெழுந்த இயேசு தன்னுடைய சீஷர்களை பெத்தானியா வரை அழைத்துச் சென்று அங்கிருந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் (லூக்கா 24 : 50, 51). அப்பொழுது இரண்டு தூதர்கள் சீஷர்களிடம் இயேசுவானவர் எவ்வாறு எழுந்தருளிப் போனாரோ அப்படியே மறுபடியும் வருவாரென்றனர் (அப்போஸ்தலர் 1 : 11). மத்தேயு தான் எழுதிய,
மத்தேயு 24 : 27 ல் மத்தேயு “மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறது போல மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்”
என்றார். இயேசுவின் வருகை மின்னலைப்போல இருப்பதினால் இரகசிய வருகையில் பங்குகொள்ளாத மனிதர்கள் அதை அறிந்து கொள்ள முடியாது. கிறிஸ்துவின் இரகசிய வருகையின்போது மூன்று வித்தியாசமான சத்தங்கள் வெளிப்படுகின்றன என்றாலும், அந்தச் சத்தத்தை உலகத்து மனிதர்கள் கேட்ப தில்லை. இரகசிய வருகையில் எடுத்துக் கொள்ளப்படவிருக்கும் கிறிஸ்துவின் மணவாட்டி, அவள் மரித்த நிலையிலிருந்தாலும் சரி, உயிரோடிருந்தால் சரி அவளால் மட்டுமே அந்த சத்தத்தைக் கேட்க முடியும். பகிரங்க வருகைக்கு ஏழு வருஷங்களுக்கு முன்பாக இரகசிய வருகையிருக்கும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆரவாரத்தோடு பரலோகத்திலிருந்து தமது சபையைச் சேர்த்துக் கொள்வதற்காக மத்திய ஆகாயத்துக்கு வருகிறார். ஆரவாரமென்பது மகிழ்ச்சியுடன் வருவது. மோசேயும் யோசுவாவும் தேவனுடைய கட்டளை களை எடுத்துக்கொண்டு வந்த போது, கீழே நடக்கும் ஆரவாரத்தைக் கேட்டனர். யோசுவா மோசேயிடம் கீழே ஆரவாரம் கேட்கிறது என்று கூறிய போது, மோசே அதற்கு அது ஜெயதொனியுமல்ல, அபஜெயதொனியுமல்ல, அது பாடலின் சத்தம் என்றார்.
யோசுவாவுக்கு அந்தச் ஆரவார சத்தம் என்று மட்டும் தெரிந்தது. ஆனால் மோசேக்கு அந்தச் சத்தம் ஜெயதொனியா அல்லது அபஜெயதொனியா என்று பகுத்தறியும் ஞானம் இருந்தது. கர்த்தருடைய இரகசிய வருகையில் கேட்கும் ஆரவாரம் அவருடைய கிரியைகளின் ஜெயதொனியாக, மனுஷர்களிடம் தொடங்கிய வேலை பூர்த்தியாய், மணவாட்டியைக் கண்களால் காண்கிற ஜெயதொனியாக இருக்கும். யோவான் 11 : 43 ல் “ லாசருவே வெளியே வா” என்று இயேசு உரத்தமாய்க் கூப்பிட்டபோது, அந்தச் சத்தத்தைக் கேட்டு மரித்த லாசரு உயிரோடெழுந்து வந்தான் என்று பார்க்கிறோம். அதைத் தொடர்ந்து தேவதூதர்களின் தலைவனான பிரதான தூதனின் சத்தம். இந்தச் சத்தமானது சாத்தானின் சேனைக்கு விரோதமான சத்தம். இந்த தூதன் வெளிப்பட்டு கிறிஸ்துவைச் சந்திக்க, மரித்தோரையும் உயிரோடிருப்பவர்களையும் ஆயத்தப் படுத்துவான். சபையார் ஆகாயத்துக்கு தேவதூதர்களால் எடுத்துக் கொள்ளப் படுவதைக் குறித்து,
மத்தேயு 24 : 31 ல் “ வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.”
மாற்கு 13 : 26, 27 ல் “அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள். அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்து கொண்டவர்களை பூமியின் கடைமுனை முதற்கொண்டு வானத்தின் கடைமுனைமட்டுமுள்ள நாலுதிசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்.”
என்றுள்ளது. அடுத்தாற்போல் எக்காளச் சத்தம் கேட்கும். எரிகோ கோட்டையை ஏழாவது தரம் சுற்றி வந்தபோது, ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதி ஜனங்கள் ஆர்ப்பரிக்கும் போது, எரிகோவின் மதில்கள் விழுந்தன (யோசுவா 6 : 20) என்றும், மீதியானியரின் சேனையை முறியடிக்கும் போது, கிதியோனின் 300 போர்வீரர்கள் எக்காளங்களை ஊதி ”கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம்” என்று ஆர்ப்பரித்தனர் என்று நியாயாதிபதிகள் 7 : 20 ல் பார்க்கிறோம். தேவனுடைய எக்காளமென்பது அவருடைய வருகையைப் பற்றிய கடைசி அறிவிப்பு. அதனால் அதைக் கடைசி எக்காளம் என்கின்றனர். இந்த எக்காளச் சத்தம் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு மட்டுமே கேட்கும். அந்தக் கடைசி எக்காளத்திற்குப் பின் மனிதன் தன்னை ஆயத்ததப்படுத்துவதற்கு சமயமிருக்காது. இப்பொழுதே நாம் நம்மைத் தகுதிப்படுத்தி ஆயத்தப்படுத்தி, பரிசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆவியானவரின் சத்தம் அபிஷேகம் பெற்றவர்களுக்கு மட்டும் கேட்கும். அதேபோல் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களுக்கும் இந்தச் சத்தம் கேட்டுத் தங்கள் கல்லறைகளிலிருந்து மகிமையான சரீரத்தோடு ஆகாயத்துக்கு முதன்முதலில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். அவர்களுடைய சரீரங்கள் அழிவில்லாமைக்குரிய நிலையை அடையும் என்று பவுல்,
1கொரிந்தியர் 15 : 51, 53 ல் “இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.”
“அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ள வேண்டும்.”
“இதைத்தான் யோவான் 5 : 25 ல் “மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்” எனறார்.
பவுல் பிலிப்பியர் 3 : 21 ல் “நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்” என்றார். பவுல் மரித்தவர்கள் உயிர்பெற்று எழுந்திருக்கும் மேன்மையை,
1கொரிந்தியர் 15 : 43 – 44 ல் “ மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்; கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும். ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்மசரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு.”
என்று எழுதியிருக்கிறார். கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் கிறிஸ்துவின் இரண் டாம் வருகையினால் எந்தவிதத்திலும் பாதிப்படைவதில்லை. மேன்மைய டைகிறார்கள். வெளிப்படுத்தல் 20 : 4 ல் குறிப்பிடப்பட்டிருக்கும் உயித்தெழு தலும் இதுவும் ஒன்றல்ல. அது கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தபின் நடை பெறும். கிறிஸ்து அக்கிரமக்காரனை அழித்துச் சாத்தானைக் கட்டிச் செயலி ழக்கச் செய்தபின்னர் இது நடக்கும் (வெளிப்படுத்தல் 19 : 11 – 20:3). வெளிப்ப டுத்தல் 20 : 4 ல் கூறப்பட்டிருக்கும் உயிர்த்தெழுதலானது, மகா உபத்திரவ காலத்தில் இரத்த சாட்சிகளாய் மரித்துப் போனவர்களையும், பழைய ஏற்பாட்டு பக்திமான்களையும் குறிக்கும். மேலும் பவுல் 1கொரிந்தியர் 15 : 51 ல் “…கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்தில் ஒரு இமைப் பொழுதிலே நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்” என்கிறார். பூமியில் உயிரோடிருக்கும் மற்றவர்களும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போவோம். இயேசுவை முழுமையாக விசுவாசித்து, அவரைத் தன்னுடைய ஆண்டவரா கவும், இரட்சராகவும் ஏற்றுக்கொண்டு,அவரோடு ஞானஸ்நானத்தின் மூலமாக உடன்படிக்கை செய்து கொண்ட மணவாட்டியைத்தான் இயேசு வரும்போது எடுத்துக் கொள்வார். உயிர்த்தெழுந்த விசுவாசிகளும், மறுரூபமாக்கப்பட்ட விசுவாசிகளும் நடு வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.
வானத்துக்கும், பூமிக்கும் நடுவில் நடு வானத்தில் அவர்கள் கிறிஸ்துவைச் சந்திக்கும்படி எடுத்துக் கொள்ளப்படுவார்கள். நாம் பார்க்கும்படியாகவே அவர்கள் கிறிஸ்துவுடன் சேர்ந்து பரலோகத்திலுள்ள பிதாவின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். பரலோகத்தில் ஏற்கெனவே இருக்கும் மக்க ளோடு இணைந்து கொள்வார்கள். அவர்கள் எல்லாத் துன்பங்களிலிருந்தும் (2கொரிந்தியர் 5 : 2, 4, பிலிப்பியர் 3 : 21), எல்லா வகையான ஒடுக்கங்களிலிருந் தும், நெருக்கங்களிலிருந்தும், மரணத்திலிருந் தும், பாவத்தின் பிடியிலிருந்தும் விடுதலை பெறுவார்கள் (1கொரிந்தியர் 15 : 51 – 56). இவ்வாறு எடுத்துக்கொள்ளப் பட்டவர்கள் வரப்போகும் கோபாக்கினையிலிருந்து அவர்களை விடுவித்து விடுகிறது (1தெசலோனிக்கேயர் 5 : 9). அதாவது மகா உபத்திரவ காலத்திலிருந்து விடுதலை பெறுவார்கள். இதற்கு நாம் ஒவ்வொருவரும் ஆயத்தமாயிருக்க வேண்டும். இயேசு கூறிய பத்து கன்னியர்கள் உவமையில் பத்து கன்னியர்கள் மணவாளனுக்கு எதிர்கொண்டு போக மிகுந்த வாஞ்சையோடு புறப்பட்டாலும், நடுராத்திரியில் மணவாளன் வருகிற சத்தம் கேட்டபோது அவர்களில் 5 பேர் ஆயத்தமாயில்லாததால் கல்யாண வீட்டுக்குள் பிரவேசிக்க முடியாமல் போயிற்று. அதனால் அந்த உவமையின் கடைசியில் இயேசு “மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையாவது நீங்கள் அறியாதபடியால் விழித்திருங்கள்” என்று முடித்திருப்பார் (மத்தேயு 25 : 1 : 13).
இதைத்தான் மத்தேயு 24 : 40 – 42 ல் இரண்டு பேர் வயலில் இருந்தாலும் ஒருத்தி மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவாளென்றும், இரண்டு ஸ்திரீகள் எந்திரம் அரைத்துக் கொண்டிருக்கும் போது ஒருத்தி மட்டும் ஏற்றுக் கொள்ளப்படுவாள் என்றும் மற்றவள் கைவிடப்படுவாள் என்றும் ஆண்டவர் இன்ன நாழிகையில் வருவாரென்று தெரியாததால் விழித்திருங்கள் என்கி றார். மத்திய ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டவர்கள் நித்திய நித்தியமாய் கர்த்தருடனே இருப்பார்கள். பவுல் 1தெசலோனிக்கேயர் 5 : 10 ல் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் போது உயிரோடிருப்பவர்கள் விழித்திருக்கிறவர் களென்றும், அவருடைய வருகைக்குமுன் மரித்த பரிசுத்தவான்களை நித்திரை யடைந்தவர்களென்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த இரண்டு பிரிவினரும் ஏகமா ய்ப் பிழைத்திருக்கும்படி அதாவது நித்திய நித்தியமாய் அவரோடிருக்கும்படி கிறிஸ்து நமக்காக மரித்தாரென்கிறார். வேதத்தின் பழைய ஏற்பாட்டில் ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருக்கையில் தேவன் அவனை எடுத்துக்கொண்டார் (ஆதியாகமம் 5 : 24). எலியா அக்கினி இரத்தத்தில் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் (2 இராஜாக்கள் 2 : 11). பவுல் மூன்றாம் வானம் வரை ஆவியில் எடுத்துக் கொள்ளப்பட்டாரென்பதை 2 கொரிந்தியர் 12 : 2, 4 ல் பார்க்கிறோம்.
இயேசுவானவர் பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதை லூக்கா 24 : 31 ல் பார்க்கிறோம். இதற்குப்பின் சபை கரைதிரையற்ற மணவாட்டியாக பிதாவின் சமூகத்தில் நிறுத்தப்படுகிறது. இந்த நாட்களில் பூமியில் உபத்திரவகாலம் நடந்து கொண்டிருக்கும். இரகசிய வருகையில் இயேசு பூமிக்கு வருவதில்லை. ஏழு முத்திரைகள் உடைக்கப்படும்போதும், ஏழு எக்காளங்கள் ஊதப்படும் போதும், ஏழு கோபக்கலசங்கள் ஊற்றப்படும் போதும் சபை பூமியில் இருப்பதில்லை. கிறிஸ்துவின் மணவாட்டி சபை எடுத் துக்கொள்ளப்பட்ட பின்தான் அந்திகிறிஸ்து என்னும் மிருகம் உலகத்தில் பகிரங்கமாய்ச் செயல்படமுடியும். எடுத்துக்கொள்ளப்படுத்தல் நடந்தபின் கர்த்த ருடைய நாள் வருகிறது. அது தேவனற்றவர்களுக்கு தேவ கோபாக்கி னையையும், துன்பத்தையும், தண்டனையையும் கொண்டுவரும். (1 தெசலோ னிக்கேயர் 5 : 2 – 10). இதைத் தொடர்ந்து கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் இரண்டாம் நிலை நடைபெறும் அப்பொழுது அவர் அக்கிரமக்காரர்களையும், பாவிகளையும் அழித்து விட்டு பூமியை அரசாளுவார் (மத்தேயு 24 : 42,44). எனவே நம் அசதியாயிராமல் பாவத்தில் விழுந்து விசுவாசத்தை விட்டு வழுவிப் போகாதபடி கவனமாயிருக்க வேண்டும் (1தெசலோனிக்கேயர் 5 : 6).
முடிவுரை:
கிறிஸ்து தனது சம்பூர்ண மகிமையோடு இரகசிய வருகையில் வெளிப்படும் நாள் தேவனால் மறைக்கப்பட்ட இரகசியமாகவே உள்ளது. அதை ஆராய்ச்சி செய்யும் உரிமை நமக்கு இல்லை. ஏனெனில்
உபாகமம் 29 : 29 ல் “மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்” என்றுள்ளது.
மத்தேயு 24 : 36 ல் இயேசு திட்டவட்டமாக “அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றோருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்” கூறினார். அதேபோல்,
மாற்கு 13 : 32 ல் “குமாரனும் அறியார்” என்றுள்ளது.
கிறிஸ்தவர்களாகிய நாம் மத்திய ஆகாயத்தில் நம்மை ஏற்றுக் கொள்ள விருக்கும் நம்முடைய மணவாளனாகிய கிறிஸ்துவின் வருகையை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறோம். வெளிப்படுத்தல் 4 : 1 ல் கிறிஸ்து வானவர் “இங்கே ஏறிவா” என்று யோவான் கேட்ட சத்தத்தை, நாம் எந்த வினாடியிலும் கேட்கலாம். கிறிஸ்து பரலோகத்தின் வாசலருகே ஆயத்தமாக நின்று கொண்டிருக்கிறார். கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து தன்னுடைய மணவாட்டியை எடுத்துக் கொள்ளப்போகிறார்.
லூக்கா 21 : 34, 35 ல் “நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள், பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர் மேலும் அது ஒரு கண்ணியைப் போல வரும்”
என்று இயேசு எச்சரித்திருப்பதால் அதற்கு நாம் ஆயத்தமாகி அவருடைய வருகைக்காகக் காத்திருப்போம் அப்படிப்பட்டவர்களை கிறிஸ்து வந்து தம்மோடு எடுத்துக்கொள்ளுவார் (ரோமர் 13 : 11, 1கொரிந்தியர் 7 : 29, 10 : 11, 15 : 51, 52, பிலிப்பியர் 4 : 5). நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மிக விரைவில் திரும்பி வந்து நம்மை இந்த உலகத்திலிருந்து எடுத்துக்கொண்டு, தம்மோடு என்றென்றும் இருக்கும்படியாக அழைத்துச் செல்வார் என்பது நம்முடைய நம்பிக்கையாகும். மீட்கப்பட்ட யாவருடைய நம்பிக்கையும் இதுவே (தீத்து 2 : 13).துன்பப்படும் விசுவாசிகளுக்கு ஆறுதலாளிக்கும் முக்கிய செய்தி இதுவாகும் (1தெசலோனிக்கேயர் 4 : 17, 18, 5 : 10).. ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…