பாவ உணர்வினால் பேதுரு வடித்த கண்ணீரைப் பற்றிப் பார்க்கலாம். இயேசு கைது செய்யப்பட்டு காய்பாவுக்கு முன்பாகக் கூட்டிச் செல்லப் பட்டார் (மத்தேயு 26:57). இந்தக் காய்பா என்பவன் ரோம அதிகாரத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரதான ஆசாரியன். இந்தக் காயப்பாதான் ஜனங்க ளுக்காக இயேசுவை சாகடிப்பது நலம் என்று ஆலோசனை சொன்னான் என்று யோவான் 18 : 14ல் கூறியதைப் பார்க்கிறோம். அவனுடைய மாமா வாகிய அன்னா என்பவன் மோசேயின் நியாயப்பிரமாணத்தின் வழியில் பிரதான ஆசாரியனாக இருந்தான். இயேசுவை முதன் முதலில் அன்னா என்பவனுக்கு முன்பாகக் கொண்டு போகப்பட்டார். அங்கு வேதபாதகரும் மூப்ப ரும் கூடி வந்திருந்தார்கள்.
பேதுரு மறுதலித்தது:
மத்தேயு 26 : 58 “பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைவரைக்கும் வந்து, உள்ளே பிரவேசித்து, முடிவைப்பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான்.”
பேதுருவும் இன்னுமொரு சீஷனும் இவைகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு தூரத்தில் சென்று கொண்டு இருந்தனர். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாக இருந்தபடியால் இயேசுவுடனேகூட பிரதான ஆசாரியனின் அரண்மனைக்குள் பிரவேசித்தான். யோவானைப் போல இயேசுவின் அருகே நிற்க வேண்டியவன் வெளியே நின்றான். இயேசுவுக்காக அங்கு நின்ற கூட்டத்தோடாவது நின்றிருக்க வேண்டும். தன்னை ஒப்படைப்பதற்குப் பதிலாகப் போராடினான். சாத்தான் அவனை மறுதலிப்பதற்காக வழிநடத்தப்பட்டான். பேதுரு முதலில்வாசலருகே வெளியே நின்று கொண்டிருந்தான். ஆனால் அவனோடு வந்த சீஷன் வாசல் காக்கிறவர்களுடன் பேசி பேதுருவை உள்ளே அழைத்துக் கொண்டு போனான் (யோவான்18:15,16). இயேசுவின் எதிரிகள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி அதைச் சுற்றி உட்கார்ந்திருந்தனர். அந்த இடத்தில் பேதுருவும் அவர்கள் நடுவிலே நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டு இயேசுவின் முடிவைப் பார்ப்பதற்காக உட்கார்ந்தான்.
அந்தச் சமயத்தில் இயேசுவை குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தார்கள். பேதுருவோ மிகப்பெரிய சோதனையின் நேரத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது அங்கே வேலை பார்க்கிற ஒரு வேலைக் காரி நெருப்பின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பேதுருவை உற்றுப் பார்த் தாள். அங்கு உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து இவன் கலிலேயனாகிய இயேசுவோடு கூட இருந்தவன் என்றாள். உடனே பேதுரு அவனை அறி யேன் என்று அவர்கள் எல்லோருக்கும் முன்பாக மறுதலித்தான். பேதுரு ஓரு தடவை இயேசுவைப் பார்த்து மத்தேயு 16:16 ல் “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று கூறியவன். அப்பொழுது இயேசு உடனே அவனிடம் மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப் படுத்தவில்லை பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப் படுத்தினார் என்று மத்தேயு 16:17 ல் கூறியிருப்பார். ஆனால் இப்பொழுது சாதாரண மனிதனைக் கூறுவது போல “அவனை எனக்குத் தெரியாது” என்று கூறியதைப் பார்க்கிறோம்.
இரண்டாவதாக அங்குள்ள வாசல் மண்டபத்திற்கு எழுந்து போனான். அங்கும் ஒருத்தி பேதுருவைக் கண்டு இவன் நசரேயனாகிய இயேசுவோடு கூட இருந்தவன் என்று அங்கிருந்தவர்களுக்கு முன்பாகக் கூறினாள். உடனே பேதுரு அந்த மனுஷனை நான் அறியேன் என்று ஆணையிட்டு, மறுபடியும் மறுதலித்தான். (மத்தேயு 26:72). இதில் மறுதலித்தது மட்டுமல்லாமல் ஆணையிட்டதையும் பார்க்கிறோம். சற்று நேரத்துக்குப் பின்பு வேறொருவன் பேதுருவைப் பார்த்து நீயும் கலிலேயன் தான் என்றான். பேதுரு அதிகமாகப் பேசி பிரச்சனைக்குள் மாட்டிக்கொள்கிறான். யூதேயா தேசத்து மக்களின் பேச்சு வழக்கத்தை விட கலிலேயா தேசத்து மக்களின் பேச்சு வழக்கு வித்தியாசமாக இருக்கும் அதனால் லெகுவாக அவனால் கண்டுபிடிக்க முடிந்தது. ஏனெனில் அவன் கலிலேயன் என்பதை அவனுடைய பேச்சு வெளிப்படுத்தி விட்டது. திரும்பவும் பேதுரு அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம் பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் கூவிற்று. சேவல் கூவினவுடன் இயேசு சிலுவையிலிருந்து பேதுருவைத் திரும்பிப்பார்த்தார்.
பேதுரு மனகசந்து அழுதது:
பேதுருவின் மறுதலித்தது அவனது வாழ்க்கையில் நிகழ்ந்த மிகப்பெரிய தோல்வியாகும். இயேசு தன்னுடைய சீஷர்களிடம் அன்று ராத்திரி தனக்கு நடக்கப் போவதைக் கூறினபோது பேதுரு உடனே அவரிடம் “உமது நிமித் தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன்” என்று இயேசுவிடம் தனக்குள்ள உறுதியான நம்பிக்கையை வெளிப்படு த்தினான் (மத்தேயு 26 : 33). அப்பொழுது இயேசு அவனிடம்,
மத்தேயு 26 : 34ல் “இயேசு அவனை நோக்கி: இந்த இராத்திரியிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.“
என்று கூறியதை நினைவுகூர்ந்து வெளியேபோய் மனங்கசந்து அழுதான். அந்த நேரத்தில் இயேசுவின் சீஷன் என்று சொல்வதற்குக்கூட வெட்கப் பட்டவனாக இருந்ததைப் பார்க்கிறோம்.அதற்குப் பேதுரு “நான் உம்மோடு மரிக்க வேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்க ம்மாட்டேன் என்று உறுதிமொழியளித்தார் (மத்தேயு26:35,மாற்கு14:31). அதேபோன்றே எல்லா சீஷர்களும் கூறினார்கள். இயேசு பேதுருவை முழுமையாக அறிந்திரு ந்தான். ஆனால் பேதுரு தன்னுடைய சொந்த பலவீனத்தையே அறியாத வனாயிருந்தான். பேதுரு அந்தப் பிரச்சனையிலிருந்து விலகிப் போயிரு ந்தால் அதுவே அவனுடைய வாழ்க்கையின் முடிவாயிருக்கும். யூதாஸ்கா ரியோத்து போல அவனுடைய வாழ்க்கையும் மாறிப்போயிருக்கும். அன்று பேதுரு தன்னைப் பற்றி என்ன கூறப்போகிறான் என்று இயேசு முன்னமே கூறியதைப் பார்க்கிறோம். இதற்கு முன்னே இயேசு லூக்கா 22 : 32 :ல் பேதுருவின் விசுவாசம் ஒழிந்து போகாதபடி அவனுக்காக வேண்டி யிருந்தார். அன்று அவன் தன்னுடைய சொந்த பலவீனத்தை அறிய வில்லை. அவன் அழுதது உண்மையான மனந்திரும்புதலின் கண்ணீர்.
இயேசுவோ பேதுருவை அதிகமாக நேசித்தார். அவன் முன்பு இயேசுவுக்கு உண்மையாயிருப்பேன் என்று வாக்குப் பண்ணியதை அறிந்திருந்தார். பேதுருவும் யூதாஸைப் போலத் தவறு செய்தவன்தான். ஒரேயொரு வித்தியாசம்தான்.யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுத்தான் பேதுருவோ இயேசுவை மறுதலித்தான். அந்த நேரத்தில் பேதுரு இருந்தது தவறான இடம். சோதனை வரக்கூடிய இடத்திலிருந்தான். என்றாலும் மனந்திரும்பி மீண்டும் இயேசுவின் ஐக்கியத்தில் இணைக்கப்பட்டு அவரை நேசித்தான். இயேசுவின் அன்பை விட்டுத் தூரம்போன யாரும் திரும்ப இயேசுவண்டை வரமுடியுமென்று இதிலிருந்து அறிகிறோம். இவ்வாறு பயந்திருந்த பேதுரு பின்னாட்களில் இயேசு கூறியபடி காத்திருந்து பெந்தேகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியைப் பெற்றபின் முதல் முதலாக தைரியமாக இயேசுவைக் குறித்துப் பேசி அந்த ஒரே பிரசங்கத்தில் 3000 பேரை மனந்திரும்பச் செய்ய இயேசுவானவர் அவனுக்குக் கிருபையளித்தார்.
கருத்து:
இயேசு பேதுருவிடம் முதலில் கூறியது “என் பின்னே வாருங்கள்” (மத் தேயு 4 : 19). இறுதியாகக் கூறியது “நீ என்னைய் பின்பற்றி வா” (யோவான் 21 : 22). பேதுரு இதற்கு முற்றிலும் கீழ்ப்படிந்தார். “எனக்குப் பின்னால் போ சாத்தானே” என்று இயேசு பேதுருவைப் பார்த்துக் கூறியும் இயேசுவை விட்டுப் போகாதவர். மல்குஸ் என்பவரின் காதை இயேசுவைப் பிடிக்க வந்த போது வெட்டியவர் பேதுருவே. இயேசுவின் சொல்லிற்குக் கீழ்ப் படிந்து வாளை உரையில் போட்டார். ஆலயவாசலில் அற்புதம் நடந்த வுடனும் பின்னரும் தைரியமாக மக்களிடமும், பிரதான ஆசாரியரிடமும், யூதத்தலைவர்களின் கூட்டத்திலும் இயேசுவை அவர்கள் கொலை செய்த தையும், இயேசு உயிர்த்தெழுந்ததையும் குறித்துத் தைரியமாகப் பேதுரு பேசினார். பாடுகளிடையே தொடர்ந்து ஊழியம் செய்தவர். சபைக்குத் தூணாக விளங்கி யூதரல்லாதவருக்கும் நற்செய்தியை எடுத்துச் சென்றார் (அப்போஸ்தலர் 10ம்அதிகாரம்). தடுமாறினாலும் தொடர்ந்து பின்சென்று இரத்தசாட்சியாக மரணமடைந்த பிரதான சீடன். பேதுரு கிறிஸ்துவைக் குறித்த சரியான விளக்கத்தை அளித்த முதல் மனிதர். இவருடைய நிழல் பட்டால் அற்புதசுகம் கிடைக்குமென்று கருதப்பட்டவர். மேலும் கர்த்தர் “இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன் என்றும் பரலோகத்தின் திறவுகோலையே அவனி டம் கொடுப்பேன்” என்றும் கூறியதைப் பார்க்கிறோம். அவரது வார்த்தை பேதுருவின் வாழ்வில் நிறைவேறியது. நாமும் நமது பாவங்களினால் இயேசுவை மறுதலித்தால், பின் மெய்யாக மனந்திரும்பினால் ஆண்டவர் நம்மை மன்னித்து அவருக்காகப் பயன்படுத்துவார். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…