சந்திரரோக வியாதி:
மத்தேயு 17: 14 – 16 “இயேசுவும் சீஷர்களும் ஜனங்களிடத்தில் வந்த போது, ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங் கால்படியிட்டு: ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திர ரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக் கடி ஜலத்திலும் விழுகிறான். அவனை உம்முடைய சீஷர்களிடத்தில் கொண்டுவந்தேன்; அவனைச் சொஸ்தமாக்க அவர்களால் கூடாமற் போயிற்று என்றான்.”
இயேசுவும் சீடர்களும் ஜனங்களிடம் வந்தபோது ஒரு மனுஷன் இயேசு விடம் வந்தான். அந்த மனிதன் மிகவும் தாழ்மையுடன் இயேசுவுக்கு முன் பாக முழங்கால்படியிட்டு தன்னுடைய கஷ்டத்தைக் கூறினான். தன்னு டைய மகன் சந்திரரோகத்தினால் கொடிய வேதனைக்குள்ளாக இருப்பதா கக் கூறினான். இவருடைய மகன் மனநிலை சரியில்லாதவனாய், வலிப்பு நோயினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அசுத்த ஆவியின் செயலும் அவனுக்குள் இருந்தது. அதனால் அவன் அடிக்கடி தீயிலும், ஜலத்திலும் போய் விழுந்து விடுவான். நெருப்பும், தண்ணீரும் இந்த ஆவிக்கு மிகவும் பிடிக்கும். பிசாசுகள் தாங்கள் படித்த மனிதனை அவல நிலைக்குத் தள்ளுகி ன்றன. இந்த மனிதன் தன்னுடைய மகனை குணமாக்க இயேசுவின் சீஷர்க ளிடம் கூட்டிச்சென்றான்.ஆனால் அந்த சீஷர்களுக்கு அந்த நோயைக் குண மாக்க முடியாமல் போயிற்று.
இயேசு சீஷர்களிடம் கோபமடைந்தார்:
மத்தேயு 17 : 17 “இயேசு …விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களி டத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றார்.”
மாற்கு 9 : 20 “அவனை இயேசுவினிடத்தில் கொண்டு வந்தார்கள். அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளி புரண்டான்.”
இயேசு சீஷர்களைப் பார்த்து “விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே” என்று கோபப்பட்டதைப் பார்க்கிறோம். ஏனெனில் இயேசு தம்முடைய சீஷ ர்களுக்குப் பிசாசுகளைத் துரத்தும் அதிகாரத்தை ஏற்கனவே கொடுத்திருந் தார். அவர்களிடம் அந்த விசுவாசம் இல்லாததாலும், அவர்களுடைய ஆவி க்குரிய நிலமையைப் பார்த்தும் கோபப்பட்டார். நோயாளியை இயேசுவி டம் கொண்டு வந்தனர். அசுத்த ஆவியானது இயேசுவைக் கண்டவுடன் அந்த நோயாளியை மிகவும் துன்பப்படுத்தியது. அவன் தரையில் விழுந்து புரண்டான். வாயில் நுரைதள்ளியது. மனநோயுற்றவர்களில் மூன்று வகை யினர் உண்டு 1.உண்மையாக மனநோயினால் பாதிக்கப்பட்டவர்கள். 2. பிசாசின் தொல்லையினால் மனநோயாளிகளைப் போல இருப்பவர்கள். 3. மனநோயோடு பிசாசின் தொல்லையும் சேர்ந்து இருப்பவர்கள். இவனுக்கு மனநோயோடு பிசாசின் தொல்லையும் சேர்ந்து இருந்ததால், அதுஅவனை அலைக்கழித்தது.
தகப்பனின் மன்றாட்டு:
மாற்கு9:21,22 “இயேசு அவனுடைய தகப்பனை நோக்கி: இது இவனு க்கு உண்டாகி எவ்வளவு காலம் ஆயிற்று என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயது முதற்கொண்டே உண்டாயிருக்கிறது; இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று. நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள் மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்றான்.”
இயேசு அந்த தகப்பனிடம் இந்த நோய் வந்த காலத்தை பற்றி விசாரித்த போது அவனுடைய சிறு வயதிலேயே இந்த வியாதி அவனை ஆட்கொண் டிருப்பதையும், அவனுக்குள் ஒரு ஆவி இருந்து அவனைக் கொல்வதற்குத் தீயிலும், தண்ணீரிலும் தள்ள முயற்சிப்பதையும், இயேசு அறிந்தார். அந்த தகப்பன் இயேசுவிடம் ‘எங்களுக்காக மனமிரங்கி ஏதாவது செய்யக்கூடு மானால் உதவி செய்ய வேண்டும்” என்று வேண்டினான்.
இயேசுவின் உபதேசம்:
மாற்கு 9 : 23, 24 “இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக் கூடுமா னால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவா சம் நீங்கும்படி உதவி செய்யும் என்று கண்ணீரோடு மிகுந்த சத்தமி ட்டுச் சொன்னான்.”
நீ விசுவாசிக்க கூடுமானால் ஆகும் என்று இயேசு கூறினார். லாசரு அடக் கம் பண்ணப்பட்டஇடத்திலும், இயேசு அவனது சகோதரிகளைப் பார்த்து யோவான்11:40ல் அவனை உயிரோடெழுப்பப்படப் போவதைப் பற்றி “நீ விசுவாசத்தால் தேவனுடைய மகிமையைக் காண் பாய்” என்றார். இயேசு இவ்வாறு கூறியதால் அந்தத் தகப்பன் விசுவாசத்தில் குறைந்திருப்பதை அவர் அறிந்திருந்ததைப் பார்க்கிறோம். உடனே அந்தத் தகப்பன் நான் விசு வாசிக்கிறேன் என்று கூறிவிட்டு, தன்னுடைய அவிசுவாசம் நீங்கும்படி வேண்டினான்.லூக்கா17:4ல் அப்போஸ்தலர்கள் இயேசுவிடம் தங்கள் விசு வாசத்தை வர்த்திக்கப்பண்ண வேண்டுமென்று வேண்டினர். இதேபோல் நாமும் நமக்குள் அவிசுவாசம் வரக் கூடாது என்று வேண்ட வேண்டும். நமக்குள் இருக்கிற அவிசுவாசம் நீங்குவதற்குத்தான் இயேசு தண்ணீரைத் திராட்சைரசமாக்கினார். 5அப்பம், 2 மீனைக் கொண்டு 5000 பேரை போஷித் தார். கடலின் மீது நடந்தார். பிசா சின் பிடியிலிருக்கிறவர்களையும், தீராத நோயினால் அவதிப் படுகிறவர்களையும் குணமாக்கினார். மரித்தோரை எழுப்பினார். இவ்வாறு வேதத்தில் இயேசு செய்தவைகளைப் படித்து நம்புகிற நாம், நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசு, நமது வாழ்க்கை யிலும், ஊழியத்திலும் அற்புதம் செய்வார் என்று விசுவாசிக்க வேண்டும்
இயேசு செய்த அற்புதம்:
மாற்கு 9 : 25, 26 “அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடி வருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடு மான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டுப் போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார். அப்பொழுது அது சத்தமிட்டு அவனை மிகவும் அலைக்கழித்து புறப்பட்டுப்போயிற்று. அவன் செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன் போல் கிடந்தான்.”
ஜனங்கள் கூட்டமாய்ப் பார்ப்பதற்காகக் கூடினர். இயேசு அசுத்த ஆவியை நோக்கி ஊமையும் செவிடுமான ஆவியே என்றழைத்து, இவனை விட்டுப் போ என்றும், இனி அவனுக்குள் போகக்கூடாது என்றும் கட்டளையிட் டதைப் பார்க்கிறோம். அப்பொழுது அந்த பிசாசு இயேசுவின் கட்டளைக்குக் கீழ்படிந்து மிகுந்த சத்தத்துடன் அவனை அலைக்களித்து அவனை விட்டு வெளியேறியது. அசுத்தஆவியானது அந்த மகனை விட்டுப் போனவுடன், அந்த மகன் செத்தவன் போலப் படுத்திருந்தான். இதேபோல் மாற்கு 1:25,26 ல் இயேசு ஜெபஆலயத்திலிருந்த அசுத்தஆவி பிடித்த மனுஷனை நோக்கி “நீபேசாமல்இவனை விட்டுப்போ என்று அதட்டினார்” உடனே அந்த அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து மிகுந்த சத்தமிட்டு அவனை விட்டுப் போய் விட்டது என்று பார்க்கிறோம்.
இயேசுவின் உபதேசம்:
மாற்கு 9 : 27, 28 “இயேசு அவன் கையைப் பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான். வீட்டில் அவர் பிரவே சித்தபொழுது, அவருடைய சீஷர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள்.”
மத்தேயு 17 : 20 “அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
இயேசு செத்தவன் போல் படுத்திருந்த அந்த மகனின் கையைப் பிடித்துத் தூக்கினார். அவன் எழுந்தான். லூக்கா 9 :42 ல் அவனை அவனுடைய தகப் பனிடத்தில் ஒப்படைத்ததைப் பார்க்கிறோம். அவருடைய சீஷர்கள் எங்க ளால் ஏன் அதை துரத்த முடியவில்லை என்று தனித்து போய் இயேசுவி டம் கேட்டனர்.அதற்குப்பதிலாக “உங்கள் அவிசுவாசத்தினால் தான்” என்று கூறினார். கடுகளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் மலையைப் பார்த்து அப்புறம் போ என்று கூறினாலும் அது போகும் என்றார். நம்மால் செய்ய முடியாதது ஒன்றுமில்லை என்று முற்றிலும் நம்ப வேண்டும். முழுமையான விசுவாசத்தோடு சொல்லும் பொழுது அதற்கு ஆற்றல் உண்டு. மேலும் பிசாசின் பிடியில் இருக்கிறவர்களுக்கும், நோயுற்றவர்க ளுக்கும் ஜெபிக்கும்போது ஆண்டவரே சுகம் தாரும், இந்தப் பிசாசைத் துரத் துமென்று கூறக்கூடாது. இயேசுவின் நாமத்தினால் கட்டளையிட வேண் டும். அப்பொழுது அவைகள் ஓடும். நாம் இயேசுவின் மீது நமக்குள்ள நம்பி க்கையை ஆழமாக்க வேண்டும். நமது விசுவாசத்தைத் துவங்குகிறவரும் முடிக்கிறவரும் கிறிஸ்துவே என்பதை உணரவேண்டும். அவருடைய நெருங்கிய பிரசன்னம் நம்மோடு இருப்பதும், அவரது வார்த்தைக்கு பூரண மாகக் கீழ்ப்படிவதும் தான் விசுவாசத்தின் ரகசியம்.
உபவாசம் பற்றி இயேசு:
மத்தேயு17 : 21 “இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினா லுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப் போகாது என்றார்.”
இயேசு ஜெபத்தினாலும், உபவாசத்தினாலும்தான் ஜாதிப்பிசாசுகள் போகும் என்று ஏன் கூறினாரென்றால், ஜெபமும் உபவாசமும் இணைந்து செயல் படும் போது தேவ வல்லமை அதிகரிக்கப்படுகிறது. உபவாசத்தின் போது தேவனுடைய சமூகத்தில் நம்மைத் தாழ்த்தி விழுந்து கிடக்கிறோம். அத னால் உள்ளான மனுஷனுக்குள்ளே தேவவல்லமையானது இறங்குகிறது. தேவனுடைய கிருபை வரங்களும் செயல்பட ஆரம்பிக்கிறது. நமக்குள் பர லோக அக்கினியை கொண்டு வருகிறது. அதன் மூலம்தான் நாம் பிசாசை எதிர்த்து நின்று துரத்த முடியும். சில பிசாசுகள் அதட்டினாலே ஓடும். சில பிசாசுகள் இயேசுவின் நாமத்தை சொல்லும் போது ஓடுகிறது. ஆனால் சில பிசாசின் கட்டுகள் ஒழிக்கப்பட வேண்டுமானால் உபவாசமும், ஜெபமும் மிகவும் அவசியம்
இயேசு கூட தன்னுடைய ஊழியத்தை ஆரம்பிக்கும்போது உபவாசத் தோடுதான் ஆரம்பித்தார். பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினால் நிரப் பப்பட்டார்.. பரலோக அக்கினியானது இயேசுவை நிரப்பியது. எனவேதான் இயேசு சாத்தான் கொண்டு வந்த எல்லா சோதனைகளையும் மேற்கொண் டார். சமயத்திற்கேற்ற வார்த்தையானது அவருடைய வாயிலிருந்து வந்து கொண்டிருந்தது. அந்த வார்த்தைகளால் சாத்தானை வீழ்த்தினார். இதைத் தான் சீடர்களுக்கும் உணர்த்தினார். இன்று முதல் நாமும் நம் ஜெபத்தோடு உபவாசத்தையும் கூட்டிக் கொள்ள வேண்டும். அப்பொழுது தேவனுடைய வல்லமையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஏனெனில் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் மட்டுமல்ல, துரைத்தனங்க ளோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதி களோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைக ளோடும் நமக்குப் போராட்டம் உண்டு என்று எபேசியர் 6: 12ல் பார்க்கி றோம். இங்கே ஜாதிப்பிசாசு என்று இயேசு கூறுவதைக் காண்கிறோம். பிசாசுகளுக்குள் கூட இந்த ஜாதி வித்தியாசம் இருக்கிறது என்று அறிகி றோம். கிறிஸ்தவ சபைக்குள் ஜாதி வித்தியாசம் இருப்பது பிசாசின் கிரி யைகளால் தான். இரத்தத்தால் மீட்கப்பட்ட ஜனங்கள் உபவாசத்தோடு ஜாதி வித்தியாசம் என்கிற இந்தப் பிசாசை எதிர்த்து நிற்கவேண்டும்.
இந்தத் தகப்பன் முதலில் இயேசுவை விசுவாசிக்க வேண்டியது எத்தனை முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டான். இரண்டாவதாக தனக்குள் இரு ப்பது எத்தனை குறைவான விசுவாசம் என்பதையும் உணர்ந்து ஒத்துக் கொண்டான். அதனால் தன்னுடைய அவிசுவாசம் நீங்க கண்ணீரோடு சத்த மிட்டு இயேசுவிடம் கதறியதைப் பார்க்கிறோம்.நாமும் இயேசுவோடு நமக் குள்ள விசுவாசத்தை அதிகரித்து அற்புதங்களைப் பெற்றுக்கொள்ள வேண் டும். இன்றைய நாட்களில் நம்முடைய ஜெபங்கள் அனைத்தும் இயேசு வின் நாமத்தினால்தான் கேட்கப்படுகிறது. இதைத்தான் யோவானில்,
யோவான் 16 : 23, 24 “………..மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவி னிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்க வில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவா யிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.”
என்றுள்ளது. இந்தத் தகப்பனுடைய அவிசுவாசம் நீங்கும்படி செய்த இயேசு நம்மிடமுள்ள வேண்டாத குணங்களையும் மாற்ற வல்லவர். எனவே உள் ளமுடைந்து கண்ணீரோடு இயேசுவிடம் கதறுவோம். நிச்சயமாக நன்மை யான பதிலை இயேசு தருவார். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…