பைபிள் வசனங்கள்

யோவான் 15 : 10 – John 15 : 10 in Tamil – அன்பிலே நிலைத்திருங்கள்

“நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்” (யோவான் 15:10).

ஆவியின் கனிகளிலே சிறந்த கனி அன்பு என்கிற கனியாகும். “ஆவியின் கனியோ அன்பு” என்றுதான் ஆரம்பிக்கிறது (கலா. 5:22). இந்தத் தூய்மையான அன்பை இயேசுகிறிஸ்துவிலே நீங்கள் காணலாம். தன்னையே சிலுவையில் அர்ப்பணித்து இவ்வளவாய் உலகத்திலே அன்புகூர்ந்தார் (யோவான் 3:16). ஆகவே, இந்த தெய்வீக அன்பிலே நிலைத்திருங்கள்.

இயேசுகிறிஸ்துவுடைய அன்பு தியாகமான அன்பு. தம்மண்டை வருகிற ஒருவரையும் தள்ளாத அன்பு. உங்களைத் தேடி ஓடி வந்த அன்பு. உளையான சேற்றிலிருந்து தூக்கியெடுத்த அன்பு. உங்களை அரவணைத்த அன்பு. உங்களை முடிவு பரியந்தம் நேசிக்கும் அன்பு. பரிசுத்த ஆவியினாலே தேவனுடைய அன்பு உங்களுக்குள் ஊற்றப்பட்டிருக்கிறதே (ரோமர் 5:5).

அன்பு இல்லாவிட்டால் ஆவியின் வரங்களினால் பிரயோஜனமில்லை. அப். பவுல் சொல்லுகிறார், “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை ” (1 கொரி. 13:1,2). ஆகவே, அன்பிலே நிலைத்திருங்கள்.

அன்பில்லாத ஊழியம் மாய்மாலமான ஊழியம். அன்பில்லாத உள்ளம் வெறுமையான உள்ளம். தேவனுடைய பிள்ளைகளே, கடைசி நாட்களில் “அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்து போம்” (மத். 24:12). உங்கள் அன்பு தணிந்து போகாமல், குறைந்து போகாமல் எப்பொழுதும் அந்த தெய்வீக அன்பை அனல்மூட்டி எழுப்புங்கள்.

“நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித் தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது. திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ண ப்படும்” (உன். 8:6,7).

அன்புக்கு இலக்கணம் வகுத்தவர் இயேசுதான். அவரிலேதான் பூரண அன்பைக் காண முடியும். “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணு கிறார்” (ரோமர் 5:8). அந்த அன்பு உங்கள் அன்பைக் கேட்கிறது.

இயேசுகிறிஸ்துவினுடைய பார்வை, வார்த்தைகள், செயல்கள், உபதேசங்கள் எல்லாவற்றிலுமே அன்பைக் காணலாம், மனதுருக்கத்தைக் காணலாம். எல்லாவற்றுக்கும் மேல் கல்வாரிச் சிலுவையிலே அவரிடம் இருந்து வெளிப்பட்ட அன்பின் பெருவெள்ளம் உள்ளத்தைக் கொள்ளைக்கொள்கிறது. அன்பிலே நிலைத்திருங்கள்.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago