லூக்கா 19 : 41 “அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,”

இயேசு எருசலேவுக்கு சமீபமாக வந்தபோது அந்த நகரத்தைப் பார்த்துக் கண்ணீர் விட்டார். எருசலேம் இஸ்ரவேல் தேசத்தின் தலைநகராய் விளங்கியது. எத்தனையோ ராஜாக்கள் அரசாண்டும், அநேக ஆசாரியர் களும், தீர்க்கதரிசிகளும் இருந்தாலும், அந்தப் பட்டணம் இயேசுதான் மேசியா என்று அறியவில்லை. ஜனக்கூட்டத்தார் மேசியா இஸ்ரவேல் தேசத்தை மீட்டுக்கொண்டு தேசங்களை அரசாளுவார் என்று நம்பினார் கள். இயேசுதான் அந்த மேசியா என்பதை நம்ப மறுத்து விட்டனர். ஜனங் களும் அவர்களுடைய தலைவர்களும் தங்களுக்கு உலகப்பிரகாரமான இராஜ்ஜியத்தை ஆளும் அரசியல்ரீதியான மேசியாவைப் பார்க்கிறார்கள் என்பதை இயேசு உணர்ந்தார். எனவே இயேசு தன்னைத் தேவனால் வாக்கு த்தத்தம் செய்யப்பட்ட மேசியா என்பதை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணி த்து விடுவர் என்பதையும் உணர்ந்தார். அதற்காக எருசலேம் நகர மக்கள் அனுபவிக்கப் போகும் பயங்கரமான ஆக்கினைத் தீர்ப்பை நினைத்து இயேசு கண்ணீர் விட்டார். ஜனங்கள் மனந்திரும்ப மறுத்ததற்காகவும், இரட்சிப்பை ஏற்றுக் கொள்ளாததற்காகவும், மனங்கலங்கி கண்ணீர் விட் டார். 40ஆண்டுகளுக்குப் பின் நடக்கப்போவதை அறிந்து கண்ணீர் விட்டார். 

இயேசு நினைத்ததைப்போல கி. பி 70 ல் எருசலேமை ரோமர்கள் முற்று கையிட்டனர். தளபதியான தீத்துவின் சேனை எருசலேமிற்குள் நுழைந் தது. இலட்சக்கணக்கானவர் பட்டினியால் இறந்தனர். இறந்தவர்களின் சட லங்கள் மதிலுக்கு வெளியே எறியப்பட்டன. ஒருலட்சம் பேர் சிலுவை யில் அறையப்பட்டனர். சுமார் ஒரு லட்சம் பேர் அடிமைகளாக விற்கப் பட்டனர். ஒரு சிலர் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். பதினொரு லட்சத்துக் கும் மேலான யூதர்கள் மடிந்தனர். தீத்துவினால் எருசலேம் கைப்பற்றப் பட்டது. யூதன் ஒருவனும் எருசலேமில் நுழையக் கூடாதென்று தீத்து கட் டளை பிறப்பித்தான். அங்குள்ளதேவாலயம் சுட்டெரிக்கப்பட்டது. கிறிஸ்து தீர்க்கதரிசனம் உரைத்தபடி அங்குள்ள தேவாலயத்தை ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடி செய்தனர். மீகா தீர்க்கதரிசி தீர்க்கதரிசனமாக மீகா3:2 ல் சீயோன் வயல்வெளியைப் போல் உழப்படும் என்றார். அது நிறைவேறும் படியாக டொன்டியஸ் கபஸ் என்ற இராணுவ அதிகாரி தேவாலய அஸ்தி பாரத்தைக் கலப்பையினால் உழுதார். இதில் “உன்னை சந்திக்கும் கால த்தை அறியாமற் போனாயே” என்று சொல்லிக் கண்ணீர் விட்டார். இதைத்தான், 

ஏசாயா 22 : 4ல் “ஆகையால், என்னை நோக்கிப் பாராதேயுங்கள்; என் ஜனமாகிய குமாரத்தி பாழாய்ப்போனதினிமித்தம் மனங்கசந்து அழுவேன்; எனக்கு ஆறுதல் சொல்ல வராதேயுங்கள் என்கிறேன்.” என்கிறார்.

எனவே இயேசுவின் வருகையை அறிந்து அதற்கு நமது வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுக்க முயலவேண்டும். (யோனா 4 : 11). மொர்தெகாய் எஸ்தரைப் பார்த்து “நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால் யூதருக்கு சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும் என்று எச்ச ரித்ததை எஸ்தர் 4:14 ல்பார்க்கிறோம். அதேபோல் சோதோம் கொமோரா பட்டணத்திற்காகவும் கர்த்தர் பரிதபித்தார். அங்கு ஐம்பதுநீதிமான்கள் இரு ந்தால் அவர்கள் நிமித்தம் அந்தப் பட்டணம் முழுவதையும் இரட்சிப்பேன் என்றும், பத்து நீதிமான்களிருந்தால் அவர்களின் நிமித்தம் அந்தப் பட்டண த்தை அழிப்பதில்லை என்று ஆபிரகாமிடம் கூறியதை ஆதியாகாமம் 18 : 28–32 ல் பார்க்கிறோம். .நினிவே பட்டணத்திலிருந்த லட்சத்து இருபதினா யிரம் பேருக்காகவும், அங்குள்ள மிருக ஜீவன்களுக்காகவும் பரிதபித்ததை யோனா4:11 ல் பார்க்கிறோம். இயேசு லூக்காவில் எருசலேமைப் பற்றிக் கூறும்போது, 

லூக்கா 13 : 34, 35 “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிற வளே! கோழி தன் குஞ்சுகளைத் தன்சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லா மற்போயிற்று.” 

“இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்; கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுங்காலம் வருமளவும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.” 

மத்தேயு 27 : 25ல் பிலாத்து ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி இயேசுவின் இரத்தப்பழிக்குத் தான் குற்றமற்றவன் என்று கூறியதைக் கேட்ட ஜனங்கள் அவர்களின் கோபம், வெறுப்பு, பொறாமை ஆகியவற்றின் உச்சகட்டமாக இயேசுவின் இரத்தப்பழியை தங்கள் மீதும், தங்கள் பரம்ப ரையின் மீதும் தாங்களாகவே ஏற்றுக்கொண்டனர். அதன் விளைவை யூதர் கள் இன்றுவரை அனுபவித்து வருகின்றனர். ஆமென்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago