இயேசு கலிலேயாக் கடலருகே உள்ள ஒரு மலையின் மேலேறி உட்கார்ந்தார். அங்கு சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலான திரளான ஜனங்கள் இயேசுவைப் பார்க்கக் கூடி வந்த போது இயேசு தமது சீஷர்களைப் பார்த்து “மூன்று நாளாய் இவர்கள் சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்களே இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை வழியில் சோர்ந்து போவார்களே” என்றார். இந்த வார்த்தைகளிலிருந்து இயேசு ஜனங்களின் மீது எத்தனை அக்கறையுள்ளவர் என்பதை அறிகிறோம்.
இயேசுவின் வார்த்தைகளைக் கேட்ட சீஷர்கள் ”இத்தனை திரளான
ஜனங்களுக்கு வேண்டிய அப்பங்கள் இந்த வனாந்தரத்தில் எப்படி கிடைக்கும் என்றனர். ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் இயேசு ஐயாயிரம் பேருக்குப் போஷித்ததை பார்த்தும் சீஷர்கள் அதை மறந்து முடியாது என்கின்றனர். நாமும் இதேபோல் தான் சில சமயங்களில் கலங்குகிறோம். இயேசு அவர்களிடம் “உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்றார்.” சீஷர்கள் ஏழு அப்பங்களும், சில சிறு மீன்களும் உண்டு என்றனர்.
அப்பொழுது இயேசு ஜனங்களைப் பந்தியிருக்கக் கட்டளையிட்டார். இதில்
இயேசு அற்புதங்களைச் செய்யும் பொழுது ஒழுங்கைக் கடைப்பிடித்ததைப் பார்க்கிறோம். அவர்கள் கையிலிருந்த ஏழு அப்பங்களையும், சில சிறு மீன்களையும் இயேசு எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி பிட்டு சீஷர்களிடத்தில் கொடுத்தார். சீஷர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள். எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தத பின்பு மீதியான துணிக்கைகளை ஏழு கூடை நிறைய எடுத்தார்கள்.
ஸ்திரீகளும், பிள்ளைகளும் தவிர சாப்பிட்ட புருஷர் நாலாயிரம் பேர். தேவன் எதையும் குறைவாகக் கொடுப்பவரல்ல. நாம் திருப்தியாகும் அளவிற்கு நன்மையானவைளைத் தருவார். சங் 17 : 15, 22 : 26, 36 :8, 37 : 19, 65 : 4, 81 : 16, 103 : 5, 107 : 8, 132 : 15 இதில் உலகமனைத்தையும் வார்த்தையால் படைத்த ஆண்டவர் சமைத்த ஆகாரத்தையும் படைத்ததைக் காண்கிறோம். நம்மிடம் உள்ள பொருட்களை மட்டுமல்ல, நமது நோக்கத்தையும், நமது தாலந்துகளையும் தேவனுக்கென்று அர்ப்பணிப்போம்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…