“முந்தினவைகளை நினைக்க வேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்” என்று சொல்லுகிறார் (ஏசாயா 43:18, 19).
“ஒருநாள், கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஈசாயைப் பலிவிருந்துக்கு அழைப்பாயாக; அப்பொழுது நீ செய்யவேண்டியதை நான் உனக்கு அறிவிப்பேன்; நான் உனக்குச் சொல்லுகிறவனை எனக்காக அபிஷேகம்பண்ணுவாயாக என்றார்” (1 சாமுவேல்.16:3). சாமுவேல் தைலக்கொம்பை அபிஷேக தைலத்தால் நிரப்பிக் கொண்டு பெத்லகேமில் உள்ள ஈசாயின் வீட்டுக்கு வந்தார். அந்தப் பட்டணத்தின் மூப்பர்களும் தங்களைப் பரிசுத்தம் பண்ணிக் கொண்டு பலிவிருந்துக்கு வந்திருந்தார்கள். ஈசாய் தன்னுடைய ஏழு குமாரரையும் பரிசுத்தம்பண்ணி பலிவிருந்துக்கு அழைத்தார். ஆனால் கர்த்தரோ அந்த ஏழுபேரையும் தெரிந்து கொள்ளவில்லை. ஆகவே, சாமுவேல் உன் பிள்ளைகள் இவ்வளவு தானா என்று கேட்டார். அதற்கு ஈசாய் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான். அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றார்.
ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தபோது, கர்த்தர் சாமுவேலோடு இவன்தான், நீ எழுந்து இவனை எனக்காக அபிஷேகம்பண்ணு என்றார். “அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள்முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்” (1 சாமு.16:13).
ஆச்சரியமான அபிஷேகம்! அற்புதமான திருப்புமுனை! தாவீது தன் குடும்பத்தில் அற்பமாய் எண்ணப்பட்ட போதிலும் கர்த்தரைத் தன் மேய்ப்பராகக் கொண்டிருந்தார். மற்ற சகோதரர்கள் எல்லாம் இராணுவத்தில் பெரிய அதிகாரிகளாய் விளங்கினபோது தாவீதோ வனாந்தரத்திலே ஆடுகளை மேய்த்து “என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?” என்று பாடிக் கர்த்தரைத் துதித்துக் கொண்டிருந்தார்.
தாவீது தன் சகோதரர்களுக்கு முன்பாக அபிஷேகம்பண்ணப்பட்டார். சத்துருக்களுக்கு முன்பாக அபிஷேகம்பண்ணப்பட்டார். இஸ்ரவேல் சபைக்கு முன்பாக அபிஷேகம்பண்ணப்பட்டார். அதைக் குறித்து தாவீது சொல்லும் போது, “என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப் படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது” என்றார் (சங்.23:5).
“என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுகிறேன்” (சங்.92:10), தாவீதின்மேல் இருந்த அபிஷேகம் படிப்படியாக அவரை உயர்த்திற்று. யுத்தங்களில் ஜெயத்தைத் தந்தது. “மேன்மையாய் உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப் பாடின ஈசாயின் குமாரனாகிய தாவீது” என்று தேவன் சொல்லுகிறார் (2 சாமு.23:1).
ஒருவேளை உங்களை நீங்கள் தாழ்வாக எண்ணிக் கொண்டிருக்கலாம். மற்றவர்களால் அசட்டை பண்ணப்பட்டு பிரயோஜனமற்றவன் என்று புறக்கணிக்கப்பட்டிருக்கலாம். கர்த்தரோ உங்களை மகிமையாய் உயர்த்துவதற்கு வல்லமையுள்ளவர். கர்த்தர் உங்களைப் பார்த்து: “முந்தினவைகளை நினைக்க வேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்” என்று சொல்லுகிறார்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…