“சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்குட்படுத்தினதுண்டோவென்று, உங்கள் விசுவாசத்தை அறியும்படிக்கு…” (1 தெசலோனிக்கேயர் 3:5).
சாத்தானுடைய ஒரு பெயர், “சோதனைக்காரன்” என்பதாகும். அவன் சோதிக்காத நபரே இல்லை. எல்லாப் பரிசுத்தவான்களையும் அவன் சோதித்து இருக்கிறான். இயேசுகிறிஸ்துவையே அவன் சோதித்தான் அல்லவா? இன்றைக்கும் தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக சோதனைக் கண்ணிகளை வைக்கிறான். வலைகளை விரிக்கிறான். சோதனைக்குட்படுத்தி ஆவிக்குரிய சந்தோஷத்தை கெடுக்க நினைக்கிறான். அவனுடைய வலையில் வீழ்கிறவர்கள் ஆத்துமாவை கறைப்படுத்திவிடுகிறார்கள்.
கர்த்தருடைய ஜெபத்திலே, “எங்களை சோதனைக்குட்பிரவேசிக்காமல் தீமையினின்று இரட்சித்துக்கொள்ளும்” என்று இயேசுகிறிஸ்து ஜெபிக்கக் கற்றுக் கொடுத்தார். சாத்தானுடைய சோதனையை வெல்லும்பொழுது அது சாதனையாகிறது. சோதனையில் விழும்போது அது வேதனையாகிறது. ஆனால் நீங்களோ கர்த்தருடைய பெலத்தினால் வெற்றிபெற அழைக்கப்பட்டவர்கள் உங்களுக்குப் பரிபூரணமான ஜெயத்தைத் தரும்படி கர்த்தர் எப்போதும் உங்கள் பட்சத்தில் நிற்கிறார். பரிபூரண வெற்றியே உங்களைக் குறித்து தேவன் கொண்டிருக்கிற தேவ சித்தமாகும்.
ஒரு மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு கிறிஸ்துவை நேசிக்க வேண்டுமென்று நினைக்கிறானோ எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாய் ஊழியம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறானோ பரிசுத்த ஜீவியத்தில் முன்னேற வேண்டுமென்று விரும்புகிறானோ அவனையே சாத்தான் அதிகமாய் சோதிக்கிறான். ஆகவே சோதனையை தேவ பெலத்தோடு எதிர்நின்று வெற்றிபெற தீர்மானம் செய்யுங்கள். சோதனைக் கண்டு பயந்து நடுங்கி கோழை சத்தம் போடாதிருங்கள்.
அப்போஸ்தலனாகிய பவுல் சோதிக்கப்படுகிறவர்களை சோர்ந்து போகாமல் உற்சாகப்படுத்தும்படி ஒரு உண்மையான சத்தியத்தை எழுதுகிறார். “மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக சோதனையோடு கூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1 கொரி. 10:13).
சிலுவையின்றி சிங்காசனம் இல்லை. போரின்றி வெற்றியில்லை. அது போலவே சோாதனையில்லாமல் மகிமையான ஆசீர்வாதங்கள் இல்லை. அப்போஸ்தலனாகிய யாக்கோபு எழுதுகிறார், “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்” (யாக். 1:12). அழிந்து போகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப் பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்” (1பேது.1:7). “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும் போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” (யாக்.1:2,3).
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…