யோவான் 6 : 48 “ஜீவ அப்பம் நானே.”

யோவான் 6 : 35 “இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத் தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.”

யோவான் தன்னுடைய சுவிசேஷத்தின்7 இடங்களில் “நானே”இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று இயேசுகிறிஸ்து தன்னைக் குறித்துப் பேசுவதை சுட்டிக் காட்டியிருக்கிறார். இதில் “ஜீவஅப்பம் நானே” என்று இயேசு கூறியதன் விளக் கத்தைப் பார்க்கலாம். இயேசு தன் ஜீவனைக் கொடுத்து சரீரத்தைப் பிட்டு நமக்குத் தந்த படியால் ஜீவஅப்பம். மரித்துக் கிடக்கிற ஆத்துமாவை உயிர்ப்பித்து ஆத்து மாவிலே ஜீவனைக்கொண்டு வருகிறபடியால் இயேசு ஜீவஅப்பம். கிறிஸ்துவின் ஜீவன் நம்மில் காணப்படும்படி நாம் நித்திய நித்திய காலமாய் மகிழ்ந்திருக்கு ம்படி நித்தியஜீவனை நமக்குள் கொண்டு வருகிறபடியால் இயேசு ஜீவஅப்பம். யோவான் சுவிசேஷத்தின் மொத்தம் நான்கு இடங்களில் கிறிஸ்து “அப்பம்” என்று குறிப்பிடுகிறார் (6 : 35, 41, 48, 51).அந்த அப்பத்தை எல்லோரும் புசிக்க வேண்டுமெ ன்றும் (யோவான் 6 : 50), தன்னுடைய மாம்சமே அப்பம் என்றும் இயேசு கூறுகிறார் (யோவான் 6 : 51). ஜீவஅப்பமான இயேசுவோடு கூட தொடர்புடைய வசனங்களைப் பார்க்கலாம்.

1) வானத்தின் அப்பமும் ஜீவஅப்பமும்:

இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தில் சாப்பிட்டதைப் போல வனாந்தரத்தில் அப்ப மில்லையென மோசேயிடம் முறுமுறுத்தனர் (எண்ணாகமம் 11 : 4 – 10). அது கொத்தமல்லி அளவான சிறிய உருண்டையாகவும் வெண்மையான நிறம் உடை யதாகவும் தேனிட்டபணியாரத்தைப் போன்ற ருசி உடையதாகவும் இருந்தது. அதைப் பார்த்த ஜனங்கள் மோசேயிடம் அது என்னது என்று கேட்டனர். அதற்கு மோசே “கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக் கொடுத்த அப்பம்” என்றார். இந்த மன்னா கிறிஸ்துவுக்கு முன் நிழலாக, மாதிரியாக அமைந்தது. பழைய ஏற்பாட்டில் பிதா வானத்திலிருந்து ஜனங்களின் பசியைப் போக்க மன்னனாகிய அப்பத்தைப் பொழி யப் பண்ணினார். புதிய ஏற்பாட்டில் பிதா உலக ஜனங்களை இரட்சிக்க ஆவிக் குரிய பசியைத் தீர்க்க ஜீவஅப்பமான இயேசுவை வானத்திலிருந்து அனுப்பிக் கொடுத்தார். 

ஜனங்கள் மன்னாவை உண்டதினால் திருப்தியானார்கள். கிறிஸ்து திருப்தியான வாழ்வை, நம் ஒவ்வொருவருக்கும் தருகிறார். மன்னாவாகிய ஜீவஅப்பத்தின் சத் துவம் அவர்களது சரீரத்தின் எல்லா தேவைகளையும் சந்திக்கப் போதுமானதாக இருந்தது. ஜனங்களின் உலக வாழ்க்கையில் உலகப்பிரகாரமான எல்லாத் தேவைகளையும் சந்திப்பதற்கு, இயேசுவாகிய ஜீவஅப்பம் போதுமானவைராக இருக்கிறார். மன்னா சிறிய வஸ்துவாக இருந்ததைப் போல இயேசுவானவர் தேவ தூதரிலிலும் சிறியவராக உலகத்திற்கு அனுப்பப்பட்டார். வெண்மை நிறம் தூய்மைக்கு அடையாளம். மன்னா தூய்மையாக இருந்தது. இயேசுவைப் போல் பரிசுத்தமானவர் யாருமில்லை. மன்னாவைப் பல வகைகளில் உபயோகப்படுத்தி தங்கள் பசியைப் போக்கி இஸ்ரவேலர் சந்தோஷப்பட்டனர். நாமும் இயேசு வண்டை செல்லும் போது நம்முடைய அன்றாடத் தேவைகளைக் கொடுத்து சந்தோஷப்படுத்துகிறார் (யாத்திராகமம் 16 : 13 – 15, 31). 

யோவான் 6 : 31 – 33ல் மோசே இஸ்ரவேல் ஜனங்களுக்கு மன்னாவைக் கொடுத் தார் என்று ஜனங்கள் கூறினார்கள். உண்மையிலே மன்னாவைக் கொடுத்தது மோசே அல்ல. தேவனே அதை அவர்களுக்குக் கொடுத்தாரென்று இயேசு தன்னு டைய வாயால் கூறினார். அந்த மன்னா 40 வருடங்களும் அவர்களுக்கு வேண் டிய மட்டும் கர்த்தர் விடாமல் கொடுத்தார். அந்த மன்னா பிதா இஸ்ரவேல் ஜனங் களுக்குக் கொடுத்த வெகுமதி. இயேசுவாகிய ஜீவ அப்பத்தைப் பிதா உலக மக்கள் அனைவருக்காகவும் அனுப்பினார். யோவான் 6 : 41 ல் இயேசு “நான் வானத்திலி ருந்து வந்த அப்பம்” என்று கூறியதால் யூதர்கள் முறுமுறுத்தனர். இயேசு மகிமை நிறைந்த பரலோகத்தை விட்டு தாழ்மையாக இந்தப் பூமிக்கு வந்தார். பரம சிங்கா சனத்தை விட்டெழுந்து நமக்காகக் கல்வாரி சிலுவையில் தன்னையே அர்ப்பணி த்தார். அந்த இயேசுவை நாம் ஏற்றுக் கொள்ளும் போது நாம் இரட்சிக்கப் படுவோம். 

யோவான் 6 : 33 “வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார்.”

உடனே சீஷர்கள் அந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தர வேண்டு மென்றனர். இயேசு அதற்கு, 

யோவான் 6 : 35 “இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத் தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.” என்று பதிலளித்தார்.

இதில் இயேசு ஆவிக்குரிய பசியையும், தாக்கத்தையும் குறித்துப் பேசுகிறார். 

2) ஜீவத்தண்ணீரும், ஜீவ அப்பமும்:

இயேசு சமாரியாவிலுள்ள சீகார் என்ற ஊருக்கு வந்து, அங்குள்ள யாக்கோபின் கிணற்றினருகே களைப்படைந்தவராய் உட்கார்ந்தார். அங்கு சமாரிய ஸ்திரீ ஒரு த்தி தண்ணீர்மொள்ள வந்தாள். அவளிடம் இயேசு தன்னுடைய தாகத்துக்குத் தண்ணீர் கேட்டார். அதற்கு அவள் “நீர் யூதனாயிருக்கிறீர், சமாரிய ஸ்திரீயாகிய என்னிடம் எவ்வாறு தாகத்துக்குத் தண்ணீர் கேட்கலாம்” என்றாள். அதற்கு இயேசு “என்னை யாரென்று நீ அறிந்திருந்தால் நீயே என்னிடத்தில் கேட்டிருப்பாய்” என்று கூறி “நானே உனக்குத் தண்ணீரையல்ல ஜீவத்தண்ணீரைத் தந்திருப்பேன்” என் றார். உடனே அவள் தான் தாகமடையாமலும், மொண்டு கொள்ள வராமலுமிரு க்க அந்தத் தண்ணீரைத் தருமாறு கேட்டாள் (யோவான் 4 : 8 – 26). அவளுடைய அந்த எண்ணத்தை மாற்றி ஆவிக்குரிய தண்ணீரைக் குறித்து அவளை சிந்திக்க வைக்க இயேசுவுக்கு சிறிது நேரமானது. சமாரிய ஸ்திரீ முதலில் இயேசுவை யூதராகக் காண்கிறாள் (யோவான் 4 : 9). பின்பு தீர்க்கதரிசியாகக் காண்கிறாள் (யோவான் 4 : 19). இறுதியாக அவள் கிறிஸ்துவை மேசியாவாக அறிந்து கொள்கிறாள் (யோவான் 4 : 25). 

ஜீவ அப்பமென்பதும் யோவான் 4 : 10, 11 ல் கிறிஸ்து குறிப்பிடும் ஜீவத் தண்ணீர் என்பதும் ஒன்றுதான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அந்த அப்பத் தைப் புசிப்பதும், இந்தத் தண்ணீரைப் பானம் பண்ணுவதும் ஒரு மனிதன் இயற் கையின் மேல் வைக்கும் விசுவாசத்தையே குறிப்பிடு கிறது. ஆகாரத்தையும், தண்ணீரையும் நாம் நம்முடைய சரீரத்தில் நம்முடைய வாய் வழியாக வயிற் றில் ஏற்றுக்கொள்வது போல விசுவாசத்தினால் ஆண்டவராகிய இயேசுவை நம்முடைய இருதயத்தில் ஏற்றுக் கொள்கிறோம். . நாமும் இப்படிப்பட்ட உலகப் பிரகாரமான சிந்தனையிலிருந்து வெளியே வந்து ஆவிக்குரிய சிந்தனையில் அமிழ வேண்டும். பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பெற்றவர்களின் உள்ள த்திலிருந்து ஜீவத் தண்ணீரிலுள்ள நதிகள் ஓடும் (யோவான் 7 : 37, 38). அவர்கள் தாகமடைய மாட்டார்கள். ஆவியானவர் அவர்களுடைய பிரச்சனைகள் யாவற் றையும் தீர்ப்பார். அவரில் நிலைத்திருக்கிற ஒவ்வொருவரும் பரலோகத்தில் சேருவார்கள். அங்கிருப்போருக்குப் பசியும் தாகமுமில்லை. எனவே ஆவிக்கு ரிய ஜீவனுக்கு ஊட்டமளிப்பவர் ஜீவ அப்பமான இயேசுவே. . 

3) ஜீவ வார்த்தையும் ஜீவஅப்பமும்:

இயேசு மத்தேயு 4 : 4ல் “அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.”

இதில் இயேசு அப்பத்தை வார்த்தையோடு தொடர்பு படுத்திக் கூறியுள்ளார். எனவே நாம் இயேசுவுக்குள் நிலைத்திருந்து அவருடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டு அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதால் இரட்சிக்கப் படுகிறோம். கிறிஸ்துவிலும், அவருடைய வார்த்தையிலும் ஐக்கியம் கொண்டால் ஆவிக்கு ரிய வாழ்க்கையில் நிலைத்திருப்போம். எனவே இந்த ஜீவஅப்பம் இந்த உலகத் துக்குரியதல்ல. இது இயேசு அருளும் இரட்சிப்பு. அதனால் நமது ஆத்துமா சமா தானத்தினால் திருப்தியடைகிறது. அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தி னாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப் பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.“

எபிரேயர் 4 : 12 “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத் திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்க ளையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக் கிறதாயும் இருக்கிறது.

இதில் தேவனுடைய வார்த்தையின் மகத்துவங்களைக் காண்கிறோம். 

வார்த்தை ஜீவனும் வல்லமையும் உள்ளது:

வார்த்தையானது உயிருள்ளதாக, வல்லமையுள்ளதாக இருப்பதால் அதை வாசிக் கிறவர்களின் வாழ்க்கையில் அது செயல்படுகிறது. அவர்களின் நற்குணங்கள், தீய குணங்கள், பாவங்கள் ஆகியவற்றை அவர்களுக்குத் தெளிவாகக் காட்டு கிறது. ஜீவனுள்ளது என்றால் பரிசுத்தம், நீதி, சர்வ வல்லமை, இரக்கம், கிருபை, சத்தியம், சர்வ ஞானம் அனைத்தையும் அடங்கியுள்ளது. பழைய ஏற்பாடு எரேமியா 10 : 10 ல் கர்த்தர் ஜீவனுள்ளவர் என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் புதிய ஏற்பாட்டில் வார்த்தையே ஜீவனுள்ளது. தேவனுக்குள்ளிருக்கிற ஜீவன் வார்த்தைக்குள்ளும் இருக்கிறது. தேவனையும் வார்த்தையையும் பிரிக்க முடியாது. தேவன் செயல்படுவதைப் போல வார்த்தையும் செயல்படும். அதனால்தான் யோவான், 

யோவான் 1 : 1ல் “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.”

தேவனுடைய வார்த்தையில் இயேசு இருப்பதால்,அது ஜீவ வார்த்தை எனப்படு கிறது. அந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ளுகிறவன் ஜீவனையுடையவன் (யோவான் 3 : 36). அவன் அந்த ஜீவனுள்ள வார்த்தையினால் பிழைப்பான் (மத் தேயு 4:4). வார்த்தை வல்லமையுள்ளதென்றால் பெலனுள்ளதாக, ஜெயமுள்ள தாக இருக்கிறது (லூக்கா10 :19) என்று பொருள். இந்த வல்லமையுள்ள வார்த்தை சாத்தானின் வல்லமைகளை மேற்கொள்ள உதவி செய்கிறது. 

வார்த்தை எந்தப் பட்டயத்தாலும் கருக்கானது:

கருக்குள்ள இந்தப் பட்டயம் சீக்கிரம் மழுங்கிப் போகும். ஆனால் தேவனுடைய வார்த்தையென்னும் பட்டயம் (எபேசியர் 6 : 17) ஒரு போதும் மழுங்காது. அதற்குக் காரணம் அது ஆவிக்குரிய பட்டயம். இந்தப் பட்டயம் தான் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்யாமல் திரும்பாது (ஏசாயா 55 : 11). இது ஜீவனைக் கொல் லவும், உயிர்பிக்கவும் வல்லமையுள்ளது. சுவிசேஷத்தைக் கேட்கும் ஒரு மனித னின் பாவம் அந்த மனிதனைக் கொல்கிறது. ஆனால் அதே வேளையில் உள்ளா ர்ந்த மனிதனை உயிர்ப்பிக்கிறது. எனவே அது இருபுறமும் கருக்குள்ள கூர்மை யான பட்டயமாக உள்ளது. தேவனின் வலதுபுறமாக நிற்கும் நீதிமான்களுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கும் அந்தப் பட்டயம் வலது பக்கம் நிற்கும் அவிசுவா சிகளின் ஜீவன்களை நரகத்திலே தள்ளவும் செய்யும். (மத்தேயு 25 : 33 – 36). ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளையும் செய்யும். 

வார்த்தையானது ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களை, ஊனையும் பிரிக்கிறது:

மனிதனுடைய ஆவி ஆத்துமா, சரீரம் ஆகிய மூன்றும் மூன்று விதமானவை. மனிதனின் ஆத்துமா தங்கும்படியான கூடாரமாக சரீரம் உள்ளது. அந்த சரீரத் திற்கு உயிரைக் கொடுக்கும்படி ஆவி செயல்படுகிறது. மனிதன் மரிக்கும் போது அவனது சரீரம் மண்ணுக்கும், அவனது ஆத்துமா தேவனிடமும் சேருகிறது. அழி யாத ஆத்துமா ஒன்று உண்டென்று மனிதனுக்கு விளங்கச் செய்வது தேவனு டைய வசனம்தான். சுவிசேஷத்தைக் கேட்க வேண்டுமென்றும், மரிக்கும் போது பரலோகம் செல்ல வேண்டுமென்றும், ஆவிக்குரிய காரியங்களை ஏற்றுக் கொண்டு விசுவாசிக்க வேண்டும் என்பதெல்லாம் நினைத்துச் செயல்படுவது ஆத்துமா ஆகும் (அப்போஸ்தலர் 2 : 37). 

கணுக்கள், ஊண் என்பது தசை, நரம்பு, மூட்டுகளைக் குறிக்கிறது. மனிதனின் சரீரத்தில் இவைகள் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டிருந்தாலும் அவைகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக வெவ்வேறு செயல்களை செய்கின்றன. ஆனால் இவைகள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று உதவி செய்தால்தான் மனிதனின் சரீரம் செயல்படும். தேவனுடைய வார்த்தையின் வல்லமையினால் அவைக ளைப் பிரித்து அவைகளுக்கான தனித்தனி வேலைகளை செய்யச் செயல்படும் போது அவர்களது ஊனம் மறைந்து ஊமையன் பேசுவான், செவிடன் கேட்பான். ஊனமானவன் நடப்பான் (மத்தேயு 8 : 15, யோவான் 5 : 8, அப்போஸ்தலர் 9 : 34, 14 : 10). திமிர்வாதக்காரனை நோக்கி இயேசு கூறிய வார்த்தை அவனை சுகமாக்கி யது (மத்தேயு 9 :6,7). தேவனுடைய வார்த்தையானது மனிதனின் ஆத்துமாவை மட்டுமல்ல, சரீரத்தையும் உயிர்ப்பிக்கும். 

இருதயத்தின் நினைவுகளையும், யோசனைகளையும் வகையறுக்கி றது: 

வார்த்தையானது அதைக் கேட்பவர்களின் நினைவுகளையும், யோசனைகளை யும் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ளச் செய்யும். மனிதனின் யோச னையை மற்ற மனிதர்களால் அறிந்து கொள்ள முடியாது. ஆனால் தேவனுடைய வார்த்தை அதை அறியும் (சங்கீதம் 119 : 11). அந்த வார்த்தையை ஒருவன் ஏற்றுக் கொள்ளாவிட்டால் தனது சொந்த நினைவுகளையும் யோசனைகளையும் உணர மாட்டான். நியாயத்தீர்ப்பு நாளிலே தேவனுடைய வார்த்தையானது நியாயந் தீர்க்கும் (யோவான் 12 : 48). அப்பொழுது மனிதனின் யோசனைகளையும், நினை வுகளையும் வெளிப்படுத்தி நியாயந்தீர்க்கும். தேவனுடைய வார்த்தையை நாம் அறிக்கை செய்ய, அறிக்கை செய்ய அந்த வாக்குத்தத்தங்கள் நமக்கு நிறைவேறும். 

4) புளிப்பில்லா அப்பமும் ஜீவஅப்பமும்: யாத்திராகமம் 12 : 20

இஸ்ரவேல் ஜனங்களை இஸ்ரேலிலிருந்து புறப்படத் தயாராகும் போது தேவன் சில கட்டளைகளைக் கொடுக்கிறார். யாத்திராகமம் 12 : 15 ல் புளிப்பில்லா அப்ப த்தை 7 நாட்கள் புசியுங்கள் என்கிறார். புளிப்பு பாவத்தையும், அக்கிரமத்தையும் குறிப்பதால், புளிப்பில்லா அப்பத்தைக் கர்த்தர் சாப்பிடக் கூறினார். இந்த புளிப்பி ல்லா அப்பம் துணிகரமாகப் பாவங்களில் வாழும் மக்களிடமிருந்து விலகியி ருக்க வேண்டுமென்பதைக் காட்டுகிறது. இங்கு புளிப்பில்லா அப்பமானது பாவம் நிறைந்த எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்கப்பட்டதைக் குறிக் கிறது. ஆனால் புதிய ஏற்பாட்டிலோ பாவமில்லாதவரான அக்கிரமமில்லாதவ ருமான, பரிசுத்தரான இயேசு என்ற ஜீவஅப்பத்தைக் குறிக்கிறது. 

5) கர்த்தருடைய பந்தியும் ஜீவ அப்பமும்: 

லூக்கா 22 : 19 “பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.”

இந்த பஸ்கா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நிஜமான பஸ்காவாகிய கிறிஸ்து, நிழலான பஸ்காவுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். கிறிஸ்து என்ற பஸ்கா ஆட்டுக்குட்டி பலியுடன் தனது ஓட்டத்தை நிறைவுடன் முடித்துக் கொள்கி றது. அதன் முடிவில் கர்த்தர் திருவிருந்தை ஏற்படுத்தியிருக்கிறார். இது இயேசு வின் பாடு மரணங்களின் நினைவுகூறுதலாக உள்ளது. இயேசுவைப் பின்பற்று கிறவர்கள் அவருடைய சரீரமாகிய ஜீவ அப்பத்தை உண்டு, அவருடைய இரத்த த்தை அருந்தி என்றென்றைக்கும் உயிரோடிருக்கும் படி கர்த்தருடைய பந்தி என்ற முறையை இயேசு ஏற்படுத்தினார். இயேசுவின் சரீரம் நமக்காகப் பிட்கப் பட்டது. அப்பம் சாப்பிடுவதும், திராட்சைரசம் பருகுவதுமான கர்த்தருடைய பந்தியில் பங்கேற்கும் போதெல்லாம் கர்த்தரை நினைத்து அவருடைய மரணத் தைத் தெரிவிக்கிறோம். கர்த்தருடைய பத்தியில் பங்கு கொள்கிற யாவரும் ஒரே சரீரமாக இருக்கிறோம் என்ற உணர்வு வேண்டும். திருவிருந்து எடுக்கும் போதெ ல்லாம் நமக்காக வானத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்த அப்பமாகிய கிறிஸ் துவை நினைவு கூறுகிறோம். அவருடைய கல்வாரி அன்பை நினைவு கூறுகி றோம். அவர் தரும் நித்தியஜீவனை நினைவு கூறுகிறோம். வானத்திலிருந்து இறங்கி வந்த அப்பமாகிய கிறிஸ்துவின் வார்த்தை நமது ஆவி ஆத்துமாவின் போஜனமாயிருக்கிறது. ஒவ்வொரு முறையும் இதில் பங்கு கொள்ளும் போதெ ல்லாம், இயேசுவுடைய சரீரம் நம்முடைய சரீரத்தோடு கலக்கிறது. இயேசுவின் இரத்தம் நம்முடைய இரத்தத்தோடு ஒன்றாகக் கலந்து தெய்வீக சுகத்தையும், ஆரோக்கியத்தையும் கொண்டு வருகிறது. 

6) பிள்ளைகளின் அப்பம்:

மத்தேயு 15 : 26 “இயேசு அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.”

ஒரு கானானிய ஸ்திரீ தன் மகளின் பிசாசின் போராட்டத்திலிருந்து விடுதலை கிடைக்க இயேசுவிடம் வந்து “தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்” என்று கூப்பி ட்டு இயேசுவைப் பணிந்து கொண்டதைப் பார்க்கிறோம் புறஜாதியான அவளுக்கு எந்த வகையிலும் இயேசுவைத் தாவீதின் குமாரனே என்று அழைப்பதற்கு உரிமை இல்லை. என்றாலும் விசுவாசத்துடன் அவ்வாறு அழைத்தாள். அவளி டம் இயேசு இந்த வார்த்தைகளைக் கூறினார். யூதர்கள் புற ஜாதியரை நாய்கள் என்று தான் கூப்பிடுவர். அப்படிப் பட்ட வார்த்தையை கேட்ட பின்னும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் 

மத்தேயு 15 : 27 “அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழுகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள்.”

இந்தப் பெண்ணின் விசுவாசத்தை பார்த்த இயேசு அவளுடைய மகளை சுகமாக் கினார். இந்த அப்பம் பிள்ளைகளின் சரீரத்திற்குரிய அப்பம். இது தெய்வீக சுகத்து க்கும், ஆரோக்கியத்துக்கும் அடையாளமானது. ஒருவன் இயேசுவை ஏற்றுக் கொண்டு அவருடைய பிள்ளையாக மாறும் போது, உலகத்தின் ஆசிர்வாதங் களையு,ம் இம்மைக்குரிய ஆசீர்வாதங்களையும் பெற முடியும்.

7) ஆவியின் அப்பம்:

லூக்கா 11 : 11 – 13 “உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப் பானா? பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.”

யோவான்6 : 48ல் கூறப்பட்ட ஜீவஅப்பம் நமது ஆத்மாவக்குரியது. மத்தேயு 15 : 26 கூறப்பட்ட பிள்ளைகளின் அப்பமானது சரீரத்திற்குரியது. இங்கு கூறப்பட்டிருக் கிற ஆவிக்குரிய அப்பம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறிக்கிறது. ஆவிக் குரிய தேவைகளைச் சந்திக்கிறது. ஆவியின் 9 கனிகளையும், ஆவிக்குரிய 9 வரங்களையும் கொண்டு வருகிறது. இயேசு தம்முடைய சீஷர்களிடம் உன்னதத் திலிருந்து வரும் பலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார் (லூக்கா 24 : 49). மேலும், 

அப்போஸ்தலர் 1 : 8ல் “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரி யாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப் பீர்கள் என்றார்.”

இந்த பரிசுத்த ஆவியை நாம் பெற வேண்டுமானால் இயேசுவின் பிள்ளைகளாக மாறி தாகத்தோடு கேட்க வேண்டும். அவ்வாறு நாம் கேட்கும் போது இயேசு பரிசுத்த ஆவியை நமக்கு தந்தருளுவார் அவருடைய பிள்ளைகளாக நாம் எப்படி மாற முடியும் என்றால் 

யோவான் 1 : 12 “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்க ளாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகா ரங் கொடுத்தார்.” என்பது தான்.

வேறு அசுத்த ஆவிகள் நமக்குள் வந்துவிடுமோ என்ற பயம் நமக்கு வேண்டாம். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு ஒரு நாளும் கல்லையோ, பாம்பையோ கொடுக்க மாட்டார். ஊக்கமான ஜெபத்தோடு நாம் கேட்கும் போது நமக்கு என்ன தேவை யோ, அதைக் கர்த்தர் நிச்சயமாகத் தருவார்.

முடிவுரை:

உலகங்கள் தேவனுடைய வார்த்தையால் உண்டாக்கப்பட்டது (எபிரேயர்11 : 3, ஆதியாகமம்1 :1 –31). தேவனுடைய வார்த்தைகள் ஒருக்காலும் ஒழிந்து போகாது என மத்தேயு 5 : 18 ல் இயேசு கூறினார். இந்த வார்த்தையால் ஆவிக்குரிய வாழ்க் கையில் வளர்ச்சியடைய முடியும். (ஏசாயா 55 : 10, 11,) சாத்தானை ஜெயிக்க முடியும் (வெளிப்படுத்தல் 19 : 13 – 15), இந்த வார்த்தைகளை நாம் படிக்கும் போது நமக்குள் உணர்வு உண்டாகும், மனமாற்றம் ஏற்படும், தெளிவு பிறக்கும், மாயங் கள் மறைந்து வெளிச்சம் உண்டாகும்.நம் கால்களுக்குத் தீபமாக, நம் பாதைக்கு வெளிச்சத்தைக் கொடுக்கக்கூடிய வார்த்தைகளை நாம் கேட்டு (ஏசாயா :10), அதைப்புரிந்து கொண்டு (மத்தேயு 13 : 23), அதை இருதயத்தில் வைத்து (சங்கீதம் 119 : 11), அதற்குக் காத்திருந்து (சங்கீதம் 119 : 81), அதைத் தியானித்து (சங்கீதம் 119 : 48), அதன்படி நடக்க (சங்கீதம் 119 : 9) முயற்சி செய்ய வேண்டும். இந்த ஜீவ அப்பமாகிய வார்த்தையே நமக்குநித்தியஜீவனைத் தரும்.நாம்பரலோக கதவைத் தட்டி அப்பத்தை தாருமென ஆண்டவரிடம் கேட்கும் போது, அவர் ஜீவஅப்பத்தை யும், பிள்ளைகளின் அப்பத்தையும், ஆவிக்குரிய அப்பத்தையும் தந்தருளுவார். ஆமென்.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago