பைபிள் வசனங்கள்

வியாதியை நீக்கும் வேதாகம வாக்குத்தத்தங்கள்

  1. யாத்திராகமம் 15 : 26 “ நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்.”
  2. யாத்திராகமம் 23 : 25 “ கர்த்தர் உன் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவார்.”
  3. உபாகமம் 7 : 15 “கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்;”
  4. 2 இராஜாக்கள் 20 : 5 “உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னை குணமாக்குவேன்;”
  5. சங்கீதம் 34 : 20 “கர்த்தர் அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை.”
  6. சங்கீதம் 41 : 3 “ படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்”
  7. சங்கீதம் 91 : 3 “ கர்த்தர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.”
  8. சங்கீதம் 91 : 10 “வாதை உன் கூடாரத்தை அணுகாது.”
    Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updatesதினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
  9. சங்கீதம் 103 : 3 – 5 “ கர்த்தர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்குவார்,”
    “உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டுவார்,”
    “நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயதுபோலாகிறது.”
  10. சங்கீதம் 107 : 20 “கர்த்தர் தமது வசனத்தை அனுப்பி அவர்களை குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.”
  11. சங்கீத 147 : 3 “இருதயம் நொறுங்குண்டவர்களைக் கர்த்தர் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.”
  12. ஏசாயா 53 : 5 “ இயேசுவினுடைய தழும்புகளால் குணமாகிறோம்.”
  13. எரேமியா 17 : 14 “கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்;”
  14. எரேமியா 30 : 17 “கர்த்தர் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவார்.”
  15. எரேமியா 33 : 6 “இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்.”
  16. மல்கியா 4 : 2 “என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; “
  17. மத்தேயு 8 : 17 “கர்த்தர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்.”
  18. மாற்கு 1 : 34 “பலவிதமான வியாதிகளினால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை இயேசு சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளைத் துரத்தி விட்டார்.”
  19. லூக்கா 10 : 19 “இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.”
  20. ரோமர் 8 : 11 “அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரு டைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.”
  21. யாக்கோபு 5 : 15 “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்;”
  22. 1 பேதுரு 2 : 24 “நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கு ம்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களை சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.”
  23. 3 யோவான் 2 “உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.”

    Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

    தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

Sis. Rekha

View Comments

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

4 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

4 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

4 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

4 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

4 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

4 months ago