“அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்” (கலாத்தியர் 4:6).
பிதாவானவர் அன்போடு நமக்கு பரிசுத்த ஆவியைக் கொடுத்திருக்கிறார். பரிசுத்த ஆவியின் மூலமாய் உன்னதத்திற்குரிய சகல ஆசீர்வாதங்களையும் நமக்குக் கொடுத்திருக்கிறார். ஆனால் அநேகர் பரிசுத்த ஆவியின் முக்கியத்துவத்தையும், பிரயோஜனத்தையும் அறிந்து கொள்ளவில்லை. இது எத்தனை பரிதாபமானது.
கர்த்தர் விலையேறப்பெற்ற பரிசுத்த ஆவியை நமக்குத் தந்திருக்கிறார். ஆனால் இந்த பரிசுத்த ஆவியினால் நாம் என்ன செய்கிறோம் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். பரிசுத்த ஆவியானவரின் முழு பலனையும், நாம் அனுபவிக்கிறோமா அல்லது ஆவியானவரை ஏனோதானோ என்று அசட்டைப் பண்ணிவிடுகிறோமா?
இயேசுகிறிஸ்துவினுடைய வாழ்க்கையைக் கவனித்துப் பாருங்கள். அவர் பரிசுத்த ஆவியினால் நிரம்பி இருந்ததினால் பாவ சோதனைகளை மேற் கொண்டார். பிசாசுகளைத் துரத்தினார். ஆயிரமாயிரமான அற்புதங்களை நிகழ்த்தினார். இந்த ஆவியானவருடைய கிருபையினாலே மனுஷருடைய இருதயங்களில் உள்ளவைகளை அறிந்து கொண்டார். வல்லமையாய் பிரசங்கித்தார். இடைவிடாமல் ஊழியம் செய்தார்.
ஆதி அப்போஸ்தலர்களைப் பாருங்கள். அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிரம்பியிருந்ததினாலே தங்கள் ஊழியங்களில் மூவாயிரம் ஐயாயிரம் பேர் என்று பெரிய ஆத்தும ஆதாய அறுவடையைச் செய்தார்கள். இயேசுவே இரட்சகர் என்று நிரூபித்தார்கள். அற்புதங்களினாலும், அடையாளங்களினாலும் புறஜாதியாரை வேத வசனத்திற்கு கீழ்ப்படியப் பண்ணினார்கள்.
இன்று நீங்கள் அதே ஆவியானவரைப் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் ஆவியானவரை நீங்கள் எவ்விதமாய் செயல்படுத்துகிறீர்கள்? சிலர் தங்களோடு கூட ஆவியானவர் இருக்கிறார் என்கிறதையே மறந்து போனார்கள். தங்களுடைய சரீரத்தினாலும் தங்களுடைய ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்த மறந்து போனார்கள் (1 கொரி. 6:20). சிலர் ஆவியை அவித்துப் போட்டார்கள் (1தெச 5:19). சிலர் பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்தினார்கள் (எபே. 4:30). சிலர் தங்களுடைய சரீரம் ஆவியானவர் தங்கி இருக்கிற ஆலயம் என்பதை உணராமல் போனார்கள் (1 கொரி. 6:19). சிலர் ஆவியானவ ர்தங்களை வழிநடத்த ஒப்புக்கொடுக்கவில்லை (கலா . 5:16,23).
தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த ஆவியின் வல்லமைகளையும், கிருபைகளையும், அதின் விலைமதிப்பையும் உணர்ந்து கொள்வீர்களாக. எப்போதும் ஆவியினால் நிரம்பி சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் கர்த்தரைப்பாடி கீர்த்தனம் பண்ணுவீர்களாக! (எபே. 5:18,19). ஆவியானவருடைய பிரசன்னத்தை நீங்கள் உணர்ந்து ஆவியானவரோடு கூட நடவுங்கள். அப்பொழுது ஒருபோதும் பாவம் உங்களை அணுகுவதே இல்லை.
ஆவியிலே நிரம்பி இருப்பீர்கள் என்றால் நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாய் இருப்பீர்கள். உன்னத பெலனாகிய ஆவியானவர் உங்களை பெலத்தின் அனுபவத்திற்குள் வழி நடத்துவார்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…