“நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்” (உபாகமம் 7:6).
கர்த்தர் உங்களைத் தமக்கென்று தெரிந்து கொண்டிருக்கிறார். சொந்த ஜனமாய் தெரிந்து கொண்டிருக்கிறார்! சுவிகார புத்திரராய் இருக்கும்படி தெரிந்து கொண்டிருக்கிறார்! தம்முடைய மகிமையைப் பகிர்ந்துக்கொள்ளும்படி உங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறார். நித்திய நித்தியமாய் அவரோடு வாழும்படி தெரிந்து கொண்டிருக்கிறார்.
அவர் எப்படி தெரிந்துகொண்டார்? வேதம் ஒரே வார்த்தையில் சொல்லுகிறது; அன்பினாலே அவர் தெரிந்து கொண்டார்” கர்த்தர் உங்களில் அன்புகூர்ந்ததினாலும், உங்கள் பிதாக்களுக்கு இட்ட ஆணையைக் காக்க வேண்டும் என்பதாலும் தெரிந்து கொண்டார் என்று உபாகமம் 7-ஆம் அதிகாரம் 8-ம் வசனத்தில் குறிப்பிடுகிறார். ஆம், அவர் அன்புகூர்ந்து தெரிந்து கொண்டார். வெளி. 1:6-ஐ வாசித்துப் பாருங்கள். நம்மிடத்தில் அன்புகூர்ந்து நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினார் என்று வேதம் சொல்லுகிறது. அந்த அன்பு எத்தனை மேன்மையான அன்பு.
ஆண்டவர் உங்களுடைய தகுதியைப் பார்த்தோ, குணாதிசயங்களைப் பார்த்தோ உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை. உங்கள் மேல் அன்பு செலுத்தியதினால் அவர் உங்களைத் தெரிந்துகொண்டார். மல்கியா 1:2-ஐ வாசித்துப் பாருங்கள். “நான் உங்களைச் சிநேகித்தேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். அந்த “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்” (எரேமியா 31:3)
கர்த்தர் உங்களுடைய நற்காரியங்களைப் பார்த்தோ, புண்ணியத்தைப் பார்த்தோ உங்களைத் தெரிந்து கொள்ளவில்லை. தன்னுடைய அன்பின் படியும் கிருபையின் படியும் தெரிந்துகொண்டார். அவருடைய கிருபை எத்தனை இனிமையானது. கிருபை என்ற வார்த்தைக்கு “கிறிஸ்து தகுதி இல்லாதவர்கள் மேல் பாராட்டுகிற தேவ தயவு” என்பது அர்த்தமல்லவா?
அன்பினாலும், கிருபையினாலும் மட்டுமல்ல, பிதாவின் முன் அறிவிப்பின் படியே கர்த்தர் உங்களைத் தெரிந்து கொண்டார். 1 பேதுரு 1:2- ஐ வாசித்துப் பாருங்கள். “பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தம் தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்து கொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது” என்று அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதுகிறார்.
இந்த வசனத்தை ஆழ்ந்து தியானித்துப் பார்க்கும் போது பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் உங்களை முன் அறிவிப்பின்படியே தெரிந்துகொண்டார் என்பதை அறிந்து கொள்ளலாம். அந்த முன்னறிவிப்பின்படி இன்னார் இன்னாரை தம்முடைய ராஜ்யத்திற்குத் தெரிந்தெடுக்க வேண்டுமென்றுச் சொல்லி உங்களைப் பற்றி பிதாவுக்கு ஒரு அறிவு இருந்தது. குலத்தில் ஒருவர், கோத்திரத்தில் ஒருவர், ஊரில் ஒருவர் என்று சொல்லி பல்வேறு சூழ்நிலையிலிருந்து உங்களைத் தமது முன்னறிவிப்பின்படி தெரிந்தெடுத்தார். தேவபிள்ளைகளே, உங்களைப் பற்றி கர்த்தர் முன்னதாகவே அறிந்திருக்கிறார்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…