தீர்க்கதரிசிகளின் புத்திரருடைய வீட்டில் எலிசா:
2 இராஜாக்கள் 4 : 1, 2 “தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் புருஷன் இறந்து போனான்; உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன்கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக் கொள்ள வந்தான் என்றான். எலிசா அவளை நோக்கி: நான் உனக்கு என்னசெய்ய வேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான். அதற்கு அவள்: ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள்.”
எலிசா 50 ஆண்டுகள் தேவனுடைய தீர்க்கதரிசியாக வாழ்ந்து அற்புதங் களைச் செய்து வந்தார். அவர் தேவ அழைப்புக்கு ஏற்ப எலியாவால் உருவாக் கப்பட்டவராக இருந்தார். தீர்க்கதரிசிகளுடைய புத்திரரின் ஒருவன் கடன் பாதையிலிருந்து இறந்து விட்டான். அந்த வீட்டிற்கு எலிசா சென்றான். எலிசாவுக்கு இறந்த அந்த மனுஷன் தெரிந்தவனாக இருந்திருக்க வேண்டும். அதனால் இறந்தவனின் மனைவி எலிசாவைப் பார்த்து “உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்” என்றாள். அந்தப் பெண் மிகவும் வேதனையுடன் தன்னுடைய கணவனும் இப்பொழுது இல்லை. வீட்டில் பணமும் இல்லை. தங்களால் கடன் கொடுக்க முடியாததால் கடன் கொடுத்தவர்கள் அவர்களுடைய இரண்டு மகன்களையும் அடிமைகளாக்க வந்தனர். அவர்களை மீட்க எனக்கு எந்த வழியும் இல்லை. அவர்களுக்கு உதவி செய்ய யாருமில்லை என்று எலிசாவிடம் கூறினாள். அந்தக் குடும்பத்திலிலுள்ள பெரிய பிரச்சனையைப் பார்க்கிறோம். ஏனெனில் கடன் கொடுத்தவனுக்கு என்ன சொல்லுவது என்று அவளுக்குத் தெரியவில்லை கடன் அதிகமானால் அதற்காகத் தன்னையும் தன் குடும்பத்தையும் அடிமைகளாக விற்றுப் போடும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது.
மரணமடைந்த ஒரு தீர்க்கதரிசியின் மனைவிக்குத் தன் மகன்களை விற்க வேண்டிய சூழ்நிலை வந்ததை அறிந்த எலிசா தான் அந்தக் குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்றெண்ணுகிறான். மோசேயின் பிரமாணம் திக்கற்றவர்களுக்கும், விதவைகளுக்கும் உதவி செய்ய வேண்டு மென்று கூறப்பட்டிருக்கிறது. எலிசா அவளைப் பார்த்துத் தான் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று கேட்டுவிட்டு, உன்னிடத்தில் என்ன இருக்கிறது என்றான். அவளோ இருக்கிறதை மறைக்காமல் தன்னுடைய வீட்டில் ஒரு குடம் எண்ணை மட்டும் உள்ளது என்றாள். அவள் உண்மையுள்ளவள் என்றறிகிறோம். தீர்க்கதரிசிகளிடம் எதையும் நாம் மறைக்கக் கூடாது.
எலிசாவின் தீர்க்கதரிசனமும், அவளது செயலும்:
2 இராஜாக்கள் 4 : 3 – 6 “அப்பொழுது அவன்: நீ போய், உன்னுடைய அயல்வீட்டுகாரர் எல்லாரிடத்திலும் அநேகம் வெறும்பாத்திரங்களைக் கேட்டுவாங்கி, உள்ளே போய், உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான்.அவள் அவனிடத்திலிருந்து போய், தன் பிள்ளைகளுடன் கதவைப் பூட்டிக்கொண்டு, இவர்கள் பாத்திரங்களை அவளிடத்தில் கொடுக்க, அவள் அவைகளில் வார்த்தாள். அந்தப் பாத்திரங்கள் நிறைந்த பின், அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள். அதற்கு அவன்: வேறே பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்று போயிற்று.”
எலியா சாறிபாத் விதவையின் வீட்டிலே கலசத்தில் கொஞ்சம் மாவும், கொஞ்சம் எண்ணையும் மட்டுமே இருந்தது. ஆனால் கர்த்தர் அற்புதம் செய்த போது தேசத்தில் மழை வரும் வரை அவளுடைய வீட்டில் பானையில் மா செலவழிந்து போகவுமில்லை. கலசத்தில் எண்ணை குறைந்து போகவு மில்லை. இங்கு எலிசாவோ அதே மாதிரி செய்யாமல் வித்தியாசமாக அவர்களிடம் அவள் வைத்திருந்த எண்ணையை தன்னிடம் கொண்டு வரச் சொல்லவோ, அதைத் தொட்டு ஜெபிக்கவோ இல்லை. அதற்கு மாறாக அவளிடம் அவள் பக்கத்திலுள்ள எல்லா வீடுகளுக்கும் சென்று அவர்களி டமுள்ள வெறுமையான பாத்திரங்களை கேட்டு வாங்கி வரச் சொல்கிறான். பின் அவளுடைய வீட்டின் அறைக்குள் அவள் வாங்கி வந்த பாத்திரங்களை வைக்கச் சொன்னான். அந்த அறைக்குள் அவளுடைய இரண்டு மகன்களையும் கூட்டிக் கொண்டு அறையைப் பூட்டி அவளிடமுள்ள எண்ணையை வாங்கி வந்த பாத்திரங்களில் நிரப்பி, நிரப்பினதை ஒரு பக்கத்தில் வைக்கச் சொன்னான். அவளும் எலிசா சொன்னபடியே தாயும் பிள்ளைகளும் பாத்திரங் களை இரவலாக வாங்கினார்கள். பிள்ளைகள் தன் தாயிடம் ஒவ்வொரு பாத்திரங்களாகக் கொடுக்க அதை அவள் வாங்கி வீட்டிலுள்ள ஒரு குடம் எண்ணையை அந்தப் பாத்திரங்களில் வார்த்தாள். பிள்ளைகள் பாத்திரங்க ளைக் கொடுக்க, கொடுக்க எண்ணெய் வந்து கொண்டே இருந்தது. வாங்கி வந்த அனைத்துப் பாத்திரங்களும் நிரப்பின பின் அவள் தன் மகனிடம் இன்னும் ஒரு பாத்திரம் கொண்டு வா என்றாள். அவனோ அதற்கு வேறு பாத்திரமில்லை என்றவுடன் எண்ணை நின்று போயிற்று.
அவர்கள் விசுவாசத்தால் எவ்வளவு பாத்திரம் வாங்கினார்களோ அவ்வளவு எண்ணெய் கிடைத்தது. கர்த்தர் இருக்கிறதை வைத்து அற்புதம் செய்து அவர்களுடைய குறைவை நிறைவாக்கினாரென்று இதிலிருந்து அறிகிறோம். யோவான் 2 ம் அதிகாரத்தில் இயேசுவானவர் கானாவூர் கல்யாண வீட்டிலே காலியான ஆறு கற்ஜாடிகளில் தண்ணீரை நிரப்பச் செய்து, அதை திராட்சை இரசமாக்கினார். மத்தேயு 14 : 19, 20 ல் 5 அப்பங்களையும் 2 மீன்களையும் வைத்து 5000 பேரைப் போஷிக்கச் செய்தார். யாத்திராகமம் 4 : 2 ல் கர்த்தர் மோசேயிடம் உன் கையில் என்ன இருக்கிறது என்று கேட்டு, அவன் கையிலி லுள்ள உலர்ந்து, காய்ந்து போன கோலை வைத்தே இஸ்ரவேல் ஜனங்களை வெளியே கொண்டு வரவைத்தார். அதேபோல் நமக்குள் இருக்கிற அபிஷேக எண்ணெயால் நாம் மற்ற ஆத்மாக்களுக்குச் சென்று ஆசீர்வதிக்க வேண்டும். தேவனுடைய வல்லமை அளவிட முடியாதது.
எலிசா ஆசீர்வாதமாகக் கூறியது:
2 இராஜாக்கள் 4 : 7 “அவள் போய் தேவனுடைய மனுஷனுக்கு அதை அறிவித்தாள். அப்பொழுது அவன்: நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம்பண்ணுங்கள் என்றான்.”
அவள் எண்ணை நின்று விட்டதை தேவனுடைய மனுஷனான எலிசாவுக்கு அதைத் தெரிவித்தாள். அதைக் கேட்ட எலிசா அந்த எண்ணையை விற்று கடனை அடைப்பது மட்டுமல்லாமல் மீதமிருப்பதைக் கொண்டு ஜீவனமும் பண்ணுங்கள் என்றான். கர்த்தர் அற்புதம் செய்தார். . கர்த்தர் இன்றும் அற்புதங்களைச் செய்கிறார். ஏனெனில் அவர் மாறாதவர். நம்மிடமுள்ள சிறு காரியங்களைக் கொண்டு பெரிய காரியங்களைச் செய்ய அவரால் கூடும். கர்த்தருடைய கரம் குறுக்கிப் போகவில்லை. நாம் எந்த அளவிற்கு விசுவாசித்து கீழ்ப்படிகிறோமோ, அந்த அளவிற்கு நமக்கு அற்புதம் நடக்கும். பலவித துயரங்களில் அகப்பட்டிருக்கும் நாம் நம்மிடம் என்ன இருக்கிறது என்று எதையும் மறைக்காமல் தேவனிடம் தெரிவித்தால் தேவன் நமக்காக அற்புதங்களைச் செய்வார்.
எலியா அக்கினியான தீர்க்கதரிசி. யோவான்ஸ்நானகனைப் போன்று கரடுமுரடான மலைகளில் ஊழியம் செய்து திடீரென்று தோன்றுவார். திடீரென்று மறைவார். நியாயத்தீர்ப்பின் தீர்க்கதரிசியாக இருந்து ஜனங்களை கர்த்தரிடத்தில் திருப்பினார். எலிசாவோ சமாதானமான பள்ளத்தாக்கில் தெரிந்தெடுக்கப்பட்ட சிறிய கூட்டத்திற்கு ஊழியம் செய்தார். எலிசாவின் ஊழியம் இயேசுவின் ஊழியத்தைப் போல கிருபையின் ஊழியமாகத் தனிப்பட்ட விதத்தில் வீடுகளுக்குச் சென்று ஊழியம் செய்து அவர்களோடு உணவு அருந்துவார். ஒரு விதவைக்கு எண்ணெய் பெருகும் ஒரு அற்புதத்தை இங்கு செய்கிறார். கர்த்தர் ஆராய்ந்து முடியாத காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் செய்கிறவர் (யோபு 9 : 10). நம்முடைய குறைவுகளை நிறைவாக்குகிறவர். துக்கத்தை சந்தோஷமாக மாற்றுகிறவர். கண்ணீரைக் களிப்பாக்கி அற்புதங்களைச் செய்கிறவர். இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். உங்கள் கவலைகளை அவரிடம் தெரிவித்தால் போதும். தன்னுடைய பிள்ளைகளைக் கர்த்தர் ஒருபோதும் வருத்தப்பட விடவே மாட்டார்.
எலிசாவின் அற்புதச் செயல்கள் ஆவிக்குரிய சத்தியங்களை நமக்கு வெளிப் படுத்துகின்றன. ஒரு விதவையும் அவளுடைய இரண்டு குமாரர்களும் பெற்ற அற்புதத்தில் தேவன் தேவையிலும் துன்பத்திலுமிருக்கும் தன்னுடைய மக்களைப் பாதுகாக்கிறார் என்னும் கருத்து வெளிப்படுத்தப்படுகிறது. விதவையும், அவளுடைய பிள்ளைகளும் கைவிடப்பட்டு ஒடுக்கப்படும் தேவனுடைய மக்களைக் குறிக்கிறார்கள். அதேபோல் நம்மைப் பார்த்தும் “உங்களிடத்தில் என்ன இருக்கிறது” என்று கர்த்தர் கேட்கிறார். சிலருக்குப் பாட்டு பாடும் தாலந்து, சிலருக்கு ஜெபிக்கும் தாலந்து, சிலருக்குக் கருவிகளை வாசிக்கிற தாலந்து, சிலருக்கு ஆத்துமாக்களைக் கர்த்தரண்டை அழைத்து வரும் தாலந்து, சிலருக்குத் தேவனுடைய வார்த்தைகளைப் பிரசங்கம் பண்ணும் தாலந்து என்று ஒவ்வொருவரிடமும் தாலந்துகள் உண்டு. அவைகளைக் கர்த்தருக்கென்று அர்ப்பணியுங்கள். கர்த்தர் நம்மை ஆசீர்வ திப்பார். நமக்குள் இருக்கிற ஆவியானவருடைய வல்லமையை நாம் அனல் மூட்டி எழுப்பும் போது, நம்மைத் தேவன் அக்கினி ஜ்வாலையாகப் பயன்படுத்துவார். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…