எலிசாவின் அற்புதங்கள்

எலிசாவின் எலும்புகளில் மேல் போட்ட பிரேதம் உயிர் பெற்றது

2 இராஜாக்கள் 13 : 20, 21 “எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்பண்ணினார்கள்; மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது.”

அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.”

எலிசா மரணமடைந்து அடக்கம் பண்ணப்பட்டான். ஆனால் கல்லறையில் வைக்கப்பட்டபின்பும் எலிசா ஒரு ஜீவன் தரும் தீர்க்கதரிசி என்று வெளிப்படுத்தப்படும்படி எல்லோருக்கும் சாட்சியாக இந்த அற்புதம் நிகழ்ந்தது( 2இராஜாக்கள் 4 : 32 – 37, 1 இராஜாக்கள் 17 : 17 – 24). இந்த அற்புதம் ஒரு தேவ மனுஷனுடைய வல்லமை அவனுடைய மரணத்துடன் நின்று விடுவதில்லை. ஆனால் அதன் பின்னரும் ஆவிக்குரிய ஜீவன் தரும் வாழ்க்கையாக அது காணப்படும் என்பதை விளக்குகிறது (யோவான் 12 : 24, 2 கொரிந்தியர் 4 : 11, 12). இறந்த பின்னும் அற்புதத்தைச் செய்த ஒரே மனிதன் எலிசா மட்டுமே. மரித்தோரை எழுப்பின எலிசா வியாதியில் மரித்தான். இதனால் எலிசா செய்த அற்புதங்கள் அனைத்தும் எலிசாவால் நடக்கவில்லை. கர்த்தரால் நடந்ததென்றறிகிறோம். பவுல் எத்தனையோ அற்புதங்கள் செய்தார். அவனுடைய உருமாக்களைத் தொட்டவர்கள் கூட சுகம் பெற்றனர் ஆனால் பவுலினுடைய சரீரத்திலிருந்து வியாதிக்காக மூன்றுமுறை தேவனை நோக்கி ஜெபித்தும் “என்கிருபை உனக்குப் போதுமென்று” கூறியதைப் பார்க்கிறோம். எலிசா அடக்கம் பண்ணப்பட்ட மறு வருஷத்திலே மோவாபியர்கள் இஸ்ரவேலர்களை எதிர்க்க வருகிறார்கள். 

அந்த நேரத்தில் ஒரு மனுஷனை அடக்கம் பண்ணைக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் மோவாபியர்களின் சேனை வருவதைப் பார்த்து பயத்தில் அந்தப் பிரேதத்தை அடக்கம் பண்ணாமல் எலிசாவின் கல்லறையின் மேல் போட்டனர். அந்தப் பிரேதம் எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டு அந்தப் பிரேதமானது உயிரடைந்தது காலூன்றி நின்றது. நம்முடைய ஊழியத்தின் பயன் நமது வாழ்க்கைக்குப் பின்னரும் இருக்க முடியும். அபிஷேகம் பண்ணப்பட்டு, வரங்களை பெற்ற ஒரு மனிதனின் இறந்துபோன சரீரத்திற்கு இப்படிப்பட்ட வல்லமை இருக்குமானால், நமக்காக உயிர்த்தெழுந்த இயேசுவின் வார்த்தை எத்தனை வல்லமையுள்ளது. மரித்துக் போயிருக்கிற நமது வாழ்க்கைத் திரும்பத் துளிர்க்க, நம்முடைய குடும்பம் கர்த்தருக்காக எழும்பிப் பிரகாசிக்க, பொருளாதாரச் சீர்கேடுகள் சரியாக, மரணத்தை ஜெயித்த தேவனிடம் நம்மை ஒப்புக்கொடுத்து தேவபயத்தோடும், நடுக்கத்தோடும் அவரைப் பின்பற்றுவோம். எனவே கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களாக வாழ்ந்து நற்பணி செய்ய முற்படுவோம். மரித்தவனின் எலும்புகள் மூலமாக அற்புதம் செய்யும் கர்த்தர் உயிருள்ள நம் மூலமும் அற்புதம் செய்வார். ஆமென்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

3 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

3 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

3 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

3 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

3 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

3 months ago