எலிசாவின் அற்புதங்கள்

கூழிலிருந்த விஷத்தைப் போக்கினார்

எலிசாவின் மனதுருக்கம்:

2 இராஜாக்கள் 4 : 38 “எலிசா கில்காலுக்குத் திரும்பிப் போய் இருக்கையில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தீர்க்கதரிசிகளின் புத்திரர், அவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்தார்கள்; அவன் தன் வேலைக்காரனை நோக்கி: நீ பெரிய பானையை அடுப்பிலே வைத்துத் தீர்க்கதரிசிகளின் புத்திரருக்குக் கூழ்காய்ச்சு என்றான். “

எலிசாவும், தீர்க்கதரிசிகளின் புத்திரரும் கில்காலில் நின்றனர். கில்கால் என்றால் நிந்தை புறப்பட்ட இடம் என்று பொருள். அப்பொழுது அந்த தேசத்தில் கடுமையான பஞ்சம் நிலவியது. தேவ பிள்ளைகள் எலிசாவிடம் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். எலிசாவும் அவர்களும் ஒன்றாக ஐக்கியமாக இருந்ததைப் பார்க்கிறோம். இதேபோன்ற ஐக்கியம் எப்பொழுதும் தேவ பிள்ளைகளுக்குள் இருக்க வேண்டும். தீர்க்கதரிசியான எலிசா தன்னோடி ருந்தவர்கள் பசியாயிருப்பார்களே என்று தன்னுடைய வேலைக்காரனைப் பார்த்துக் கூழ் காய்ச்சச் சொல்கிறான். இயேசுவின் பிரசங்கத்தைக் கேட்டு அநேக மணி நேரங்கள் ஜனங்கள் அமர்ந்திருப்பதைப் பார்த்து அவர்களுக்குச் சாப்பிட ஏதாவது கொடுங்கள் என்றது போல, எலிசாவும் பஞ்சகாலமாக இருந்தபடியால் தன்னோடிருந்தவர்களின் பசியைத் தீர்க்க கூழ் காய்ச்சச் சொல்கிறான். 

கூழ் பானையில் போட்ட காய்: 

2 இராஜாக்கள் 4 : 39 “ஒருவன் கீரைகளைப் பறிக்க வெளியிலே போய், ஒரு பேய்க்கொம்மட்டிக் கொடியைக் கண்டு, அதன் காய்களை மடி நிறைய அறுத்துவந்து, அவைகளை அரிந்து கூழ்ப்பானையிலே போட்டான்; அது இன்னதென்று அவர்களுக்குத் தெரியாதிருந்தது.”

அவர்களும் எலிசா கூறியபடி பெரிய பானையை அடுப்பில் வைத்து கூழ்காய்ச் சினர். கூழில் போடுவதற்கு ஏதாவது கீரைகளைப் பறித்து வந்து போடலாம் என்று நினைத்து, கீரைகளைப் பறிக்கச் சென்றவன் கண்களைப் பறித்த பேய்க் கொம்மட்டிக் காய்களைத் தன்னுடைய மடி நிறைய பறித்துக் கொண்டு வந்து அவைகளை வெட்டிக் கூழ் காய்ச்சுகிற பானையில் போட்டான். அந்தக்காய் கசப்பானது, அதைச் சாப்பிட்டால் மரணம் வருமென்று பறித்துக் கொண்டு வந்தவனுக்குத் தெரியாது. ஆனால் எண்ணாகமம் 11 : 5 ல் கொம்மட்டிக் காய்களைச் சாப்பிட்டதைப் பார்க்கிறோம். ஆனால் அவன் பறித்தது பேய்க் கொம்மட்டிக்காய்கள். மனுக்குலத்தின் சாவே ஏதேன் தோட்டத்தில் கண்களு க்கு அழகாக இருந்த பழத்தை தேவ கட்டளையை மீறிப் புசித்ததினால் வந்தது. 

எலிசா செய்த அற்புதம்:

2 இராஜாக்கள் 4 : 40, 41 “சாப்பிட அதை ஜனங்களுக்கு வார்த்தார்கள்; அவர்கள் அந்தக் கூழில் எடுத்துச் சாப்பிடுகிறபோது, அதைச் சாப்பிடக் கூடாமல்: தேவனுடைய மனுஷனே, பானையில் சாவு இருக்கிறது என்று சத்தமிட்டார்கள்.”

“அப்பொழுது அவன், மாவைக் கொண்டுவரச்சொல்லி, அதைப் பானையிலே போட்டு, ஜனங்கள் சாப்பிடும்படி அவர்களுக்கு வார் என்றான்; அப்புறம் பானையிலே தோஷம் இல்லாமற் போயிற்று.”

கூழ் காய்ச்சி முடித்து ஜனங்களுக்கும் பரிமாறி விட்டார்கள். அவர்கள் அதை உண்ணும்போது கசப்புத்தன்மையைப் பார்த்து சாப்பிட முடியாமல் ‘தேவனு டைய மனுஷனே பானையில் சாவு இருக்கிறது என்று எலிசாவைப் பார்த்துச் சத்தமிட்டனர். யாரும் கொம்மட்டிக் காய்களை பறித்துப் போட்டவனைப் பார்த்து பழி சுமத்தவோ கோள் சொல்லவோ இல்லை. அதை யாரும் வெளியே கொட்டவுமில்லை. எலிசாவிடம் மட்டுமே கூறினார். . பின்பு எலிசா அந்த மாவில் கொஞ்சம் கொண்டு வரச் சொல்லி கூழிலுள்ள நச்சுத் தன்மை நீங்கும் படி கர்த்தரை நோக்கி ஜெபித்தான். பின் அந்த மாவைக் கூழ் இருக்கும் பானையில் போடச் சொன்னான். அதன்பின் ஜனங்களுக்கு அதைப் பரிமாறச் சொன்னான். அவர்கள் யாரும் எந்த சந்தேகமும் படாமல் சாப்பிட்டனர் எலிசாவின் மேல் அத்தனை நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. . கர்த்தரின் வல்லமையினால் நஞ்சு கலந்த ஆகாரத்தை நல்ல ஆகாரமாக எலிசா மாற்றினார். எலிசா நல்ல தலைவராக, நல்ல ஆலோசகராக, நல்ல பாதுகாவ லராக இருந்ததைப் பார்க்கிறோம். அந்தக் காயைப் புசித்தால் சாவுவரும் என்று தெரியாமல் செய்ததால் கர்த்தர் அந்த விஷத்தை மாற்றச் செய்தார். 

இதேபோல் நம் தேவன் நம்மிடமிருக்கும் கசப்புகளை, வெறுப்புகளை மாற்ற வல்லவர். இருளாக இருக்கும் நம் வாழ்க்கையை மாற்ற அவரால் மட்டுமே முடியும். நாம் செய்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நமக்காகச் சிலுவையில் தம்மையே ஒப்புக் கொடுத்து, நம்முடைய பாவங்களையும், அக்கிரமங்க ளையும் சிலுவையில் சுமந்து நம்மை மீட்டெடுத்த இயேசு கிறிஸ்துவண் டையில் செல்ல வேண்டும் அவரையே பற்றிக்கொள்ள வேண்டும். அவரு டைய வார்த்தைகளைப் பின்பற்ற வேண்டும். அவருடைய மகனாக, மகளாக மாறி விசுவாசத்துடன் அவர் பாதத்தில் அமர்ந்தால் போதும். மாராவின் கசப்பை மாற்றினவர், தண்ணீரையே திராட்சை ரசமாக மாற்றினவர் நீதியின் சூரியனாகிய அவர் நம் வாழ்க்கையையும் மாற்றி ஒளி வீசச் செய்வார்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago