தானியேல், தரியு:
தானியேல் யூத குலத்தைச் சேர்ந்தவன். ராஜ பரம்பரையில் உள்ளவன். எசேக்கியா ராஜாவுக்கு உறவினன். மாசுமருவற்றவன். நேபுகாத்நேச்சார் எருசலேமின் மீது படையெடுத்து யோயாக்கீம் ராஜாவைச் சிறைபிடித்து, இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே யாதொரு மாசில்லாதவர்களையும், அழகானவர்களையும், சகல ஞானத்தில் தேறினவர்களையும், அறிவில் சிறந்தவர்களையும், கல்வியில் நிபுணரையும் தெரிந்தெடுத்து பதவியில் அமர்த்தினான். தானியேலின் வாழ்வும் ஊழியமும் பாபிலோன் சிறைவாசகாலமான 70 ஆண்டுகளும் விரிந்து நின்றது. 16வது வயதில் கைதியாகப் பாபிலோனையடைந்த தானியேல் அரசாங்கப் பணிக்காகத் தெரிந்தெடுக்கப்பட்டான். அதன்பின்பு தேவனுடைய தற்காலிகமும், நிலையானதுமான நோக்கத்தை இஸ்ரவேலுக்கும் புறஜாதியினருக்கும் வெளிப்படுத்தும் தேவனுடைய தீர்க்கதரிசியாகச் செயல்பட்டான்.
பாபிலோன் ராஜ்ஜியமான பொன்னான தலை மறைந்து, வல்லரசான பாபிலோன் கடந்து சென்று விட்டது. அதன்பின் நேபுகாத்நேச்சாரின் தரிசனத்தில் கண்ட வெள்ளியிலான மேதிய பெர்சிய ராஜ்யம் ஆளுகை செய்தது. அந்த ராஜ்ஜியத்தில் தரியு என்பவன் (இரண்டாவது தரியு) இரண்டு ஆண்டுகள்தான் ஆட்சி செய்தான். தரியுவின் காலத்தில் தானியேல் உயரதிகாரியாகவே இருந்தான். நேபுகாத்நேச்சாருக்குப் பின் வல்லமையுள்ள ராஜாவாகத் தரியு அரசாண்டான்.
தானியேல் 6 : 2, 3 “தரியு ராஜாவுக்கு நஷ்டம் வராதபடிக்கு அந்த தேசாதிபதிகள் கணக்கு ஒப்புவிப்பதற்காக அவர்களுக்கு மேலாக மூன்று பிரதானிகளையும் ஏற்படுத்துவது தரிவுக்கு நலமென்று கண்டது; இவர்களில் தானியேல் ஒருவனாய் இருந்தான்.”
“இப்படியிருக்கையில் தானியேல் பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்பட்டவனாயிருந்தான்; தானியேலுக்குள் விஷேசித்த ஆவி இருந்தமையால் அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தான்.”
தரியு ராஜா தன்னுடைய ராஜ்யத்தில் 120 தேசாதிபதிகளை அமர்த்தியிருந்தான். அவர்கள் ராஜாவின் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். இந்த 120 பேருக்கும் மேலாக மூன்று பிரதானிகளை ஏற்படுத்தியிருந்தான். இந்தப் பிரதானிகள் தரியு ராஜாவுக்கும், 120 தேசாதிபதிகளுக்கும் இடையிலிருந்து செயல்பட்டார்கள். எனவே பொறுப்புகளும், உத்தியோகங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்த மூன்று பேரில் ஒருவன் தானியேல். ராஜாவுக்கு நஷ்டம் வராதபடி கவனிக்க வேண்டியதும், ராஜா எந்த வகையிலும் ஏமாற்றப்படாதபடி காப்பதும் இந்தப் பிரதானிகளின் பொறுப்பு. மூன்று பிரதானிகளின் முக்கியமானவனாக தானியேல் இருந்தான். அப்பொழுது தானியேலுக்கு எண்பது வயதிருக்கலாம்.
மூன்று பிரதானிகளின் நடுவிலே மூத்தவனாக மட்டுமல்ல, உன்னதமான ஒரு இடத்தைப் பெற்றவனாகவும், அதிகாரத்திலும், வல்லமையிலும் அதிகமானவனாகவும் இருந்தான். தரியு ராஜா தானியேலிடம் நம்பிக்கை கொண்டவனாக இருந்ததாலும், விசேஷித்த ஆவியால் நிரப்பப்பட்டவனாக தானியேல் இருந்ததாலும், எல்லா நிர்வாகிகளுக்கும், பிரபுக்களுக்கும் மேலாய் அவனுக்கு ராஜா அதிகாரம் கொடுத்தான். தானியேலை ராஜ்யம் முழுவதற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான். தேவனுடைய கிருபையால் தான் 80 வயதான போதும் தானியேலின் அறிவு கூர்மையானதாகவும், அவனது திறமைகள் குறையாமலுமிருந்தது.
தேசாதிபதிகளின் திட்டம்:
தரியு ராஜா தன் ராஜ்ஜியம் முழுமைக்கும் அதிகாரியாக 3 பிரதானிகளை ஏற்படுத்தினார். பிரதானிகளுக்கும், தேசாதிபதிகளுக்கும் மேற்பட்டவனாகவும், ராஜாவுக்கு அடுத்தபடியாகவும் தானியேல் இருந்ததால், பிரதானிகளும் தேசாதிபதிகளும் அவனது உயர்வினால் பொறாமை கொண்டு தேவனது கட்டளைகளில் தானியேலுக்கிருந்த உண்மைப் பற்றுக்கு விரோதமாக கிரியை செய்யும்படி திட்டமிட்டார்கள். ராஜ்யத்தின் விசாரிப்பிலே தானியேலைக் குற்றப்படுத்த வகை தேடினார்கள். ஆனால் அவர்களால் எதிலும் தானியேலிடம் குற்றம் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின் தானியேலால் கீழ்ப்படிய முடியாத கட்டளையை தரியு ராஜாவைப் பிறப்பிக்கச் செய்ய வேண்டும் என்று அவர்களெல்லோரும் தீர்மானம் எடுத்தார்கள். கடைசி காலங்களில் அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியில் தேவனுக்கு உண்மையாக இருக்கும் மக்களை எதிர்த்து சாத்தானும் இத்தகைய செயலைத் தான் செய்வான்.
அந்திகிறிஸ்து தேவனது மக்களை குற்றப்படுத்தும்படியாக, தேவசட்டங்களுக்கு எதிராய் விளங்கும் அரசாங்கச் சட்டங்களை உருவாக்குவான். அவ்வாறு தனது சிலையை உருவாக்கி, அதைத் தெய்வமாக வழிபட வேண்டுமென்று கட்டளையிடுவான் (2 தெசலோனிக்கேயர் 2 : 1 — 12). ஆனால் தானியேலின் வாழ்க்கையைப் பார்க்கும்போது அத்தனை ஆண்டுகள் அவர்களுக்குக் கீழ் தானியேல் பணி செய்திருந்தும், அவனது குணநலன்களிலோ, கடந்தகால வாழ்க்கையிலோ அவர்களால் ஒரு குற்றத்தையும் கண்டு பிடிக்க முடியவில்லை. பிலிப்பியர் 2 : 15 ல் கூறியபடி தானியேல் குற்றமற்றவனாக, கபடற்றவனாக, தேவனுடைய மாசற்ற பிள்ளையாக இருந்தான். தானியேல் மூன்று வேளையும் முழங்காலில் நின்று ஜெபிப்பதை அவர்கள் அறிந்திருந்தனர். எனவே அதை முகாந்தரமாக்கி குற்றம் கண்டுபிடிக்க எண்ணினர். தீமையான திட்டத்தை அமைதியாக உருவாக்கினார்கள்.
பிரதானிகளும், தேசாதிபதிகளும் ராஜாவினிடத்தில் போய்
தானியேல் 6 : 7, 8 “எவனாகிலும் 30 நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத் தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி, யாதொரு காரியத்தைக் குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியில் போடப்பட ராஜா கட்டளை பிறப்பித்து, உறுதியான தாக்கீது செய்ய வேண்டுமென்று ராஜ்யத்தினுடைய எல்லா பிரதானிகளும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும், தலைவர்களும் ஆலோசனைபண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ”
“ஆதலால் இப்போதும் ராஜாவே, மேதியருக்கும் பெர்சியிருக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படியே, அந்தத் தாக்கீது மாற்றப்படாதபடி நீர் அதைக் கட்டளையிட்டு, அதற்கு கையெழுத்து வைக்க வேண்டும் என்றார்கள்.”
ராஜாவை உயர்த்தும் வகையில் அனைவரும் ராஜாவிடம் மட்டுமே எந்தக் காரியத்தை குறித்தும் 30 நாள் வரை விண்ணப்பம் பண்ணவேண்டுமென்றும், ராஜாவைத் தவிர வேறு மனுஷரிடமோ, தேவனிடமோ யாரும் விண்ணப்பம் பண்ணக் கூடாதென்றும் கட்டளையிட ஆலோசனை கூறினர். ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும், மனுஷனையானாலும், யாதொரு காரியத்தைக் குறித்தாவது விண்ணப்பம் பண்ணினால், அவனை சிங்கங்களின் கெபியிலே போட ராஜா கட்டளையிட வேண்டும் என்றும் ஆலோசனை கூறினர். மேலும் மேதியருக்கும், பெர்சியருக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படி அந்தக் கட்டளை மாற்றப்படாதபடி நீர் கட்டளையிட்டு அதற்கு கையெழுத்திட வேண்டுமென்றார்கள். எந்த மனிதனுக்கும் எதிராகச் சூழ்ச்சி செய்வதும், அதற்கேற்றவிதமாகப் பேசுவதும், மற்றவர்களைத் தூண்டி விடுவதும் தீயவர்களின் செயலாகும்.
தரியு ராஜாவின் கட்டளை:
தானியேல் 6 : 9 அப்படியே ராஜாவாகிய தரியு அந்தக் கட்டளைப் பத்திரத்துக்கு கையெழுத்து வைத்தான்.”
தரியு ராஜா நல்ல ஒரு மனிதன் என்று சரித்திரம் கூறுகிறது. ஆனால் அவர்களுடைய பேச்சிலும், துர்ஆலோசனையிலும் அடிபணிந்து விடுகிறான் மேலும் தன்னைத் தேவனுக்குச் சமமாக அவர்கள் கருதியதால் பெருமையில் ராஜா தேவையற்ற அந்தச் சட்டத்திற்கு கையெழுத்திட்டான். அந்தக் கட்டளையின்படி ராஜாவைத் தவிர வேறு யாரிடமும், எதைப்பற்றியும் விண்ணப்பிக்கக் கூடாதென்றும், கைக்கொள்ளாதவர்களை சிங்கங்களின் கெபியில் போடப்படுவர் என்றும் சட்டம் இயற்றினார்.
தானியேலின் செயல்:
தானியேல் 6 : 10 “தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.”
ராஜா போட்ட புதிய சட்டமானது தானியேலை சிக்கலான இடத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தியது. ஆனால் இந்தப் புதிய சட்டம் இயற்றிய பின்னும், தானியேல் பயப்படவோ, அவன் ஜெபம் பண்ணும் பழக்கத்தை மாற்றவோ இல்லை. தேவனை நோக்கி ஜெபித்தான். மரண தண்டனை கிடைக்கும் என்று அறிந்திருந்தும், ஜெபத்தின் முக்கியத்துவத்தை அறிந்த தானியேல் ராஜாவுக்கும், அந்தக் கட்டளைக்கும் சிறிதும் பயப்படவில்லை. ஆட்சிகள் மாறும், ராஜாக்கள் மாறுவர், ஆனால் ராஜாதி ராஜாவின் சட்டத்துக்குத் தான் கீழ்படியவேண்டும் என்ற எண்ணத்தில் அந்தச் சட்டத்துக்குக் கீழ்ப்படியவில்லை. தானியேலின் யூத வாழ்க்கைமுறை ஏறக்குறைய இழக்கப்பட்டது. அவனது பெயர் கூட பாபிலோனிய மயமானது (தானியேல் 1 : 7). நியாயப்பிரமாணப் பலிகளைச் செலுத்தி, எருசலேம் தேவாலயத்துக்குச் சென்று தேவனைத் தொழ அவனால் முடியாது. சூழ்நிலைகளெல்லாம் எதிராக இருந்த போதும் தன் வீட்டுக்குள்ளே போய் வாக்குத்தத்த நாடாகிய எருசலேம் இருக்கும் இடத்தின் திசையை நோக்கி, ஜன்னல்களைத் திறந்து வைத்து முன் செய்தபடியே தினமும் மூன்று வேளையும் தேவனுக்கு முன்பாக முழங்கால்படியிட்டு ஜெபம் பண்ணினான்.
பிரச்சனைகள் அவனைச் சூழ்ந்து நின்ற போதும் மரண அச்சுறுத்தல் இருந்தபோதும், இந்த தினச்சடங்கை அவன் விட்டுவிடவில்லை. அறிவையும், பதவியையும், செழிப்பையும் அருளிய தேவனைத் தானியேல் மறந்து விடவில்லை. அடிமையாக பாபிலோனுக்கு வந்த தானியேல் இப்போது 62 ஆண்டுகளுக்குப் பின்பு சுமார் 80 வயதுடையவனாக இருந்த போதும் தனது தினச்சடங்கில் எந்தவித வித்தியாசமுமின்றி தொடர்ந்து கொண்டிருந்தான். தேவனுக்குப் பயந்த அவரது இதயம், தேவனுக்கு விரோதமான எந்தச் சட்டத்துக்கும் பயப்படத் தேவையில்லை என்ற தீர்மானம் எடுத்தான். பிரச்சனைகள் சூழ்ந்து நின்ற போதும் ஸ்தோத்திரம் செலுத்தத் தானியேல் தவறவில்லை. தேவனுக்காகத் துணிந்து நிற்கும் ஒரு மனிதனைத் தேவன் நிச்சயமாக அறிவார்.
தானியேலுக்கு விரோதமான குற்றச்சாட்டு:
தானியேல் 6 : 13 “அப்பொழுது அவர்கள் ராஜாவை நோக்கி சிறைப்பிடிக்கப்பட்ட யூதேயா தேசத்தின் புத்திரரில் தானியேல் என்பவன் உம்மையும் நீர் கையெழுத்து வைத்துக் கொடுத்த கட்டளையையும் மதியாமல், தினம் மூன்று வேளையும் தான் பண்ணும் விண்ணப்பத்தைப் பண்ணுகிறான் என்றார்கள்.”
மனிதர் எப்போதும் தங்களை விட ஒரு படி தாழ்வில் இருந்தால் பாராட்டுவார்கள், புகழ்வார்கள், உதவிகளைச் செய்வார்கள். ஆனால் தங்களை விட சற்று உயர்ந்திருக்கிறார்கள் என்ற நிலை வரும்போது பொறாமையால் நிறைந்து பழிவாங்கத் துடிப்பார்கள். தானியேலையும் இச்சிக்கல் சந்தித்தது. மிகுந்த தகுதியுடைய தானியேல் தேசத்தின் மூன்றாவது அதிகாரியாக பெல்ஷாத்சார் காலத்தில் உயர்த்தப்பட்டான். ஆனால் ஒரு இரவு கூட அவன் இருக்க முடியாதபடி பெல்ஷாத்சார் கொலை செய்யப்பட்டான் (தானியேல் 5 : 30). பின்பு பாபிலோனின் மேல் அரசராக தரியு அரியணையில் அமர்ந்த போதும் அவரது தகுதிக்கான பதவி தேடி வந்தது. கர்த்தரோடு நெருக்கமான உறவில் தானியேல் இருந்தபடியினால் பல ராஜாக்களின் கரங்களிலே உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தான். இதுதான் அவர்களுக்கு எரிச்சலை மூட்டும் காரியமாக இருந்தது. தானியேலிடம் பொறாமை கொண்டவர்கள் தானியேலை குற்றம் சாட்ட வழிதேடினர்.
அன்னிய மதத்தாரின் நடுவில், அவரது ஆன்மீக ஒழுக்கத்தைக் குறைவாக காட்டுவதைத் தவிர வேறு எந்த குறையையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ராஜாவை நோக்கி தாங்கள் யூதேயாவிலிருந்து சிறை பிடித்து அழைத்துவந்த தானியேல் என்பவன் ராஜாவின் சட்டத்தை மதிக்காமல், தினமும் மூன்று வேளையும் அவனுடைய தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணுகிறான் என்று கூறினார்கள். தானியேல் அந்தத் தேசத்தில் உயரதிகாரியாக இருந்த போதும், அத்தேச பொறாமைக்காரர்கள் தானியேலை சிறைபிடிக்கப்பட்ட ஒரு அந்நியன் என்றே கூறுகின்றனர். 70 ஆண்டுகளுக்கு முன் நடந்த காரியத்தைக் கூட மறவாமல் பேசுகின்றனர். விசுவாசிகளுக்கு உலகம் எப்போதும் அந்நியத்தன்மை உடையது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. பொறாமை கொண்ட அவர்கள் தானியேலுக்கு எதிராக சூழ்ச்சி செய்து அவனை அழிக்கச் செயல்பட்டனர். தரியு ராஜா கோபப்படாமல் சஞ்சலப்பட்டதை உணர்ந்த அவர்கள் ராஜா போட்ட சட்டத்தை மாற்றமுடியாது என்பதையும் தெரியப்படுத்தினர்.
ராஜாவின் கட்டளையும், நிலமையும்:
தானியேல் 6 : 14, 15 “ராஜா இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன்னில் மிகவும் சஞ்சலப்பட்டு, தானியேலைக் காப்பாற்றும்படிக்கு அவன்பேரில் தன் மனதை வைத்து, அவனைத் தப்புவதற்காகச் சூரியன் அஸ்தமிக்கு மட்டும் பிரயாசப்பட்டுக்கொண்டிருந்தான்.”
“அப்பொழுது அந்த மனுஷர் ராஜாவினிடத்தில் கூட்டமாய் வந்து: ராஜா கட்டளையிட்ட எந்த தாக்கீதும் கட்டளையும் மாற்றப்படக்கூடாதென்பது மேதியிருக்கும், பெர்சியருக்கும் பிரமாணமாயிருக்கிறதென்று அறிவீராக என்றார்கள்.”
ராஜாவுக்கு இந்த செய்தி எரிச்சலைக் கொண்டுவராமல் தன்னில் தானே சஞ்சலப்பட்டான் என்று பார்க்கிறோம். தான் போட்ட சட்டத்தைத் தன்னால் மாற்றமுடியாத நிலைமையில் தரியுராஜா இருந்தான். மாலைவரை ராஜா தானியேலைத் தப்புவிக்க வழி தேடினான். ஆனால் தரியு ராஜாவால் தான் போட்ட சட்டத்தை மாற்றி தானியேலை விடுவிக்க முடியவில்லை. ஆனால் நேபுகாத்நேச்சார் தான் போட்ட சட்டத்தை மாற்றக் கூடியவனாக இருந்தான். அரசாங்கத்தின் தரம் குறைந்து கொண்டு வந்ததை இது வெளிப்படுத்துகிறது. தானியேலை விடுவிக்க ராஜா பிரயத்தனப்படுகிறார் என்பதை அறிந்த அதிகாரிகள், ராஜாவுக்கு ராஜகட்டளை என்னவென்பதை அறிவிக்கிறார்கள். அது என்னவென்றால் போட்ட சட்டத்தை மாற்ற முடியாது என்பது தான். தரியுராஜா வேறு வழியே இல்லாமல், தானியேலை சிங்கங்களின் கெபியிலே போட வேண்டியதாயிற்று. அப்பொழுது ராஜா தலை நரைத்த விசுவாச வீரரான தானியேலைப் பார்த்து
தானியேல் 6 : 16 “அப்பொழுது ராஜா கட்டளையிட, அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து, அவனைச் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள். ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் என்றான்.”
சிங்கங்களின் கெபி பூமிக்கு கீழேயும், அதன் வாசல் பூமிக்கு மேலாகவும் இருந்தது. தட்டையான ஒரு பெரிய கல் அதன் வாசலின் மேல் போடப்பட்டு வாசல் மூடப்பட்டது. அதற்கு ராஜாவின் மோதிரத்தினாலும், பிரபுக்களின் மோதிரத்தினாலும் அதின்மேல் முத்திரை போட்டனர். ராஜாவின் முத்திரையைக் கல்லில் பதித்ததினால் அவருடைய அதிகாரத்தைப் பெறாமல் அதைத் திறக்க முடியாது. இந்த முத்திரை போட்டதற்குக் காரணம் தானியேலை ராஜா தப்பிக்க முயலுகிறார் என்பதை அவர்கள் புரிந்து கொண்டதால், தானியேலைத் தப்புவிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் கெபியின் வாசலில் வைக்கப்பட்ட கல்லுக்கு முத்திரையிட்டனர். தானியேலின் தேவனை ராஜா மதிக்கத் தொடங்கியிருந்தான். எனவே தனது ஆணையை எழுத்தின்படி ராஜா நிறைவேற்றி விட்டு தேவன் தானியேலை விடுவிப்பார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாகத் தானியேலை நோக்கி “நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார்.” என்றான்.
தரியு ராஜா தானியேலின் வாழ்விலும், அவனது நண்பர்களின் வாழ்விலும் என்னவெல்லாம் தேவன் செய்தார் என்பதை அறிந்திருந்தான். சர்வவல்லமையுள்ள தேவன் தானியேலை விடுவிக்க வல்லமை உள்ளவர் என்பதை ஓரளவு உணர்ந்திருப்பான் என்று கூறலாம். மேலும் தானியேல் தேவனுக்கு எவ்வளவு உண்மையுள்ளவன் என்பதை அறிந்திருந்ததாலும் இவ்வாறு கூறினான். அதன்பின் ராஜா தன்னுடைய அரண்மனைக்குப் போய், தான் படுக்குமுன் வாசிக்கக்கூடிய கீதவாத்தியங்களையும் வேண்டாம் என்று கூறி போஜனம் பண்ணாமலும், இரவு முழுவதும் தூக்கம் வராமலும் அதிகாலைவரை காத்திருந்தான். சிங்கம் மிகவும் கொடூரமான மிருகம். ஆனால் அதற்குள் போட்ட போதும் தானியேல் சிறிதும் பயப்படவோ கதறவோ இல்லை. சிங்கக்கெபியில் போடப்பட்ட அந்த சிங்க இதயம் கொண்ட விசுவாச வீரரான தானியேல் வாய் கட்டப்பட்ட சிங்கங்களுடன் இரவைச் செலவிட்டான். கர்சிக்கும் சிங்கங்கள் அவனுக்குப் பாதுகாத்ததே தவிர பயமுறுத்தவில்லை. — தானியேல் 6 : 17,18
ராஜாவும், சிங்ககெபியிலிருந்த தானியேலும்:
தானியேல் 6 : 19 – 22 “காலமே கிழக்கு வெளுக்கும் போது ராஜா எழுந்திருந்து, சிங்கங்களின் கெபிக்குத் தீவிரமாய்ப் போனான்.”
“ராஜா கெபியின் கிட்டவந்தபோது, துயரச்சத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு: தானியேலே ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான்.”
“அப்பொழுது தானியேல் ராஜாவே நீர் என்றும் வாழ்க.”
“சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்.”
ராஜாவுக்கு தானியேல் மேலிருந்த அக்கறையினாலும், அவனுக்கு என்ன நடந்ததோ என்ற கவலையினாலும் அதிகாலையில் தானே சிங்கங்களின் கெபிக்குத் தீவிரமாகப் போய் துயரத்துடன் தானியேலை அடைமொழியுடன் “தானியேலே ஜீவனுள்ள தேவனுடைய தாசனே” என்று அழைத்ததைப் பார்க்கிறோம். மேலும் “நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்கு தப்புவிக்க வல்லவராயிருந்தாரா” என்று கேட்டான். தானியேல் பதில் கூறுவான் என்ற எதிர்பார்ப்போடு கேட்டாரோ இல்லையோ, ஆனால் தானியேல் பதில் கூறினான். ராஜா என்றும் வாழ்க என்று தானியேல் முதலில் கூறினான். அவ்வாறு கூறியது முகஸ்துதிக்காக கூறப்பட்ட வார்த்தை அல்ல. ராஜாவுக்கு கொடுக்க வேண்டிய மரியாதைக்காக கூறப்பட்ட வார்த்தை. தானியேல் ராஜாவிடம் தான் தேவனுக்கு முன்பாகக் குற்றமற்றவனாய் இருந்ததாலும், ராஜாவாகிய உமக்கு நீதிகேடு ஒன்றும் தான் செய்யாததாலும், தேவன் தம்முடைய தூதனை அனுப்பி சிங்கங்களின் வாயைக் கட்டிப்போட்டார் என்றான். தானியேலின் நண்பர்களான சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவின் விசுவாசத்தைப் பார்த்து அக்கினியில் உலாவின தேவனே, தானியேலின் விசுவாசத்தையும் கனப்படுத்தி சிங்கக்கெபியில் அவரோடு கூட இருந்து சிங்கங்கள் சேதப்படுத்தாதபடி காத்தவர்.
ராஜா போட்ட அடுத்த கட்டளை:
தானியேல் 6 ; 23, 24 “அப்பொழுது ராஜா தன்னில் மிகவும் சந்தோஷப்பட்டு, தானியேலைக் கெபியிலிருந்து தூக்கிவிடச் சொன்னான்; அப்படியே தானியேல் கெபியிலிருந்து தூக்கிலிடப்பட்டான். அவன் தன் தேவன்பேரில் விசுவாசித்திருந்தபடியால், அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை.”
“தானியேலின்மேல் குற்றச்சாற்றின மனுஷரையோவென்றால், ராஜா கொண்டுவரச்சொன்னான். அவர்களையும் அவர்கள் குமாரரையும் அவர்கள் மனைவிகளையும் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள்; அவர்கள் கெபியின் அடியிலே சேருமுன்னே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, அவர்களின் எலும்புகளையெல்லாம் நொறுக்கிப் போட்டது.”
ராஜா தானியேலை மிகவும் நேசித்தபடியினால் அவன் பாதுகாக்கப்பட்டதைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தான். தானியேல் விசுவாசத்தினால் பாதுகாக்கப்பட்டான் என்பதை எபிரேயர் 11 : 33 ல் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். ராஜா தானியேலைக் கெபியிலிருந்து தூக்கிவிடக் கட்டளையிட்டான். தானியேலை அனைவரும் பார்த்தபோது அவனுடைய உடம்பில் சிறுநகக் கீறல் கூட இல்லை. அவனது உடம்பிலும் எந்த சேதங்களும் காணப்படவில்லை.
தானியேலுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்த அனைவரையும், அவர்கள் குடும்பத்தோடு சிங்ககெபியில் போட ராஜா கட்டளையிட்டார். இப்பொழுது தானியேலோடு கெபிக்குள் இருந்த சிங்கங்கள், தங்கள் உண்மையான குணங்களைக் காட்டியது. அவர்கள் கெபியின் அடியிலே போய்ச் சேருவதற்குள் சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து அவர்களின் எலும்புகளை எல்லாம் நொறுக்கிப் போட்டது.
தரியு ராஜாவின் சாட்சி:
தானியேல் 6 : 25, 26 “ பின்பு ராஜாவாகிய தரியு தேசமெங்கும் குடியிருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஜாதியாருக்கும் பாஷைக்கார ருக்கும் எழுதினது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது.”
“என் ராஜ்ஜியத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்று என்னாலே தீர்மானம் பண்ணப்படுகிறது; அவர் ஜீவனுள்ள தேவன், அவரே என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்ஜியம் அழியாதது. அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும்.”
தரியு ராஜா தனது சொந்த சாட்சியைத் தான் ஆட்சி செய்த நாடுகள் அனைத்திற்கும் எழுதி அனுப்பினான். நேபுகாத்நேச்சார் கண்டு கொண்ட அதே சமாதானத்தை தரியுவும் கண்டுகொண்டான். கடந்த இரவில் தூக்கம் வராமல் துடித்துக் கொண்டிருந்த ராஜாவிடமிருந்து சமாதானத்துடன் சாட்சி கடிதம் போனது. தரியு ராஜா ஜனங்களிடம் தானியேலின் தேவனுக்கு பயப்பட வேண்டுமென்றும், அவரே ஜீவனுள்ள தேவன் என்றும், என்றென்றும் நிலைத்திருக்கிற தேவன் என்றும், அவருடைய ராஜ்யம் என்றும் அழியாத ராஜ்யம் என்றும், அவருடைய கர்த்துவத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும் என்றும் அறிக்கை செய்கிறான். தானியேலை சிங்கக்கெபியில் காக்கப்பட்ட சம்பவத்தின் மூலம் தரியு ராஜா கர்த்தரை அறியும் அறிவுக்குள் வந்தான் என்று அறிகிறோம்.
தானியேலின் குணநலன்கள்:
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…
View Comments
Very nice and useful message