நூலகம்

யோவேல் புத்தகத்தின் விளக்கம்

யோவேல் புத்தகத்தின் ஆக்கியோனை பற்றி

  • யோவேல் என்ற பெயரின் அர்த்தம் “தேவனே கர்த்தர்”
  • யோவேலின் தகப்பன் பெத்துவேல் (அவனைக் குறித்து வேறு தகவல் இல்லை) என்பதை தவிர யோவேல் குறித்து வேறு தகவல் இல்லை.
  • அவன் யூதாவை சேர்ந்தவன்
  • எருசலேமைக் குறித்து பேசியிருப்பதால் அவன் எருசலேமை சேர்ந்தவனாயிருக்கலாம்.
  • யோவேலைக் குறித்து புதிய ஏற்பாட்டில் மாத்திரமே ஒரு முறை மேற்கோள் காட்டப்படுகிறது (அப் 2:16-21)

வரலாற்றில் இந்தப் புத்தகத்தின் இடம்

  • மற்றைய தீர்க்கதரிசிகளைப்போல தான் எந்தக்காலத்தில் தீர்க்கதரிசனம் உரைக்கிறேன் என்பதை யோவேல் தெரியப்படுத்தவில்லை.
  • அவனது தீர்க்கதரிசன ஊழியம் எந்த ராஜாவின் காலத்தில் நடக்கிறது என்பதை தெரியப்படுத்தவில்லை.
  • அவ்வாறு அவன் தெரியப்படுத்தாததற்கு யூதாவில் ஒரே ஒரு ராணியாக இருந்து கிமு 835ல் ஆட்சிசெய்த அத்தாலியாளின் நாட்களில் அவன் ஊழியம் செய்ததுதான் காரணம் என்று வாதம் வலுவாக முன்வைக்கப்படுகிறது.
  • யோவாஸ் அவனது எழு வயதில் ராஜாவானபோது இருந்த அரசாங்கம் முதியோர்களாலும். ஆசாரியர்களாலும் நடத்தப்பட்டிருந்தது. யோவேல் அவர்களை விளித்து தீர்க்கதரிசனம் உரைத்ததை சுட்டிக்காட்டி இந்த வாதத்தை வலுவூட்டுகிறார்கள். (1:2, 2:16, 1:9, 1:13, 2:17)
  • அத்தாலியாளின் மரணத்திற்கு பின்பு பேரனான சிறுவன் யோவாஸ் பதவிக்கு வந்தான்.
  • யோவாஸ் சிறுவனாயிருந்ததினால் அவன் பெரியவனாகும் வரையில் ஆசாரியனான யோய்தா ஆட்சியை கவனித்துக்கொண்டான்.
  • இந்த காலகட்டத்தில் யோவேல் தீர்க்கதரிசனம் உரைத்திருந்ததால் எந்த ராஜாவின் பெயரும் குறிப்பிடப்படவில்லை.
  • இவற்றை கருத்தில்கொண்டு பார்க்கும்போது சுமாராக கிமு 835ம் ஆண்டிலோ அல்லது அதற்கு மிகவும் அண்மித்த காலத்திலோ யோவேல் தீர்க்கதரிசனம் உரைத்திருக்க வேண்டும். இது தீர்க்கதரிகளில் இவரை முன்னோடியாக கருத இடமண்டாக்குகிறது. எலிசா இவரது சமகாலத்தவர்.

இந்தப் புத்தகத்தின் நோக்கம்

யூதாவின் குடிகளையும், எருசலேமின் குடிகளையும் தேசத்தின் பேரழிவின் காலத்தில் புலம்பலோடும், அழுகையோடும் கர்த்தரிடத்தில் திரும்புங்கள் என்று யோவேல் அழைக்கிறார்.

  • வெட்டுக்கிளிகள் திராட்சை செடிகளையும் (1:5,7,12) தானிய விளைச்சலையும் அழித்துப்போட்டன (1:10)
  • இதனால் ஆலயத்தில் பலிசெலுத்தப்பட முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் உண்டானது (1:9,13,16)

இந்தப் புத்தகத்தின் மூன்று நோக்கங்கள்

  1. யூதாவின் மேலும் மற்ற தேசங்கள் மேலும் கர்த்தருடைய நாளில் வரவிருக்கும் கடுமையான தண்டனையைக் குறித்து எச்சரித்தல்.
  2. யூதாவை தனது பாவங்களைவிட்டு மனந்திரும்ப அழைப்பது.
  3. தேசத்தின் மேல் மறுசீரமைப்பின் காலம் வரும் என’பதை அறிவிப்பது.
  • இஸ்ரவேலின் பாவங்கள் இன்னதென்று குறிப்பாக சொல்லப்படவில்லை. ஆனாலும் நடந்த சம்பவங்களின் விளைவுகள் பாவங்கள் இருந்தன என்பதை காண்பிக்கின்றன.
  • தேவன் ஒருநாளில் எல்லா தீமைகளையும் அகற்றி புதிய சிருஷ்டிப்பை உருவாக்குவார்.
  • ஆனால் இந்த அழிவின் மத்தியிலும் அவரை நம்பியிருக்கிறவர்களுக்கான முடிவில்லாத பாதுகாப்பை அவர் அருளுவார்.

உண்மையான மனந்திரும்புதல் 2:12-13

  1. உண்மையான மனந்திரும்புதல் என்பது தேவனிடத்திற்கு திரும்புதல், அதாவது நமது பாவங்களைவிட்டு திரும்புதல்.
  2. உண்மையான மனந்திரும்புதல் என்பது முழு இருதயத்தோடும் செய்யப்படுவது, அதாவது தேவனிடத்தில் நம்மை ஒப்பவிக்க நாம் செய்யவேண்டிய யாவற்றையும் செய்வது. உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, தங்கள் துக்கத்தை வெளிப்படுத்த யூதர்கள் வஸ்திரத்தை கிழிப்பது வழக்கம். ஆனால் இருதயத்தை கிழிக்காமல் வஸ்திரத்தை கிழிக்க முடியும்.
  3. உண்மையான மனந்திரும்புதல் என்பது செய்கையுடனும் (உபவாசத்தோடு) உணர்வுடனும் (அழுகையோடும். புலம்பலோடும்) இருக்க வேண்டும். எல்லா மனந்திரும்புதலிலும் உபவாசமும், அழுகையும் இராவிட்டாலும், செய்கையும் உணர்வும் இல்லாதிருக்குமானால் அது உண்மையான மனந்திரும்புதலாக இருப்பதில்லை.

இந்தப் புத்தகத்தின் முக்கிய பகுதிகள்

  1. கர்த்தருடைய நாளின் அனுபவம்

வரலாற்றில் (1:1-20)

  • செய்தியின் மூலம் 1:1
  • அழிவைக் குறித்து சிந்திக்க கட்டளை கொடுக்கப்பட்டள்ளது 1:2-4
  • அழிவின் ப10ரணம் 1:5-12
  • அழிவின் பின்னணியில் மனந்திரும்ப அழைப்பு 1:13-20
  1. கர்த்தருடைய நாளின் விளக்கம்

பாரம்பரியம் (2:1-17)

  • எக்காளத்தை ஊது 2:1
  • இராணுவ படையெடுப்பு 2:2-11
  • அறிவுரையும், மனந்திரும்புதலும் 2:12-12
  1. கர்த்தருடைய நாளின் விபரிப்பு

கடைசிக்காலம் (2:18-3:21)

  • அறிமுகம் 2:18-20
  • பொருளாதார மறுசீரமைப்பு 2:21-27
  • ஆவிக்குரிய மறுசீரமைப்பு 2:28-32
  • தேசிய மறுசீரமைப்பு 3:1-21

இந்த யோவேல் புத்தகத்தின் கண்ணோட்டம் / விளக்கம், ACA Avadi சபையின் போதகர் திரு. Gabriel Thomasraj அவர்களின் PDF பதிவிலிருந்து எடுக்கப்பட்டது. Pastor. Gabriel Thomasraj அவர்களுக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறோம்.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

3 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

3 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

3 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

3 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

3 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

3 months ago