நூலகம்

ஓசியா புத்தகத்தின் விளக்கம்

ஓசியா புத்தகத்தின் ஆக்கியோனை பற்றி

  • ஓசியா என்ற பெயரின் அர்த்தம் “இரட்சிப்பு”
  • எசேக்கியா ராஜாவின் ஆரம்ப நாட்களில் எழுதப்பட்டது.
  • ஓசியாவைக் குறித்து வேதாகமத்தின் வேறுபுத்தகங்களில் எழுதப்படவில்லை.
  • அவனது தப்பனின் பெயர்: பெயெரி (1:1)
  • அவனது மனைவியின் பெயர்: கோமேரி (1:3)
  • அவனுக்கு இரண்டு குமாhரர்களும் ஒரு குமாரத்தியும் இருந்தார்கள்
  • ஓசியாவிற்கும் கோமேருக்கும் பிறந்த பிள்ளைகளுக்கு தேவனே இஸ்ரவேலுக்கு அடையாளங்களாக இருக்கும்படியான பெயர்களை வைத்தார்.
  • யெஸ்ரயேல் – “தேவன் சிதறடிக்கிறவர்”
  • லோருகாமா – “இரக்கஞ்செய்வதில்லை”
  • லோகம்மீ – “நீங்கள் என் ஜனமல்ல”
  • அவனது ஊழியம் அரை நூற்றாண்டுகள் நீடித்திருந்தது.
  • இஸ்ரவேல் சிறைப்பட்டுப்போகும் என்று அவன் சொன்ன தீர்க்கதரிசனம் அவனது வாழ்நாள் காலத்திலேயே நிறைவேறியது.

வரலாற்றில் இந்தப் புத்தகத்தின் இடம்

  • யூதாதேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் குமாரனாகிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெயாம் என்பவனின் நாட்களிலும் பெயேரியின் குமாரனாகிய ஓசியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம். (1:1)
  • ஓசியா முதலில் யூதாவின் ராஜாவையும் இறுதியில் இஸ்ரவேலின் ராஜாவையும் குறிப்பிட்டிருந்தபோதும் அவன் தெற்கு இராஜ்யத்தின் தீர்க்கதரிசியாக இருந்தான்.
  • தெற்கு இராஜ்யத்தின் கோத்திரங்களில் எப்பிராயீம் பெரிய கோத்திரமாய் இருந்ததால் அந்த இராஜ்யம் எப்பிராயீம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
  • அவனது ஊழியம் உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா ஆகிய யூதாவின் நான்கு ராஜாக்களின் காலத்திலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாஸின் நாட்களிலும் நடந்தது.
  • ஆமோஸ் இவனது சமகாலத்தில் தெற்கு இராஜ்யத்தில் தீர்க்கதரிசன ஊழியம் செய்தார்.
  • மீகாவும், ஏசாயாவும் இவனது சமகாலத்தில் வடக்கு இராஜ்யத்தில் தீர்க்கதரிசன ஊழியம் செய்தார்கள்.

இந்தப் புத்தகம் குறித்த ஒரு பார்வை

  • இந்தப் புத்தகம் ஒசியாவின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவனது அனுவங்களின் வழியாக இஸ்ரவேலின் நிலையை எடுத்துரைக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த புத்தகம்.
  • தெற்கு இராஜ்யம் சிறையாக்கப்பட்டபோது யூதாவிற்கு எரேமியா எப்படியிருந்தாரோ அவ்வாறே ஒரு நூற்றாண்டிற்கு முன்பதாக வடக்கு இராஜ்யம் சிறையாக்கப்பட்டபோது இஸ்ரவேலிற்கு ஓசியா இருந்தார்.
  • இருவருமே நெஞ்சைநெகிழ வைக்கும் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பேசினார்கள்.
  • ஒசியாவின் அனுபவம் வீட்டிலும், எரேமியாவின் அனுபவம் நாட்டிலும் நடந்தது.
  • எரேமியாக்கு திருமணம் செய்யக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது. ஓசியாவோவுக்கு ஒரு வேசியை திருமணம்செய்துகொள்ள வலியுறுத்தப்படுகிறது.
  • ஒரு சோரஸ்திரீயை உன்னிடமாகச் சேர்த்துக்கொள்; (1:2)
  • அவன் கோமேரை திருமணம் செய்துகொண்டான். அவள் இவனுக்கு இரண்டு குமாhரர்களையும் ஒரு குமாரத்தியையும் பெற்றாள்.
  • அவள் திரும்பவும் சோரமார்க்கமாய் நடந்ததால் ஓசியா அவளை வீட்டைவிட்டு வெளியேற்றினான்.
  • ஆனால் உண்மையில்லாத சோரம்போனவளை திரும்பவும் சேர்த்துக்கொண்டு அவளை நேசிக்கும்படி கர்த்தர் ஓசியாவிற்கு சொன்னார்.
  • ஓசியாவின் இந்தச் செய்கையின் வாயிலாக கர்த்தர் அவனுக்கு சொன்னது “இப்போது இஸ்ரவேலிடத்தில் எனக்காக பேச நீ ஆயத்தமாகிவிட்டாய். இஸ்ரவேலோ என்னை விட்டுச் சோரம்போனது ஆனாலும் நான் அவளை நேசித்து அவளை அவளுடைய தேசத்திற்கு திரும்பிவரப்பண்ணுவேன்.’’
  • இந்தப் புத்தகத்தின் மையக்கருத்து “கர்த்தரிடத்திற்கு திரும்புங்கள்”
  • கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார். (6:1)
  • “திரும்புங்கள்” என்ற வார்த்தை பதினைந்து தடவைகள் வருகிறது. ஆவிக்குரிய சோரம்போகுதலை சொல்லுவதோடு உண்மையாயிருத்தல், மன்னிப்பு, அன்பு என்பவைகளையும் காண்பித்தலே இந்த புத்தகத்தின் நோக்கம்.
  • இந்தப் புத்தகம் தண்டித்தல், மறுசீரமைத்தல் என்கிற வட்டப்பாதையில் ஐந்து வட்டங்களாக திரும்ப திரும்ப ஒரு கருத்தை வலியுறுத்துகிறது. தேவன் பாவத்திற்கான தண்டனையை வழங்கினாலும், தனது ஜனங்களை மீண்டும் தம்மிடமாய் எப்பொழுதும் சேர்த்துக்கொள்வார் என்பதே அந்த கருத்து.
  • பொய்யுரைத்தல், நன்றியில்லாதிருத்தல், விக்கிரகவழிபாடு செய்தல், கொலை செய்தல், இச்சித்தல் ஆகிய இஸ்ரவேலின் பாவத்தை விளக்க பல உவமானங்கள் காட்டப்படுகின்றன.

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

இந்தப் புத்தகத்தில் வெளிப்படுத்தபடும் தேவனுடைய சுபாவங்கள்

  • அவரது பரிசுத்தம் (அதி 4-7)
  • அவரது நீதி (அதி 8-10)
  • அவரது அன்பும் இரக்கமும் (அதி 11-14)

ஓசியாவின் முக்கிய பகுதிகள்

  1. தனிப்பட்ட வாழ்க்கை

தீர்க்கதரிசியும் அவனது உணமையில்லாத மனைவி கோமேரும் அதி 1-3

  • கோமேர் என்னும் சோரஸ்திரியை திருமணம் செய்துகொள்ளல் அதி 1
  • கோமர் உண்மையாயில்லை என்பதை நிரூபிக்கிறாள். இஸ்ரவேல் உண்மையாய்யில்லை என்பதை நிரூபித்தது. தேவனோ தாம் உண்மையுள்ளவர் என்பதை நிரூபிக்கிறார் அதி 2
  • கோமரை மீண்டும் சேர்த்துக்கொள்ள ஓசியா கட்டளையிடப்படுகிறான் அதி 3
  1. தீர்க்கதரிசன வாழ்க்கை

தேவனும் உண்மையில்லாத தேசமான இஸ்ரவேலும் அதி 4-14

A. இஸ்ரவேல் சோரம்போதல் அதி 4-5

  • இஸ்ரவேலில் அக்கிரமம,; ஓழுக்கக்கேடு, கர்த்தரின் வார்த்தையை அசட்டை செய்தல், விக்கிரக வழிபாடு போன்ற பாவங்கள் இருந்தன அதி 4
  • இஸ்ரவேல் கர்த்தரை விட்டு விலகினது: கர்த்தர் இஸ்ரவேலை விட்டு விலகினார். இஸ்ரவேலில் சீரழிவு உண்டாயிற்று அதி 5

B. தனது தற்காலப் பாவங்களுக்காக தண்டிக்கப்படும்:

  • கடைசிநாட்களில் இஸ்ரவேல் (எப்பிராயீம்) திரும்பும் அதி 6

C. இஸ்ரவேல் (எப்பிராயீம்) தன்னை நேசிக்கிற தேவனிடத்திற்கு திரும்பினால் தண்டனைக்குத் தப்பும் (11:8) அதி 7-12

  • இஸ்ரவேல் (பேதையான புறா) எகிப்தியரிடத்திற்கும், அசீரியரிடத்திற்கும் திரும்புகிறது அதி 7
  • இஸ்ரவேல் பாவம்செய்ய பொன் கன்றுகுட்டிகளிடத்திற்கும், அதன் பலிபீடங்களிடத்திற்கும் திரும்புகிறது அதி 8
  • இஸ்ரவேல் (பின்வாங்கும் கிடாரி) தேசத்தின் செழிப்பிற்கு திரும்புகிறது. தேசத்திலிருந்து துரத்திவிடப்படும் அதி 9-10
  • இஸ்ரவேல் தேவனை விட்டுத் திரும்பினது- அது தண்டிக்கப்படும். தேவன் அதை கைவிடமாட்டார் அதி 11-12

D. இஸ்ரவேல் (எப்பிராயீம்) கடைசிநாட்களில் விக்கிரகங்களை விட்டு கர்த்தரிடமாய் திரும்பும் அதி 13,14

  • இஸ்ரவேல் தற்போது தண்டிக்கப்படும் அதி 13
  • இஸ்ரவேல் எதிர்காலத்தில் இரட்சிக்கப்படும் அதி 14

இந்த ஓசியா புத்தகத்தின் கண்ணோட்டம் / விளக்கம், ACA Avadi சபையின் போதகர் திரு. Gabriel Thomasraj அவர்களின் PDF பதிவிலிருந்து எடுக்கப்பட்டது. Pastor. Gabriel Thomasraj அவர்களுக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறோம்.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago