கலிலேயாவில் நாசரேத் என்னும் ஊரில் தாவீதின் வம்சத்தில் வந்த யோசேப்புக்கு மரியாள் என்னும் கன்னிகை நியமிக்கப்பட்டிருந்தாள், காபிரியேல் என்னும் தூதன் மரியாளைப் பார்த்து

லூக் 1:30-33

  • “மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.”
  • “இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.”
  • “அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.”
  • “அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.”

மரியாள் தேவதூதனிடம் “இது எப்படியாகும்? புருஷனை அறியேனே” என்றாள். அதற்கு தூதன்:

  • லூக் 1:35 “பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.”

என்றான். மேலும் மரியாளின் இனத்தாளாகிய எலிசபெத்து தனது வயதான காலத்தில் கருவுற்றிருக்கிறாள். அவளுக்கு இது ஆறாம் மாதம் என்றும் “தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை” என்றும் தூதன் கூறவே “இதோ நான் ஆண்டவருக்கு அடிமை” என்று மரியாள் தன்னைத் தாழ்த்தினாள். மரியாள் கர்ப்பம் தரித்த காரியம் யோசேப்புக்குத் தெரிந்ததவுடன் வெளியே சொல்லாமல் மரியாளை இரகசியமாய் தள்ளிவிட நினைத்தான். அந்நேரத்தில் தூதன் அவன் சொப்பனத்தில் தோன்றி

  • மத் 1:20,21 “உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.”
  • “அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிப்பார் என்றான்.”

அதற்குப் பின் மரியாளைத் தள்ளிவிடுவதைக் குறித்து யோசிக்காமல் பிள்ளை பிறக்கும் வரை அவளை அறியாமலிருந்தான். யோசேப்புக்குக் மரியாளுக்கும் இயேசுவுக்குப் பின் பிள்ளைகள் இருந்ததால் முதற்பேறான குமாரன் என்றழைக்கப்பட்டார். யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இயேசுவின் சகோதரர்கள் – மத் 14:55, லூக் 2:7.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago