இயேசு “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது” என்கிறார். உலகின் ஒளியாகிய இயேசுவின் ஒளி, சூரியனின் ஒளி நிலவில் பிரதிபலிப்பதைப் போல நம்மில் பிரதிபலிப்பதால் நாம் உலகிற்கு ஒளியாயிருக்கிறோம். நமது வாழ்க்கை மற்றவர்களுக்கு வழிகாட்டுவதாக, முன்மாதிரியாக அமைய வேண்டுமென்று கர்த்தர் எதிர்பார்க்கிறார்.
விளக்கைக் கொளுத்தி மரக்காலில் மூடிவைத்தால் வெளிச்சம் தராது. விளக்குத் தண்டின் மேல் வைக்கும் பொழுது அது எல்லோருக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும். நாம் நற்செயல்கள் செய்யத் தவறும்போது, தவறுகளுக்கு ஒத்துப்போகும்போது, பாவத்தினால் கரைபடும் பொழுது, நற்செய்தியை அறிவிக்கும் வாய்ப்பைத் தள்ளிவிடும்போது, உண்மையாகாகத் தைரியமாக நிற்காதபோது விளக்கை மரக்காலில் மூடுகிறவர்களாக இருக்கிறோம்.
மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். ஆனால் நாம் செய்யும் நன்மைகள் யாவருக்கும் தெரிய வேண்டும்.என்பதற்காக விளம்பரப்படுத்தலாகாது – மத்தேயு 6 : 1 – 4 நமது நற்கிரியைகளின் நோக்கம் பரலோக பிதாவை மகிமைப்படுத்துவதாக அமைய வேண்டும்.
விளக்குத் தண்டின் மேல் ஏற்றி வைத்த விளக்கைப் போல நாம் நம்முடைய கிரியைகளால் பிறருக்கு ஒளியூட்டுகிறவர்களாகத் திகழ வேண்டும்
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…