1. காலேப்: யோசுவாவிடம் மலைநாட்டை கேட்டு வாங்கி எதிரிகளைத் துரத்துவேன் என்றார் – யோசு 14:12
2. யோனத்தான்: தைரியமாக எதிரிகளை தாணையத்துக்குள் சென்றான் – 1சாமு 14:6
3. தாவீது: பெலிஸ்தியனான கோலியாத்தை தைரியமாகச் சென்று யுத்தம் பண்ணுவேன் என்றான் – 1சாமு 17:32
4. நெகேமியா: எருசலேமின் அலங்கத்தை தைரியமாக அங்கு சென்று கட்டினான் – நெகே 6:11
5. பாபிலோனிலுள்ள தானியேலின் நண்பர்கள்: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூன்று பெரும் தைரியமாக தேவன் நம்மைத் தப்புவிப்பார் என்ற எண்ணத்தோடு அக்கினிச் சூளையில் இறங்கினர் – தானி 3:16, 17
6. தானியேல்: ராஜாவைத்தவிர யாரை வணங்கினாலும் சிங்கக்கெபிக்குள் போடுவார்கள் என்று தெரிந்த பின்பும் மூன்று வேளையும் கர்த்தரை ஆராதித்து சிங்கக்கெபிக்குள் சென்று தேவனால் சிங்கம் சேதப்படுத்தாமல் வெளியே வந்தான் – தானி 6:10
7. கிறிஸ்து: கிறிஸ்து சிலுவையிலறைய ஒப்புக்கொடுத்தவுடன் பிலாத்து இயேசுவை நோக்கி “விடுதலை பண்ண எனக்கு அதிகாரம் உண்டென்று உனக்குத் தெரியாதா” என்றான். ஆனால் இயேசுவோ அஞ்சாநெஞ்சுடன் “பரத்திலிருந்து உனக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உனக்கு ஒரு அதிகாரமும் இராது என்றார்.” – யோ 19:10, 11
8. பேதுரு, யோவான்: எருசலேமில் இருவரும் தைரியமாக இயேசுவைப் பற்றி பிரசங்கித்தனர் – அப் 4:13
9. அப்போஸ்தலர்கள்: அப்போஸ்தலர்கள் தேவவசனத்தைத் தைரியமாகப் பிரசங்கித்தனர் – அப் 4:31
10. பவுல்: பவுல் தைரியமாக இயேசுவைப் பற்றி பிரசங்கம் பண்ணி கிரேக்கர்களுடன் தர்க்கித்தான் – அப் 9:29
11. பவுலும், பர்னபாவும்: இருவரும் அகோனியா பட்டணத்தில் தேவவசனத்தை தைரியமாகப் பிரசங்கித்தனர் – அப் 14:3
12. அரிமத்தியா யோசேப்பு: தைரியமாகப் பிலாத்துவினிடத்தில் போய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டு வாங்கினான் – மாற் 15:43
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…