1. மோசே தேவனால் தெரிந்தெடுக்கப்பட்டவன் – யாத் 3:2, 7-10, உபா 7:6 அதேபோல் நாமும் தேவனால் தெரிந்தெடுக்கப்பட வேண்டும்.
2. மோசே பல தடவை தேவ தரிசனம் பெற்றான் – யாத் 3:2, 34:28 –35
நாமும் தேவ தரிசனம் பெற ஜெபிக்க வேண்டும்.
3. மோசே தேவ சத்தம் கேட்டு அதற்குக் கீழ்ப்படிந்திருந்தான் – யாத் 4:1-20
நாமும் மோசேயைப் போல தேவ வார்த்தைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும்.
4. மோசே தேவனால் பெயர் சொல்லி அழைக்கப்பட்டவன் – யாத் 3:4, 33:12,17
நாமும் மோசேயைப் போல தேவனால் அழைக்கப்பட வாஞ்சிக்க வேண்டும்.
5. மோசே தேவனால் அனுப்பப்பட்டவனாயிருந்தான் – யாத் 3:10, 7:16, உபா 34:10
நாமும் என்னையும் ஊழியத்திற்கு அனுப்பும் என்று கேட்க வேண்டும்.
6. மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன் – எண் 12:7, எபி 3:2
நாமும் தேவனுக்கு உண்மையாக நடக்க வேண்டும்.
7. மோசே விசுவாசத்தில் பெரியவனயிருந்தான் – எபி 11:24-28
நாமும் விசுவாசத்தில் வளர வேண்டும்.
8. மோசே நியாயப்பிரமாணத்தைப் பெற்றவனும், அதற்குக் கீழ்ப்படிகிறவனுமாயிருந்தான் – உபா 5:1-33, 6:1-25,
நாமும் தேவகட்டளைக்குக் கீழ்படிய வேண்டும்.
9. மோசே ஜனங்களோடு துன்பம் அனுபவிப்பதைத் தெரிந்து கொண்டான். இனி வரும் பலன் மேல் நோக்கமாயிருந்தான் – எபி 11:26
நாமும் தேவன் நமக்கு வைத்திருக்கும் ஜீவகிரீடத்தைப் பெற முயற்சிக்க வேண்டும்.
10. மோசே மிகுந்த சாந்தமுள்ளவனாயிருந்தான் – எண் 12:3
நாமும் சாந்த குணமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
11. மோசே தேவனுடைய சிநேகிதனாயிருந்தான் – யாத் 33:11
நாமும் தேவனுடைய சிநேகிதனாக மாற வேண்டும்.
12. மோசேயின் கை பரிதானம் வாங்காத சுத்த கையாக இருந்தது – எண் 16:14,15
நம்முடைய கையும் மோசேயின் கையைப் போல சுத்தமானதாக இருக்க வேண்டும்.
13. மோசே தேவனிடத்திலிருந்து நற்சாட்சி பெற்றவன் – எண் 12 :7, 8
நாமும் தேவனிடம் நற்சாட்சி பெற வேண்டும்.
14. மோசே தேவனுக்காக பாவ சந்தோஷங்களையும், பட்டம், பதவிகளையும் வெறுக்கிறவனாயிருந்தான் – எபி 11:25, 26
நாமும் உலகத்திலிருந்தது வேறுபட்டவர்களாக விளங்க வேண்டும்.
15. மோசே ஜனங்களுக்காக வேண்டுதல் செய்தான் – யாத் 32:11-14
நாமும் பாவத்தில் வாழ்கிறவர்கள் மனந்திரும்ப ஜெபிக்க வேண்டும்.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago