பாவம் விலக்கப்படும்போது உலகின் சிக்கல்கள் தாமாகவே விலகிக் கொள்ளும். முள்ளும் குறுக்கும் சாபத்தின் விளைவுகள் – ஆதி 3:18 பாவசாபத்தை முற்றும் உறிஞ்சிக் குடித்து நீக்க வந்த கிறிஸ்து முட்களைக் கிரீடமாகச் சூடி, அதன் கூறிய முனைகளால் நொந்து அலறி நித்திய மீட்பை ஆயத்தம் செய்தார் – மத் 27:29, 30 பூமி மீட்கப்படும்போது முட்கள் மாற்றப்படும். அங்கு தேவதாருக்கள் தோன்றும். காஞ்சொறிகள் இடம் பெயரும். அங்கு மெல்லிய மிருதுச்செடி எழும்பும் – ஏசா 55:13 மனிதர்களின் பேச்சுகள் பல நேரங்களில் முட்களாகவே அமைகின்றன. ஆனால் கிறிஸ்துவுடன் சரியான உறவுடன் வாழும் ஒருவரின் நிலை வேறுபட்டது. அவர்களுடைய சொற்களும், செயல்களும் சுவையானவையும், பயனுடையவையு மாகும் – கொலோ 4:6 விலைமதிப்புடைய தேவதாரு மரத்தைப் போல அவர்கள் வாழ்வு சமூகத்துக்கு மதிப்புடையதாக இருக்கும். மிருதுச்செடிபோல அது மென்மையானது. மனமும், மகிமையும் மிக்கதாக அது விளங்கும். கிறிஸ்துக்குரியோரும் மேன்மையானவர்களும், நறுமணத்தை வாரியிரைப்போருமாவார் – 2கொரி 2:14 – 16
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…