1. நோவா திராட்சரசம் குடித்து வெறிகொண்டு தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகி படுத்திருந்தான் –- ஆதி 9:21
2. ஆபிரகாம் எகிப்தில் வைத்தும், ஈசாக்கு கேராரில் வைத்தும் தன் மனைவியை சகோதரி என்று கூறினார்கள் –- ஆதி 12:10 – 20, 20:1 – 14
3. யோசுவாவிடம் உடன்படிக்கை பண்ணவேண்டாம் என்று கர்த்தர் கூறிய பின்பும், அவன் ஏழு ஜாதிகளுடன் உடன்படிக்கை பண்ணினான் –- யோசு 9:14, 15
4. யோபு “நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது” என்றான் – யோபு 3:25
5. சாமுவேல் தாவீதின் தமையனை தானாக அபிஷேகம் பண்ணத் துணிந்தான் –- 1 சாமு 16:6, 7
6. மோசேயிடம் கர்த்தர் கன்மலையைப் பார்த்துப் பேசு என்றார். ஆனால் மோசேயோ கோலினால் அடித்தான் –- எண் 20:8 – 11
7. நசரேய விரதம் பூண்ட சிம்சோன் திராட்சத் தோட்டத்தின் வழியே சென்றான், செத்த சிங்கத்தின் உடலிலிருந்து தேனை எடுத்து சாப்பிட்டான் –- நியா 14 :8, 9
8. ஆரோன் சீனாய் மலையண்டையில் பொன்னினால் ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான் – யாத் 32:1 – 6, 23 – 25
9. சவுல் வேஷம் மாறி அஞ்சனம் பார்க்கிறவளிடம் சென்றான் –- 1சாமு 28:7, 8
10. தாவீது ராஜா உரியாவின் மனைவியை இச்சித்து அவனைக் கொன்று அவளை மனைவியாக்கினான் –- 1 இரா 15:5
11. சாலமோன் புறஜாதி பெண்களை விவாகம் பண்ணி விக்கிரகங்களைப் பின்பற்றினான் – 1 இரா 11:1 – 11
12. ரெகொபெயாம் முதியோரின் ஆலோசனையைக் கேட்காமல் வாலிபரின் ஆலோசனையைக் கேட்டான் – 2 நாளா 10, 11
13. ஆசா ஞானதிருஷ்டிக்காரனாகிய அனானியை காவலரையில் வைத்தான் –- 2 நாளா 16:7 – 10, 12
14. யோசாபாத் அகசியா என்னும் ராஜாவோடு தோழமை கொண்டதால் அவனுடைய கப்பல்கள் உடைந்து போயிற்று –- 2 நாளா 24:17 – 25
15. யோவாஸ் ராஜா விக்கிரக ஆராதனை செய்தவன். அவன் சகரியா தீர்க்கதரிசியை கல்லெறிந்து கொன்றான் – 2 நாளா 24:17 – 25
16. உசியாராஜா மனமேட்டிமையால் ஆலயத்துக்குள் சென்று தூபங்காட்டி குஷ்டரோகியானான் –- 2 நாளா 26:3, 16 – 23
17. யோதாம்ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசியாயிருந்தான் – 2 நாளா 27:2, 3
18. ஆகாஸ் ராஜா பாகாலின் விக்கிரகங்களைச் செய்து நமஸ்குவில் தெய்வங்களுக்குப் பலியிட்டான் -– 2 நாளா 28:1, 2, 22 – 25
19. எசேக்கியா மனமேட்டிமையானான் -– 2 நாளா 32:25, 26
20. மனாசே ராஜா தேவனுடைய ஆலயத்தில் தான் பண்ணுவித்த விக்கிரக சிலையை ஸ்தாபித்தான். பலிபீடங்களைக் கட்டினான் -– 2 நாளா 33:8,10, 5, 12, 13
21. சிதேக்கியா ராஜா கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான் -– 2 நாளா 36:11 – 13, 16, 17
22. அமத்சியா ராஜா சேயீர் புத்திரரின் தெய்வங்களுக்கு முன்பாக தூபங்காட்டி வணங்கினான் -– 2 நாளா 25:2, 14, 27
23. யோவான்ஸ்நானகன் தன் சீஷரை அனுப்பி இயேசுவிடம் “வருகிறவர் நீர் தானா அல்லது வேறொருவர் வரக் காத்திருக்க வேண்டுமா” என்று கேட்டனுப்பினான் – மத் 11:2 – 6
24. யாக்கோபும், யோவானும் இயேசுவை ஏற்றுக் கொள்ளாதவர்களை அக்கினி இறங்கி அழிக்க விரும்பினர் –- லூக் 9:53 – 56
25. பேதுருவும் பர்னபாவும் புறஜாதியரோடு சாப்பிட்டபின் விருத்தசேதனமுள்ள யூத விசுவாசிகளுக்குப் பயந்து, விலகி மாயம் பண்ணினார்கள் -– கலா 2:11 – 14
26. பேதுரு இயேசுவை மூன்று தரம் மறுதலித்தான். அவரது சிலுவை மரணத்திற்குப் பின் தன் அழைப்பை மறந்து மீன் பிடிக்கச் சென்றான். –- மத் 26:34, 69 – 74, 75

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

2 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

2 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

2 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

2 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

2 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

2 months ago