1. ஏசாயா ஆமோத்சின் குமாரன் – 2இரா 20:1
2. ஏசாயா ஒரு பெரிய தீர்க்கதரிசி – 2இரா 19:2, 20:1
3. யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதோம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலிருந்த தீர்க்கதரிசி – ஏசா 1:1
4. ஏசாயா யூதாவையும், எருசலேமையும் குறித்துத் தரிசனம் கண்டான் – ஏசா 2:1
5. உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில் ஆண்டவரைத் தரிசனத்தில் கண்டார் – ஏசா 6:1
6. ஏசாயா பாபிலோனில் நடக்கவிருப்பதைத் தரிசனத்தில் பார்த்தார் – ஏசா 13:1
7. ஏசாயா கர்த்தரின் வார்த்தையின்படி வஸ்திரமில்லாமலும், வெறுங்காலுடனும் நடந்தார் – ஏசா 20:2
8. ஏசாயா எசேக்கியா மரணத்தருவாயிலிருக்கும் பொழுது தீர்க்கதரிசனம் உரைத்தார் – ஏசா 38:1
9. ஏசாயாவுக்கு இரண்டு மகன்கள். சேயார்யாசூப், மகேர்சாலால்அஷ்பாஸ் – ஏசா 7:3, 8:3
10. மனிதரோடு தன்னை ஒப்பிடாமல் ஆண்டவரோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்ததால் தனது பாவநிலையை உணர்ந்து அறிக்கையிட்டார் – ஏசா 6:5
11. கர்த்தர் அழைத்த பணிக்குத் தன்னை உடனடியாக, முழுமையாக அர்பணித்தார் – ஏசா 6:8
12. நியாயத்தீர்ப்பைக் குறித்து கண்டித்து உணர்த்திய தீர்க்கதரிசனங்களையும், தேற்றுகிற நம்பிக்கையளிக்கிற தீர்க்கதரிசனங்களையும் உரைத்தார்.
13. கிறிஸ்துவின் பாடுகளையும் அதற்கான நோக்கத்தையும் தெளிவாக முன்னறிவித்தார் – ஏசா 52:13 – 15, 53:1 – 12
14. கிறிஸ்துவின் பிறப்பு, மரணம், இரண்டாம் வருகை, அரசாட்சி, புதிய வானம், புதிய பூமி, பல நாடுகளின் எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றி பல தீர்க்கதரிசனங்களை உரைத்தார். புதிய ஏற்பாட்டில் இவரது சொற்கள் ஐம்பது தடவைக்கு மேல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது – ஏசா 61:1 – 4, 9:6, 7 25:8

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago