1. மெசொப்பொத்தாமியா நாட்டில் இருக்கும்போது தேவன் ஆபிரகாமுக்கு தரிசனமானதால் தன் தகப்பனுடன் அங்கிருந்து புறப்பட்டான் – அப் 7 :2 ஆதி 11:31

2. தன் தகப்பன் மரித்து ஆரானில் இருக்கும் போது தேவதரிசனத்தின்படி தனது 75 வது வயதில் கர்த்தர் காண்பிக்கும் தேசத்துக்குப் புறப்பட்டான் – ஆதி 12:1-5

3. ஆரானிலிருந்து தேவ வார்த்தைக்குக் கீழ்படிந்து கானானுக்கு வந்த போது தேவன் அவனுடைய சந்ததிக்குக் கொடுப்பேன் என்று வாக்களித்தார் – ஆதி 12:5-7

4. லோத்து பிரிந்த பின் நாலாவதாக தேவன் அவனுக்குத் தரிசனமாகி “நீ பார்க்கிற இந்த பூமி முழுவதையும், உனக்கும் உன் சந்ததிக்கும் கொடுப்பேன்” என்றார் – ஆதி 13:1-18

5. லோத்தையும் அவன் குடும்பத்தையும் இராஜாக்களோடு யுத்தம் பண்ணி மீட்ட பின் ஆபிரகாமைப் பலப்படுத்தி “நான் உனக்குக் கேடகமும்,உனக்கு மகாப் பெரிய பலனுமாயிருக்கிறேன்” என்று கூற 5வது தரிசனம் உண்டாயிற்று – ஆதி 15 : 1-21

6. ஆபிரகாமின் பெயரை மாற்றவும், விருத்தசேதன உடன்படிக்கை ஏற்படுத்தவும் ஆறாவது தரிசனம் உண்டாயிற்று. “திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய்” என்றும் “திரளாய்ப் பெருகப் பண்ணுவேன் என்றும் ஆசிகளைக் கொடுத்தார் – ஆதி 17:1-27

7. சோதோமின் அழிவைக் குறித்து அறிவிக்க கர்த்தர் மம்ரேயின் சம பூமியில் ஏழாவதாக கர்த்தர் ஆபிரகாமுக்குத் தரிசனமானார். அவன் கொடுத்த விருந்தையும் சாப்பிட்டார் – ஆதி 18 : 1-33

8. ஈசாக்கு பால் மறந்த பின் ஆகாரையும் இஸ்மவேலையும் வெளியே அனுப்பி விடும்படி சொல்ல கர்த்தர் எட்டாவது தரிசனமானார் – ஆதி 21:8-12

9. ஆபிரகாமின் விசுவாசத்தை சோதிக்க ஈசாக்கைப் பலி செலுத்தச் சொல்லி ஒன்பதாவது முறை தரிசனமானார் – ஆதி 22:1,2

10. ஈசாக்கைப் பலிபீடத்தில் கிடத்தப் பட்டிருக்கும் போது கர்த்தர் பத்தாவது தடவையாக தரிசனமாகி அவனோடு பேசி பூரண ஆசீர்வாதத்தைக் கட்டளையிட்டார் – ஆதி 22:3-12, 15-18

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago