கர்த்தர் ஆபிரகாமைச் சோதிப்பதற்காக ஈசாக்கை மோரியா மலைக்கு அழைத்துச் சென்று பலிசெலுத்தச் சொன்னார். அப்படியே ஆபிரகாம் கீழ்படிந்து பலிசெலுத்தச் சென்றான். ஈசாக்கை பலிசெலுத்த ஆரம்பித்தபோது ஆபிரகாமின் விசுவாசத்தைக் கண்ட தேவன் “ஆபிரகாமே பிள்ளையாண்டான் மேல் உன் கையைப் போடாதே, நீ அவனை ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால், நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன்.” என்றார். பின்பு கர்த்தரின் வார்த்தையின்படி புதரிலே கொம்புகள் சிக்கிக் கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டு, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாக பலி செலுத்தினான். அந்த இடத்திற்கு “யேகோவாயீரே” என்று பெயரிட்டான். அதற்கு தேவனுடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும் என்று அர்த்தமாம் – ஆதி 22:1-19
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…