1 சாமுவேல் 9 : 27 “ அவர்கள் பட்டணத்தின் கடைசிமட்டும் இறங்கி வந்தபோது, சாமுவேல் சவுலைப் பார்த்து: வேலைக்காரனை நமக்கு முன்னே நடந்துபோகச் சொல் என்றான்; அப்படியே அவன் நடந்துபோனான்; இப்பொழுது நான் தேவனுடைய வார்த்தையை உனக்குத் தெரிவிக்கும்படிக்கு, நீ சற்றே தரித்து நில் என்றான்.”
சவுலின் வாழ்ககையில் ஒரு திருப்புமுனையாக “சற்றே தரித்து நில்” என்ற தேவ கட்டளை கொடுக்கப்பட்டது. அவன் அடுத்த அடியை எடுத்து வைப்பதற்காக அந்தக் கட்டளை கொடுக்கப்பட்டது. தேவ ஆலோசனையை அவனுக்குத் தெரி விப்பதற்காக அவ்வாறு கூறினார். இஸ்ரவேலுக்கு ராஜாவாக வேண்டுமென்ற தேவனுடைய திட்டத்தை அவனுக்கு அறிவிப்பதற்காக இவ்வாறு கூறினார். அதுவரை சவுல் அவனது வாழ்க்கையில் குறிக்கோள் அற்றவனாயிருந்தான். தன் தகப்பனாரின் கழுதை காணாமல் போனதால் தந்தையின் கட்டளைப்படி அதைத் தேடிச் சென்றான். தேடித் சென்ற கழுதை கிடைக்காததால் அங்குள்ள ஞான திருஷ்டிக்காரனாகிய சாமுவேலிடம் தன்னுடைய வேலைக்காரனின் சொற்கேட்டுச் சென்றான். ஆனால் சவுல் அங்கு செல்வதற்கு முன்னமே கர்த்தர் சவுலைப் பற்றியும் அவனை சாமுவேல் என்ன பண்ணவேண்டும் என்பதைப் பற்றியும், அவனைத் தான் என்னவாக ஆக்கப்போகிறேன் என்பதைப் பற்றியும் தெளிவாகப் பேசியிருந்தார்.
2பேதுரு 1 : 19 “அதிக உறுதியான தீர்க்கதரிசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.”
நாமும் நம்முடைய சுய வழியில் அலைந்து திரிவதை விட்டு விட்டு, நம்மை வேறு பிரித்துக் கொண்டு தனிமையில் கர்த்தருடைய சமூகத்தில் தரித்து நிற்க வேண்டும். சாமுவேல் கூறின கர்த்தரின் வார்த்தையின் படி சாமுவேல் சவுலை இஸ்ரவேலின் தலைவனாக அபிஷேகம் பண்ணினார். அதன்பின் அவனுடைய வாழ்க்கையில் சவுல் போகும்போது நடக்கப் போகிற காரியங் களைக் கர்த்தர் தெளிவாக அவன் மூலம் விளக்கினார். அது என்னவென்றால்,
சாமுவேலை விட்டுப் போகத் திரும்பின போதே சவுலுக்கு வேறே இருதயத் தைத் தேவன் கொடுத்தார். சவுல் சென்ற மூன்று இடங்களிலும் கர்த்தர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும், எல்லா அடையாளங்களும் அன்றைய தினமே நடந் தேறியது. சவுல் கூறிய தீர்க்கதரிசனத்தைக் கேட்டு ஜனங்கள் ஆச்சரியப்பட்டனர் (1சாமுவேல் 10 : 9 – 11). நாமும் இதேபோல் கர்த்தர் நமக்கு சில காரியங் களையோ, கட்டளைகளையோ கொடுத்திருப்பாரானால் அதற்குத் தரித்திருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். இதைத்தான் இயேசு யோவான் 15 : 14 ல் “ நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.” என்றார். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…