அக்கினிமலை சமுத்திரத்தில் விழுந்தது:
வெளிப்படுத்தல் 8 : 8 “இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது. அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று. ‘
இரண்டாவது தூதன் எக்காளம் ஊதியவுடன் வானத்திலிருந்து எரிகிற மலை போன்றதொன்று சமுத்திரத்தில் போடப்பட்டது. முதலாவது எக்காளம் ஊதப்பட்ட போது பூமியில் சேதம் ஏற்பட்டது. இரண்டாவது சேதம் சமுத்திரத்தில் உண்டாகப் போகிறது. வானத்திலிருந்து எரிகிற மலை என்பது பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் இலட்சக் கணக்கான விண்கற்களைக் குறிக்கிறது. அதிவேகத்தோடு இது சமுத்திரத்தைத் தாக்குமானால், அங்கே மிகப்பெரிய அழிவு உண்டாகும். சமுத்திரம் என்ற வார்த்தை மத்தியதரைக்கடலைக் குறிக்கிறது. ஆரம்ப காலத்தில் அந்திகிறிஸ்து அதனருகே உதயமாகும் ஐரோப்பிய பொதுச் சந்தை மற்றும் ஐரோப்பிய யூனியன் கூட்டணி நாடுகளின் அதிபதியாகத்தான் செயல்படுவான் என்பதை வெளிப்படுத்தல் 11 ம் அதிகாரத்தில் பார்க்கலாம். “துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப் போலிருக் கிறார்கள்” என்று ஏசாயா 57 : 20 ல் கூறப்பட்ட வசனத்தின்படி இது மனித இனத்தைக் குறிக்கிறது.
இதைத் தானியேல் 7 : 2, 3 லும், வெளிப்படுத்தல் 13 : 1, 18 : 21 ஆகிய பல வசனங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. மலைகள் எளிதில் அசைக்கப்படுவதில்லை. என்பதினால் (மத்தேயு 21 : 21, 1 கொரிந்தியர் 12 : 2, யோபு 9 : 5, 28 : 9, 1 இராஜாக்கள் 19 : 11, சங்கீதம் 46 : 2, ஏசாயா 34 : 3, 54 : 10, எசேக்கியேல் 38 : 20, மீகா 1 : 4, நாகூம் 1 : 5), மலை என்ற வார்த்தை ராஜாங்கங்களையும் (ஏசாயா 2 : 2, சகரியா 4 : 7), ஆளுகையையும் (சங்கீதம் 46 : 2, வெளிப்படுத்தல் 6 : 14, 16 : 20) குறிக்கும். இரண்டாவது எக்காளம் ஊதப்படும் போது ராஜ்ஜியங்கள் அசைக்கப்படும். அந்திகிறிஸ்து ஆட்சிக்கு வரும்போது மூன்று நாடுகளுக்கு எதிராக யுத்தம் செய்து அவைகளை மேற்கொள்ள வேண்டியதிருக்குமென்பதை தானியேலின் தரிசனம் 7 : 8 ல் அறிந்து கொள்ளலாம்.
சங்கீதம் 105 : 29 ல் “அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய மச்சங்களைச் சாகப்பண்ணினார்.” என்றும்,
ஓசியா 4 : 3 ல் “ கடலின் மச்சங்களும் வாரிக்கொள்ளப்படும்.” என்றும், என்று வாசிக்கிறோம்.
வெளிப்படுத்தல் 8 : 9 “சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போயிற்று; கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று.”
சமுத்திரத்தின் மீன் வகைகளில் மூன்றில் ஒரு பங்கு செத்து தண்ணீர்களில் மிதந்து கொண்டிருந்ததில் விளைவாக கப்பல்களின் போக்குவரத்து பெரிதும் பாதிப்படைகிறது. ஆனாலும் முதல் இரண்டு எக்காளங்கள் ஊதப்படும் போது மனிதர்கள் நேரிடையாகப் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படவில்லை. இரண்டாம் எக்காளம் ஊதியதும் திடீரென பெரிய அளவில் கடல் நீர் மாசுபடும்.
யாத்திராகமம் 7 : 20, 21 ஆரோன் “ …கோலை ஓங்கி; நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று. .நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போயிற்று;”
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…