“கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும்” (சங்கீதம் 27:4).
நம் வாழ்க்கைக்கு ஒரு குறிக்கோள் அவசியம். ஒவ்வொரு வருஷத்தின் துவக்கத்திலும் புத்தாண்டுத் தீர்மானங்களை செய்து புதுப்பிரதிஷ்டைகளை எடுத்து வாழ்வின் குறிக்கோளை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். நம்முடைய குறிக்கோள் எல்லாம் 2 கொரி 3:18ஆக இருக்கட்டும். “கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறது போலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின் மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.”
நான் மகிமையின் மேல் மகிமையடைய வேண்டுமே, மறுரூபப்பட வேண்டுமே என்கிற வாஞ்சையை, உங்களுடைய ஒவ்வொரு இருதயத் துடிப்போடும் இணைத்துக்கொள்ளுங்கள். இதைவிட வேறு சிறந்த குறிக்கோள் வாழ்க்கையில் இருக்கவே முடியாது.
இந்தக் குறிக்கோள் நான்கு விதங்களிலே படிப்படியாய் நிறைவேறுகிறது. முதலாவது மகிமையைக் காண்கிற அனுபவம், இரண்டாவது மகிமையைப் பிரதிபலிக்கிற அனுபவம், மூன்றாவது மகிமையால் நிரப்பப்படுகிற அனுபவம், நான்காவது மகிமையோடு எழும்பிப் பிரகாசிக்கும் அனுபவம்.
பழைய ஏற்பாட்டில் பரிசுத்தவான்கள் தேவ மகிமையைக் காண விரும்பினார்கள். மோசே கர்த்தரிடம், “உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும்” என்று கேட்டு ஜெபித்தார் (யாத். 33:18). தாவீதும் கூட மகிமையைக் காணும்படியாக கர்த்தரிடத்தில் கேட்டார் (சங்.27:4). மோசேயும் தாவீதும் ஓரளவு கர்த்தருடைய மகிமையைக் கண்டார்கள் (சங்.63:2, யாத்.33:22).
அதற்கடுத்த அனுபவம் தேவனுடைய மகிமையைப் பிரதிபலிக்கும் அனுபவம். மோசே நாற்பது நாட்கள் சீனாய் மலையிலே காத்திருந்து ஜெபித்தபோது, மோசேயின் முகம் மகிமையைப் பிரதிபலிக்க ஆரம்பித்தது. “மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்கள்” (2கொரி.3:7). நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு தேவனோடு நெருங்கி ஜீவிக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்களுடைய வாழ்க்கை பிரகாசிக்கும். தேவனுடைய மகிமையைப் பிரதிபலிப்பீர்கள்.
மூன்றாவதாக மகிமையினால் நிரப்பப்படும் அனுபவம். மோசே தேவனுடைய கட்டளையின்படி ஆசரிப்புக் கூடாரத்தை உண்டாக்கியபோது, கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று (யாத்.40:33, 34). இன்றைக்கு நீங்களே, கர்த்தருடைய ஆலயமாய் இருக்கிறீர்கள். கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்போது தேவனுடைய மகிமை உங்களையும் நிரப்பும். “வாசல்களே,தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்: மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்” (சங்.24:7).
நான்காவது அனுபவம் மகிமையோடு எழுந்துப் பிரகாசிக்கும் அனுபவமாகம். “எமம்பிப் பிரகாசி: உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது” (ஏசா.60:1). “உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்” (ஏசா.60:3).
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…