பைபிள் வசனங்கள்

நீதிமொழிகள் 1 : 7 – Proverbs 1 : 7 in Tamil

“கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” (நீதிமொழிகள் 1:7).

சாலொமோன் ராஜா எழுதிய பழமொழிகளின் தொகுப்பே நீதிமொழிகளாகும். அவர் மூவாயிரம் நீதிமொழிகளையும் ஆயிரத்து ஐந்து பாடல்களையும் இயற்றினார். இந்த நீதிமொழிகள் அவருடைய நாட்களிலும், நம்முடைய நாட்களிலும் நீதியின் களஞ்சியங்களாய் விளங்குகின்றன.

ஒரு போதகர் பிரசங்கிக்கும் போது, “நான் உங்களுக்கு திருடவும், குடிக்கவும், சத்தியம் செய்யவும் கற்றுக் கொடுக்கப்போகிறேன்” என்றார். ஜனங்கள் அதைக் கேட்டு திடுக்கிட்டார்கள். அவர் சிரித்த முகத்தோடு சொன்னார், “அனுதினமும் நீதிமொழிகளின் புஸ்தகத்தை படிக்க உங்கள் நேரத்தைத் திருடி, அதிலுள்ளதை தியானித்து, ஆழமான சத்தியத்தை பருகிக் குடித்து, பின்பு உங்கள் படுக்கையில் அதை தியானித்து இந்த சத்தியங்களை எல்லாம் என் வாழ்க்கையில் கடைபிடிப்பேன் என்று சத்தியம் செய்யுங்கள்” என்றார்.

ஆம், எந்த ஒரு மனிதன் நீதிமொழிகளைவாசிப்பானோ அவன் கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” என்பதைக் கண்டு கொள்ளுவான். கர்த்தருக்குப் பயப்படுதலோடு கூட இந்த ஞான வசனங்களை வாழ்க்கையில் செயல்படுத்தும் போது எல்லா சூழ்நிலைகளிலும் வெற்றி வாழ்க்கை வாழ்வது எப்படி என்பதை அறிந்து கொள்ளுவான். அவனுடைய வாழ்க்கையும் உண்மையான சாட்சியின் ஜீவியமாய் மாறும்.

நீதிமொழிகளை வாசிப்பதினால் உள்ள ஆசீர்வாதங்கள் என்ன? “அதினால் நீ துன்மார்க்கனுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும், அந்தகார வழிகளில் நடக்க நீதி நெறிகளை விட்டு, தீமை செய்ய மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும், மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப் படுவாய்” (நீதி. 2:12-15).

ஞானமும், மதியீனமும் நீதிமொழிகள் 1- ம் அதிகாரம் முதல் 9-ம் அதிகாரம் வரையிலும் வருகின்றன. ஞானம் தன் வீட்டைக் கட்டி என்று, ஞானத்தை வீட்டை கட்டுகிற ஒரு குடும்பத் தலைவனுக்கு உவமானமாகக் கூறியிருக்கிறது. அதுபோலவே மதியீனத்தையும் நீதிமொழிகள் ஒரு பெண்ணுக்கு உவமானப் படுத்தியிருக்கிறதைக் காணலாம். ஞானம் கட்டுகிற வீட்டிலுள்ள ஏழு தூண்கள் என்ன என்பதைப் பற்றியும் தேவ இரகசியம் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கிறது என்பதையும் அறியலாம்.

ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப் படும்” என்று இயேசு கிறிஸ்து சொன்னார் (மத். 11:19).

பழைய ஏற்பாட்டில் சாலொமோனின் ஞானத்தை வாசிக்கிற நாம் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவின் ஞானத்தைக் கண்டு பிரமித்து போய்விடுகிறோம். மலை பிரசங்கத்தில் அவருடைய ஞானம், உபதேசங்களில் அவருடைய ஞானம், குற்றம் கண்டு பிடிக்கிறவர்களிடத்தில் அவருடைய ஞானம், சிலுவையில் அறையப்பட்டிருக்கும் போது கூட உரைக்கப்பட்ட அவருடைய வார்த்தைகளிலுள்ள ஞானம் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்” (1கொரி. 1:31).

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago