பேதுரு செய்த அற்புதங்கள்

பேதுரு திமிர்வாதக்காரனை சுகமாக்கிய அற்புதம்

லித்தா ஊரில் பேதுரு:

அப்போஸ்தலர் 9 : 32 “பேதுரு போய் எல்லாரையும் சந்தித்து வருகையில், அவன் லித்தா ஊரிலே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்திற்கும் போனான்.

பேதுரு அப்போஸ்தலன் ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று அங்குள்ள சபையைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அதேபோல் ஒரு தடவை லித்தா என்ற ஊரிலிலுள்ள சபையிலுள்ள பரிசுத்தவான்களைச் சந்திக்கச் சென்றான்.இந்த ஊர் எருசலேமிலிருந்து 25 மைல் தொலைவி லுள்ளது. இங்கு சபை எப்பொழுது, யாரால் ஆரம்பிக்கப்பட்டதென்று தெரி யவில்லை. பேதுருவாலோ, பவுலாலோ ஆரம்பிக்கப்பட்டதாகவும் வேத த்தில் இல்லை. எருசலேமில் அப்போஸ்தலர்கள் அனைவரும் சேர்ந்திரு ந்து சபையைத் தொடங்கினர். சமாரியாவில் சபை தொடங்கின போது பிலிப்பு அப்போஸ்தலன் அங்கிருந்தான். ஆனால் லித்தாவில் சிதறப்பட்ட விசுவாசிகளால் கர்த்தர் இந்த சபையை ஆரம்பத்திருக்கலாம். முக்கிய மாக அங்குள்ள சீஷர்களைப் பார்க்கவோ, விசுவாசிகளைப் பார்க்கவோ, சபையாரைப் பார்க்கவோ போகிறேன் என்று கூறாமல் அங்குள்ள பரிசுத்த வான்களைப் பார்க்கப் போனான் என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். எனவே அந்த சபையிலுள்ளவர்கள் கர்த்தருக்குப் பிரியமானவர்களாக வார்த்தையின்படி வாழுகிறவர்களாக இருந்திருப்பார்கள். செப்பனியா 3:17ல் கூறியது போல தேவனாகிய கர்த்தர் அவர்கள் நடுவில் இருந்தார். 

பேதுரு செய்த அற்புதம்: 

அப்போஸ்தலர் 9 : 33, 34 “அங்கே எட்டு வருஷமாய்க் கட்டிலின்மேல் திமிர்வாதமுள்ளவனாய்க் கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனுஷனைக் கண்டான். பேதுரு அவனைப் பார்த்து: ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றான். உடனே அவன் எழுந்திருந்தான்.”

பேதுரு லித்தா ஊருக்குச் சென்ற போது அங்கு எட்டு வருஷமாய் நடக்க முடியாமல், எழுந்திருக்க முடியாமல், கட்டிலில் படுத்திருந்த ஒருவனை சுகமாக்க பேதுருவைக் கர்த்தர் அனுப்பினார். எட்டு வருஷம் என்று கூறப் பட்டிருப்பதால் அதற்கு முன் ஆரோக்கியமாகத் தான் இருந்திருப்பான் என்றறிகிறோம். ஏதோ ஒரு வியாதியால் பாதிக்கப்பட்டதால் நடக்க முடி யாமல்,எழுந்திருக்க முடியாமல் படுத்திருந்தான்.அவனை இயேசு பார்த்து ஐனேயாவே இயேசுகிறிஸ்து உன்னை குணமாக்குகிறார் என்றான். இயேசு உன்னை குணமாக்குவார், நான் ஜெபிக்கிறேன் என்று கூறாமல் அன்றே அப்பொழுதே குணமாக்குவார் என்று கூறுகிறான். இதிலிருந்து பேதுரு இயேசுகிறிஸ்துவின் மேல் வைத்திருந்த விசுவாசத்தைப் பார்க் கிறோம். பேதுருவிடமிருந்த விசுவாசத்தைத் தன் வாயால் அறிக்கையி டுகிறான். இதைப் பேதுரு,

அப்போஸ்தலர் 3 : 16 “அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத் தினால் அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசம் உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது.” என்கிறார்.

மாற்கு இரண்டாம் அதிகாரத்தில் ஒரு திமிர்வாதக்காரனை நான்கு பேர் தூக்கிக்கொண்டு இயேசுவிடம் வந்தனர். அப்பொழுது இயேசு “நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு, உன் வீட்டுக்குப் போ” என்று கூறி அற்புதம் செய்ததைப் பார்த்தோம் (மாற்கு 2 : 11). இயேசு கூறியது போல் லித்தாவில் உள்ள ஐனேயாவுக்கும் கூறியதைப் பார்க்கிறோம். யோவான் 5ம் அதிகாரத்தில் பெதஸ்தா குளக்கரையில் 38வருஷமாய் நடக்க முடியா மல் படுத்திருந்த ஒருவனை இயேசுவானவர் குணமாக்கும் போது “எழுந் திரு, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட” என்றதை யோவான் 5 : 8 ல் பார்க்கிறோம்.இயேசு செய்ததை அவரோடிருந்த பேதுரு பார்த்துக் கொண் டிருந்ததால் அதேபோல் செய்ததைப் பார்க்கிறோம். இயேசு “படுக்கையை எடுத்துக்கொண்டு நட” என்றார். பேதுருவோ “படுக்கையை நீயே போட்டுக்கொள்.” என்கிறார். 

அப்போஸ்தலர் 1 : 8 “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சி களாயிருப்பீர்கள் என்றார்.’

என்று இயேசு பேசிய கடைசிவார்த்தை. இதில் ஆவியானவர், பெலன், சாட்சி இம்மூன்றும் முக்கியமான வார்த்தைகளாகக் காணப்படுகிறது. இஸ்ரவேலரை எகிப்திலிருந்து எவ்வாறு நடத்தி வந்தாரோ, அப்படியே எருசலேமிலிருந்து சீடர்களை உலகம் முழுவதும் நடத்திச் செல்கிறார். இயேசுவானவர் சீடர்களைத், தமக்குச் சாட்சிகளாக இருக்கும்படி எப்படி கேட்டுக் கொண்டாரோ அப்படியே விசுவாசிகளும் சாட்சிகளாய் வாழும்படி பெலனளிக்கிறார். பரிசுத்தஆவியானவர் நம்மை சாட்சிகளாய் நிறுத்த, உன்னதபெலத்தால் இடைக்கட்டுகிறார். சாட்சி என்பது இயேசுவை அறிக் கையிடுதல்,இயேசுவின் சிலுவையைச் சுமத்தல், இயேசுவுக்காய்ப் பரிசுத் தமாய் நடத்தல், இயேசுவுக்காய் நஷ்டப்படுதல், இயேசுவுக்காய்ப் பாடுக ளைச் சகித்தல், இயேசுவுக்காய் மரணத்தையும் சகித்தல் போன்ற பல் வேறு அர்த்தங்களை உள்ளடக்கியதே சாட்சியாகும். கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் அனைவரும் கிறிஸ்துவை வெளிப்படுத்தி, கிறிஸ்து வுக்காய் வாழ்வதே கிறிஸ்து எதிர்பார்க்கும் சாட்சியாகும். 

எட்டுவருடமாக நடக்க முடியாமல்தான் படுத்திருக்கிறேன், என்னால் எப்படி முடியுமென்று கூறாமல்,எழுந்திருக்க முடியாமலிருந்த திமிர்வாத க்காரன் முயற்சித்து சுகம்பெற்றான். ஒரேநொடியில் ஆவியானவர் செத்து கிடந்த எலும்புகளுக்குள் வல்லமையைக் கொடுத்து உயிர்பெறச் செய்தார். இதே பேதுரு அப்போஸ்தலர் மூன்றாம் அதிகாரத்தில் பிறவிச் சப்பாணி யைக் குணமாக்கும்போது தன்னிடத்தில் வெள்ளியும்,பொன்னும் இல்லை யென்று கூறி, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் எழுந்து நட என்று கட்ட ளையிட்டு, தன்னுடைய வலது கையினால் தூக்கிவிட்டான் (அப்போஸ் தலர் 3 : 6,7).இந்த அற்புதத்தில் அவனையே செய்யச் சொல்லிக் கட்ட ளை யிடுவதைப் பார்க்கிறோம். சப்பாணியைத் தொடவோ தூக்கவோ இல்லை. அப்போஸ்தலர் 5 : 15 ல் பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும், கட்டி ல்களின் மேலும் கிடத்தி, வீதிகளில் வைத்து, பேதுரு நடந்து போகையில் அவர்களின் மேல் அவருடைய நிழல் பட்டு சிலபேர் குணமடைந்ததைப் பார்க்கிறோம். இதிலிருந்து பேதுருவைத் தேவன் எத்தனை வல்லமை யாகப் பயன்படுத்தினாரென்று பார்க்கிறோம். பேதுரு ஒவ்வொரு அற்புத த்தை நடப்பிக்கும் போதும் ஒவ்வொரு விதமாய் செய்ததைப் பார்க்கிறோம்.

எரேமியா 32 : 27 ல் “இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக் கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ?”

என்ற வசனத்தின்படி தேவன் இன்றைக்கும் மாறாதவராய் அதிசயங்க ளைச் செய்து வருகிறார். 

சாரோனில் நடந்த எழுப்புதல்:

அப்போஸ்தலர் 9 : 35 “லித்தாவிலும் சாரோனிலும் குடியிருந்த வர்களெல்லாரும் அவனைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.”

அப்போஸ்தலர் 11 ; 21 ல் கூறியுள்ளது போல கர்த்தருடைய கரம் அவர்க ளோடிருந்தாதால் அநேக ஜனங்கள் விசுவாசிகளாகிக் கர்த்தரிடத்தில் திரு ம்பினார்கள். பேதுரு லித்தாவுக்குத்தான் வந்தான். ஆனால் லித்தாவின் பக்கத்து ஊரான சாரோனிலும் பேதுரு செய்த அற்புத செயல் பரவியது. இயேசுவின்நாமமே இந்தத் திமிர்வாதக்காரனைப் பலப்படுத்தி, சர்வாங்க சுகத்தைக் கொடுத்தது. அற்புதங்களைப் பார்த்த பின்தான் அந்த இடங்க ளிலெல்லாம் எழுப்புதல் பரவியது.பேதுரு செய்த இரண்டு அற்புதமும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லித்தான் நடந்தது. ஏற்கனேவே பேதுரு, 

அப்போஸ்தலர் 4:10ல் “உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப் பட்டவருமாயிருக்கிற நசரேனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப் பட்டவருமாயிருக்கிற நசரேனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானானென்று உங்களுக்கும், இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது.” கூறியிருந்தார்.

எனவே அங்குள்ளவர்களுக்கு ஐனேயாவை அதிசயமா கப் பார்த்திருப்பார்கள். இதன்மூலம் அநேக ஜனங்கள் கர்த்தரிடம் திரும் பினார்கள். இயேசுவின் நாமத்திற்கு அத்தனை வல்லமையுண்டு. பேதுரு, 

அப்போஸ்தலர் 4 : 12ல் “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங் கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.”

இயேசுவின் நாமத்தில் ஜீவனும், இரட்சிப்பும், உயிர்ப்பிக்கும் வல்லமையும் உண்டு. 

முடிவுரை:

பேதுரு பல ஊர்களுக்குச் சென்று தேவனுடைய சுவிசேஷத்தைப் பரப்பி, அதன் மூலம் அநேக ஜனங்கள் இரட்சிக்கப் பட்டதைப் போல நாமும் இயேசுவை அறியாத ஜனங்களுக்கு இயேசுவைப் பற்றி எடுத்துச் சொல்லி அவர்களை இரட்சிப்பின் பாதையில் வழிநடத்த வேண்டும். நம்மை இயேசு அழைத்ததற்கு நோக்கம் உண்டு. அந்த நோக்கத்தையும், அவரு டைய சித்தத்தையும் நிறைவேற்றப் பாடுபட வேண்டும். சங்கீதம் 104 : 4ல் கர்த்தர் தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழி யக்காரர்களை அக்கினி ஜ்வாலைகளாகவும் மாற்றுகிறார் என்று சங்கீ தக்காரன் கூறிய தீர்க்கதரிசன வார்த்தைகள் அப்போஸ்தல நடபடிகளில் நிறைவேறியது. நற்செய்தி புத்தகங்களில் கிறிஸ்துவானவர் சீடர்களுக்கு வாழ்ந்து காட்டினார்.நடடபடிகள் புத்தகத்தில் சீடர்கள் கிறிஸ்துவின் வாழ் க்கையை வாழ்ந்து காட்டினார்கள். சீடர்கள் தங்கள் வாழ்க்கையை இயேசுவிடம் அர்ப்பணித்த நாள் முதல் தாங்கள் உயிர்விடும் கடைசி நாள் வரை கிறிஸ்துவுக்காய் வாழ்ந்து காட்டினர். தங்களது ஜீவி யம் முழுவதிலும் ஆண்டவரது சித்தம் நிறைவேறும்படியே செயல் பட்டனர். நாமும் அதேபோல் கிறிஸ்துவுக்காய் பாடுபட எழும்புவோம். ஆமென்.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago