முடவன் இருந்த இடம்:
அப்போஸ்தலர் 3 : 1, 2 “ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டு வந்தார்கள்; தேவாலயத்திலே பிர வேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள்.
ஒன்பதாம் மணி ஜெப வேளையில் ஆசாரியன் தூபம் காட்டி ஜெபத்தை ஏறெடுப்பர். இதேபோன்ற நேரத்தில்தான் சகரியா தூபம்காட்டிக் கொண்டி ருந்தபோது காபிரியேல் தூதன் அவனுக்குக் காட்சியளித்தான் (லூக்கா 1 : 10,11). நீதிமானாக, தேவனுக்குப் பயப்படுகிறவனான கொர்நேலியு என்ற நுற்றுக்கதிபதி ஒன்பதாம்மணி நேரத்தில் ஜெபம்பண்ணிக் கொண்டிருக் கும்போதுதான் தரிசனத்தைப் பார்த்தான். அந்த நேரத்தில் திரளான ஜனங் கள் தேவனை வழிபட அங்கு கூடுவர் (அப்போஸ்தலர் 2 : 46). பேதுருவும், யோவானும் அப்படிப்பட்ட நேரத்தில் தேவாலயத்துக்குச் சென்றனர் (அப் போஸ்தலர் 2 : 45, 46).அதுவரை இயேசுவோடு சென்றவர்கள் இப்போது இயேசு இல்லாமல் தேவாலயத்துக்குச் சென்றிருந்தனர். எத்தனையோ முறை அவர்கள் தேவாலயத்துக்குச் சென்றிருந்தாலும், இந்தத் தடவை சென்றதைப் பரிசுத்தஆவியானவர், அங்கு அற்புதம் செய்ய வைத்து அங்கு ள்ள எல்லோரையும் பிரமிக்கச் செய்தார். அப்போஸ்தலர்கள் மேல்வீட் டரையில் ஆவியானவரின் அபிஷேகம் பெற்றபின், பேதுரு பிரசங்கம் பண்ணி 3000 பேர் சபையில் சேர்ந்தனர் என்று அப்போஸ்தலர் 2 :14 – 42 ல் பார்க்கிறோம். அதன் பின் நடந்ததுதான் இந்த அற்புதம்.
பெந்தெகோஸ்தே நாளுக்குமுன் பேதுருவுக்கும், யோவானுக்கும் போட்டி யிருந்தது. ஏனென்றால் அவர்களுக்குள் அப்போது பரிசுத்த ஆவியானவர் இல்லை. ஆனால் பரிசுத்தஆவியானவர் அவர்களை நிரப்பிய பின் அவர் கள் தனக்கானதைத் தேட முயற்சிக்கவில்லை. இப்பொழுது இருவரும் சேர்ந்து வந்திருப்பதைப் பார்க்கிறோம்.அப்பொழுது பிறக்கும்போதே சப்பா ணியாய்ப் பிறந்த ஒருவனைச் சுமந்து கொண்டு வந்து தேவாலயத்தின் அலங்கார வாசலில் வைத்தார்கள். அவனுடைய வயது நாற்பது என்று அப்போஸ்தலர் 4 : 22 ல் உள்ளது. எதனால் இந்த நோய் என்று கொடுக்கப் படவில்லை. எருசலேமில் 12 வாசல்கள் உண்டு. இந்த வாசல் அலங்கார மாக இருந்ததால் அதற்கு அலங்காரவாசல் என்றழைப்பர். அவனுடைய பெயர் சொல்லப்படவில்லை. இவனைச் சுமந்து வந்தவர்கள் அவனுக்குச் சுகம் கிடைக்கக் கூட்டிவரவில்லை. அவனும் ஜெபிக்கவோ, வசனத்தைக் கேட்கவோ ஆர்வமில்லாதவனாயிருந்தான். அவனுக்குத் தேவையான பணம். அங்கேகிடைக்கும். அந்தப்பணத்தைக் கொண்டுதான் அவனுடைய வாழ்க்கையை நடத்தினான். அதனால் ஆலயத்துக்குள் போகாமல் வெளி வாசலில் இருந்தான்.
லூக்கா 16:20 ல் லாசரு என்ற தரித்திரம் ஐசுவரியவானின் வாசலருகே அவன் போடுகிற உணவுக்காகக் காத்திருந்து கடைசியில் ஆபிரகாமின் மடி யில் கொண்டு போகப்பட்டான். யோவான் 9ம் அதிகாரத்தில் இயேசு பிறவி க்குருடனுக்கு சுகமளித்துப் பார்வை பெற்றபோது 9:8 ல் இவன் வெளியே யிருந்து பிச்சையெடுத்தவன் அல்லவா என்று ஜனங்கள் கூறியதைப் பார் க்கிறோம். அவனுடைய தொழில் பிச்சைஎடுப்பது. அதற்கு இவர்கள் உதவி செய்தனர். இதேபோல் மாற்கு 2 : 3 ல் நாலுபேர் சேர்ந்து ஒரு நடக்க முடியாத திமிர்வாதக்காரனைச் சுமந்து கொண்டு கூரையைப் பிரித்து இறக்கி இயேசுவினிடத்தில் கூட்டி வந்ததைப் பார்க்கிறோம். அவனுடைய பெயரும் சொல்லப்படவில்லை. ஆனால் அவனைச் சுமந்து வந்தவர்களு க்கு விசுவாசமிருந்தது. அவனைக் கொண்டு சென்றால் இயேசு நடக்க வைப்பார் என்று. இயேசுவைப் பற்றிய அறிவும் இருந்தது. ஆனால் இவ னைச் சுமந்து வந்தவர்கள் ஆலயத்துக்கு எல்லோரும் வருவதற்கு முன் தவறாமல் சப்பாணியைக் கொண்டு வந்து வைத்து, அனைவரும் சென்ற பின் திரும்ப அவனுடைய வீட்டிற்குக் கூட்டிச் செல்வர். அவன் பிச்சை யெடுக்க அந்த இடத்திற்கு கொண்டு வைக்க, அவனுக்கு உதவி மட்டுமே செய்தனர்.
சுமார் 20 வருடங்களாக அதே இடத்தில் தான் பிச்சையெடுக்க உட்கார்ந்தி ருப்பான். இயேசு அந்த ஆலயத்துக்கு வரும் போதெல்லாம் அவனைப் பார்த்திருப்பார். இயேசு அவனைக் குணமாக்கவில்லை. அதற்குக் காரணம் பிதாவிடமிருந்து அதற்கு அனுமதி வரவில்லை என்பதுதான். ஏராளமான வியாதியஸ்தர்கள் படுத்திருந்த பெதஸ்தா குளத்தில் இயேசு சென்ற போது அனைவரையும் குணப்படுத்தவில்லை. அங்கிருந்த திமிர்வாதக் காரனை மட்டும்தான் குணமாக்கினார். இயேசு அன்றே அவனைக் குணமா க்கியிருந்தால் அப்போஸ்தலர் 3, 4 ல் தோன்றிய எழுப்புதல் ஏற்பட்டிருக் காது. பெந்தேகோஸ்தே நாளுக்குப் பின் பேதுருவின் மூலம் குணமடை வதுதான் பிதாவின் சித்தம். லோத்து தானாகவே சோதோமைத் தெரிந்து கொண்டு நன்மை எதுவும் பெறாமல், குடும்பமே தவறான வழியில் சென் றதை வேதத்தில் பார்க்கிறோம் (ஆதியாகமம் 13 : 11, 19 : 24). அதே போல் இவனும் தேவாலயத்தின் உள்ளே செல்லாமல் வெளியே உட்கார்ந்து கொண்டிருந்தான்.
தேவாலய வாசலில் பேதுருவும், யோவானும்:
அப்போஸ்தலர் 3 : 3, 4, 5 “தேவாலயத்திலே பிரவேசிக்கப் போகிற பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான். பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப் பார் என்றார்கள். அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்கு மென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான்.”
பேதுருவும்,யோவானும் தேவாலயத்துக்குள் பிரவேசிக்கும் முன் ஆலயத் த்தின் வாசலிலிருந்த சப்பாணியைக் கண்டனர். அவர்களிருவரும் அவ னைப் பார்க்காமல் போயிருந்தால் அவனுக்கு எந்த அற்புதமும் நடந்திருக் காது. ஆவியானவர் அந்த இடத்தில் அவர்களை அவனைப் பார்க்க வைத் தார். சப்பாணியோ அவர்களிடம் தனக்கு ஏதாவது நிச்சயமாகக் கிடைக்கு மென்றெண்ணி அவர்களைக் கண்டு பிச்சை கேட்டான்.அதற்குப் பேதுரு வும், யோவானும் அவனை உற்றுப்பார்த்து, தங்களை நோக்கிப் பார் என் றனர். அப்போஸ்தலர்14 : 9ல் இதேபோல் பிறவிச் சப்பாணியான ஒருவன் லீஸ்திராவில் பவுலின் பிரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து அவனிடம் இரட்சிப்பைப் பெறுவதற் கான விசுவாசம் இருப்பதைக் கண்டான். உடனே பவுல் அவனைப் பார் த்து காலூன்றி நிமிர்ந்து நிற்கச் சொன்னான். உடனே சப்பாணி குதித்தெ ழுந்து நடந்தான். அப்போஸ்தலர் 11 ம்அதிகாரத்தில் பேதுரு யோப்பா பட்ட ணத்தில் ஜெபம் பண்ணிக்க கொண்டிருக்கும்போது ஒரு தரிசனத்தைப் பார் க்கிறான் அதை பேதுரு உறுப்பார்த்து அறிந்ததைப் பார்க்கிறோம். அதே போல்பேதுருவும்,யோவானும் அவர்களை நோக்கிப்பார் என்றனர். நாமும் நம்முடைய தேவைகளுக்கு, தேவனுடைய பிரசன்னத்திற்கு, கிருபைகளு க்குத் தேவனை நோக்கிப் பார்க்க வேண்டும்.
ஏசாயா 45 : 22ல் “ பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை.”
இந்த வசனத்தின்படி சப்பாணி அவனை நோக்கிப்பார்த்தான். பூமியிலுள்ள அனைவரும் கர்த்தராகிய இயேசுவை நோக்கிப் பார்க்கும்போது அற்பு தத்தைப் பெற முடியும்.
பேதுரு செய்த அற்புதம்:
அப்போஸ்தலர் 3 : 6, 7 “அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி; வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கி விட்டான், உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலனடைந்தது.”
சப்பாணி பேதுருவை நோக்கிப் பார்த்தவுடன்,பேதுரு அவனிடம் தன்னிடம் வெள்ளியோ, பொன்னோ இல்லையென்று கூறிவிட்டு, அதைவிட விலை யேறப்பெற்ற ஒன்றை உனக்குத் தருகிறேன் என்று, நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எழுந்து நட என்று அதிகாரத்துடன் கூறினான். பேதுருவுக்கு தனக்குள் இருப்பது தேவனின் வல்லமையென்று தெரியும். ஏனென்றால் அப்போஸ்தலர் 4 : 12 என்ன கூறுகிறதென்றால்,
“அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளை யிடப்படவும் இல்லை.”
மாற்கு 16 : 17, 18 “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங் களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.”
என்ற இயேசுவின் வார்த்தையின்படி, பேதுரு அவனது வலது கையினால் அவனைத் தூக்கி விட்டான்.உடனே தேவவல்லமை அவனுக்குள் இறங் கியது. அதிசயம் நடந்தது. செயலிழந்த அவனுடைய கால்கள் பெலனடை ந்தது. இங்கு இயேசுவை நசரேயன் என்று சேர்த்துக் கூறியிருப்பதைக் காணலாம் நாசரேத்தில் நன்மையுண்டாகக் கூடுமோ என்றிருந்த ஜனங்க ளுக்கு மத்தியில் அந்த நாமத்தில் பிறவிச்சப்பாணிக்கு நன்மை உண்டாகச் செய்தனர். மற்றவர்கள் அந்த நாமத்தை நம்பாவிட்டாலும் இவர்கள் இருவ ரும் அதை நம்பினர். ஏற்கனவே இயேசுவானவர் “என் நாமத்தினாலே எதைக் கேட் டாலும் தருவேன்“ என்று வாக்குரைத்திருந்தார். அந்த வார் த்தை நிறைவேறியதை இந்த அற்புதத்தில் பார்க்கிறோம். மாற்கு 1:24ல் தேவாலயத்திலிருந்த அசுத்த ஆவி இயேசுவைப் பார்த்து நசரேயனாகிய இயேசுவே என்றது. அதேபோல் அப்போஸ்தலர் 4:10ல் நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தான் சுகம் கிடைக்குமென்று பேதுரு கூறி னான்.ஏசாயாதீர்க்கதரிசி 35 : 6ல் “அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; … “என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். தாவீது இராட்சத னான கோலியாத்திடம் அவன் நிந்தித்த இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தில் அவனை எதிர்த்து வெற்றி பெற் றதை 1சாமுவேல் 17 : 45 ல் பார்க்கிறோம். ஏதாவது பணம் கிடைத்தால் போதும் என்று நினைத்த சப்பாணிக்குப் பிழைக்க மனுஷனாக்கினதைப் பார்த்து மிகுந்த சந்தோஷமடைந்தான். நாம் நினைப்பதற்கும் வேண்டிக் கொள்வதற்கும் அதிகமாகத் தருகிறவர் இயேசுகிறிஸ்து.
சப்பாணிக்கு நடந்த அற்புதம்:
அப்போஸ்தலர் 3 : 8 “அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள்பிரவேசித்தான்.”
தாயின் வயிற்றிலேயே சப்பாணியாய் பிறந்தவனை பேதுருவும் யோவா னும் இயேசுவின் நாமத்தைச் சொல்லி நடக்க வைத்தனர். இந்த வசனத் தில் இரண்டு முறை குதித்து என்ற வார்த்தை வருகிறதைப் பார்க்கிறோம். முதலில் குதித்து எழுந்து நின்றான். பின் நடந்தான். அவனுக்குத் தாங்க முடியாத சந்தோஷத்தில் மறுபடியும் குதித்துத் தேவனைத் துதித்துக் கொண்டே பேதுருவுடனும், யோவானுடனும் தேவாலயத்துக்குள் சென் றான். சங்கீதம் 100 : 4 ல் தாவீது அவருடைய வாசல்களில் துதியோடு செல்ல வேண்டுமென்றும்,அவருடைய நாமத்தை ஸ்தோத்தரித்துக் கொண்டே செல்ல வேண்டுமென்றும் ஆவியானவர் கூறியிருப்பதைப் பார்க்கிறோம்.அவன் அன்று தனக்கு இப்படிப்பட்ட அற்புதம் நடக்குமென்று நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டான். அவன் எதிர்பார்க்காத ஒன்றை, அவன் வாயினால் தேவனிடம் கேட்காததை, விசுவாசிக்காததை தேவன் அவனுக்குக் கொடுத்தார். நாமும் இதே போல் ஆலயத்திற்குச் செல்லும் போது வீண் பேச்சுக்களைப் பேசிக் கொண்டு செல்லாமல் துதித்துக் கொண்டே செல்ல வேண்டும். இதேபோல் பவுலும் அப்போஸ்தலர் 14 : 10 ல்பிறவிச்சப்பாணியை குதித்தெழுந்து நடக்க வைத்ததைப் பார்க்கிறோம்.
ஜனங்களின் ஆச்சரியம்:
அப்போஸ்தலர் 3 : 9, 10 “அவன் நடக்கிறதையும், தேவனைத் துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு: தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்குச் சம்பவித்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.”
தேவாலயத்திலிருந்த ஜனங்கள் குதித்துக் கொண்டு வருகிற மனுஷன் யாரென்று அடையாளம் கண்டு கொண்டனர். வாசலில் முடமாக உட்கா ர்ந்து கொண்டிருந்தவன் அல்லவா என்றும், பிச்சை கேட்டுக் கொண்டி ருந்தவன் அல்லவா என்றும் இப்போது எப்படி நடந்தானென்றும், சந்தோ ஷத்தில் தேவனைத் துதிக்கிறானே என்றும் மிகுந்த ஆச்சரியமும், பிரமிப்பும் அடைந்தனர். அன்று ஜனங்கள் தேவாலயத்துக்கு வரும் போது அவனைப் பார்த்து பரிதாபத்துடன் ஏதோ கொஞ்சம் காசு போட்டு விட்டுச் சென்றிருப்பர். ஆனால் இப்போது அவனது மாற்றத்தைப் பார்த்து ஆலயத்திலுள்ளவர்கள் வியந்தனர். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிறவிச் சப்பாணியை எழுப்பி நடக்க வைக்கப் பயன்படுத்தியவர்கள் பேதுருவும், யோவானும். இது யாரும் செய்ய முடியாததைத் தேவன் அவர்களைக் கொண்டு செய்ய வைத்தார்.
சாலமோன் மண்டபத்தில் சப்பாணி:
அப்போஸ்தலர் 3 : 11 “குணமாக்கப்பட்ட சப்பாணி பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், ஜனங்களெல்லாரும் பிரமித்து, சாலொமோன் மண்டபம் என்னப்பட்ட மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள்.”
ஜனங்கள் சப்பாணியாக பலவருடம் உட்கார்ந்து கொண்டிருந்ததைப் பார்த் துப் பிரமித்தவர்கள் இப்பொழுது சாலமோன் மண்டபத்தில் பேதுருவோ டும், யோவானோடும் இருப்பதைப் பார்த்துப் பிரமித்தனர். இதேபோல் லாசரு மரித்து நான்கு நாட்களுக்குப் பின் இயேசுகிறிஸ்து அவனை உயி ரோடெழுப்பினார். அதைப் பார்த்த அநேக யூதர்கள் இயேசுவிடம் விசுவா சமுள்ளவர்களானார்கள். மேலும் லாசருவைப் பார்க்கத் திரளான ஜனங் கள் இயேசுவண்டை வந்தனர் (யோவான்11:45, 12 : 9, 10). பிச்சைக்காரனாக இருந்தவனுக்கு இயேசுகிறிஸ்து அற்புதம் நடக்க வைத்து, அவனைப் பார் த்து அநேகரை இரட்சிப்பின் பாதையில் வழிநடத்தும் கருவியாகப் பயன் படுத்தினார். அப்போஸ்தலர் 3 : 12 ம் வசனத்தில் அவர்களைப் பார்த்து பேதுரு இஸ்ரவேலரே என்றழைத்து தாங்கள் இந்த அற்புதத்தை தங்களு டைய சுய சக்தியினால் செய்யவில்லையென்றும், இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால்தான் இது நடந்தது என்றும் அவர்களுக்குத் தெளிவு படுத் தினார். அப்போது அவர்கள் இயேசுவண்டை வரும்படி அழைப்புக் கொடுக்கிறார். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…