யாகேல் என்றால் காட்டாடு என்று பொருள். யாகேல் ஒரு யூதரல்லாத பெண்மணி. யாகேலின் கணவனின் பெயர் ஏபேர். இவர்கள் கேனிய குலத்தைச் சேர்ந்தவர்கள். கேனியர்கள் மோசேயின் மாமனாகிய ரெகுவேலின் மகனான ஒபாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மோசேயை வனாந்தரத்தில் சந்திக்க வந்த ஒபாவை தங்களுக்கு வழிகாட்டி உதவி செய்யும்படி மோசே வருந்திக் கேட்டுக் கொண்டதின் பேரில் அவனும் இஸ்ரவேலருடன் கானா னுக்கு வந்தான் (எண்ணாகமம் 10 : 29 – 32). அவர்கள் கானானில் ஆராத்திற்குத் தெற்கேயுள்ள யூதாவின் வனாந்தரத்தில் வந்து குடியேறினார்கள் (நியாயாதிபதிகள் 1 : 16). அவர்களில் யாகேலின் கணவராகிய ஏபேர் தனது ஜனத்தை விட்டுப் பிரிந்து சானாயிம் என்னும் கர்வாலி மரங்களண்டை குடியிருந்தான். அந்நாட்களில் கண்ணியமுள்ள தனவான்கள் தனித்தனி கூடாரங்களைப் பெண் களுக்காக, விருந்தினருக்காக அமைப்பது வழக்கம் அதேபோல் ஏபேர் யாகேலு க்கு ஒரு கூடாரத்தை அமைத்துக் கொடுத்திருப்பான். அவளின் கூடாரம் யுத்த களத்தினருகே இருந்தது. இவள் மிகுந்த தைரியசாலி. சமயோகித புத்தி யுடையவள். யாகேல் கர்த்தரிடம் பக்தி வைராக்கியமாய் இருந்திருக்கிறாள். அவள் கர்த்தருக்கு மட்டுமல்ல, தேசத்திற்கும், தேசத்தின் படைத் தலைவ னுக்கும் கூடப் பக்தி வைராக்கியமாய் இருந்திருக்கிறாள்.
யாபீன் ராஜா, சேனாபதி சிசெரா:
இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ததால் கர்த்தர் அவர்களைக் கானானியரின் ராஜாவாகிய யாபீன் கையில் விற்றுப் போட்டார் (நியாயாதிபதிகள் 4 : 2). நியாயாதிபதிகள் 2 : 14 லிலும் யோசுவா இறந்த பின் இஸ்ரவேலர் கர்த்தரை விட்டுப் பாகால்களையும், அஸ்தரோத்தையும் சேவித்ததால், அவர்களைக் கர்த்தர் கொள்ளைக்காரர் கையில் ஒப்புக் கொடுத்து, அவர்களுடைய பகைஞரின் கையில் விற்றுப்போட்டதைப் பார்க்கிறோம். இஸ்ர வேலர் தங்களை விடுவிக்கும் தேவனை மறந்து, விடுவிக்க முடியாத தேவர் களைத் தெரிந்து கொண்டனர். யாபீன் ராஜாவின் சேனாபதி சிசெரா. இவன் புறஜாதிகளுடைய பட்டணமாகிய அரோசேத்திலே குடியிருந்தான். சிசெராவின் இனத்தோடு நல்ல தொடர்பு ஏபேரின் குடும்பத்திற்கு இருந்தது. சிசெரா மிகவும் கொடுமைக்காரன். அவனது படைபலம் மிகவும் பெரியது. சிசெராவிடம் 900 இருப்பு இரதங்கள் இருந்தன. எவ்வளவு பெரிய படை அவனை எதிர்த்து வந்தா லும் அவனது இரதங்கள் அவர்களை நொறுக்கி விடும். இவன் இஸ்ரவேல் ஜனங்களை இருபது வருடம் கொடுமையாய் ஒடுக்கினான். அவர்களுக்குக் கொடூ ரமான தண்டனைகளை வழங்கித் துன்புறுத்தினான். அவர்கள் உழைத்த காசை யெல்லாம் ராஜாவுக்கே கொடுத்தனர். ஜனங்களால் எதையும் சுதந்தரமாகச் செயல்பட முடியாத நிலையில் தள்ளப்பட்டனர். பெண்கள் பாதுகாப்பில்லா மலிருந்தனர். யாகேல் யாபீன் தேவஜனத்தை ஒடுக்கினதை விரும்பவில்லை.
கர்த்தர் பண்ணிய யுத்தம்:
ஜனங்கள் தாங்கள் பட்ட கஷ்டங்களால் ஒன்றுகூடித் தங்களுடைய இந்த நிலை க்குக் காரணம் தங்களுடைய பாவம்தான் என்றுணர்த்தனர். தாங்கள் பாகால் தெய்வத்தை வணங்கி, யெகோவா தெய்வத்தை மறந்து விட்டோம் என்று எண்ணி மனந்திரும்பிக் கர்த்தரை நோக்கி அழுது முறையிட்டனர். கர்த்தர் மனமிரங்கி தெபொராள் என்ற தீர்க்கதரிசியை எழுப்பினார். அந்நாட்களில் ராஜாக்கள் இல்லாததால் தெபொராள் என்ற பெண் தீர்க்கதரிசி இஸ்ரவேலை நியாயம் விசாரித்து வந்தாள். இஸ்ரவேலருக்கு கானானிய ராஜாவான யாபீ னுக்கும் போர் மூண்டது (நியாயாதிபதிகள் 4 : 2). இது இஸ்ரவேலருக்கு சாதக மாக அமைந்தது. யாத்திராகமம் 14 : 14 ல் கூறியது போல இந்த யுத்தத்தைத் தேவனே நடத்தினார். கர்த்தர் எதிரிகளைப் பெரிய பள்ளத்தாக்குக்கு வரச் சொல்லி அங்கு பெரிய மழையை வரவழைத்து வெள்ளப் பெருக்கை ஏற்படப் பண்ணி சிசெராவின் அனைத்து இருப்பு ரதங்களும் அதில் மாட்டும்படி செய்தார். எசேக்கியேல் ராஜாவுக்காக ஒரு தூதனை அனுப்பி 185000 பேரை ஏசாயா 37 : 36 ல் ல் சங்கரித்ததைப் போல, இதில் புதுவகையான யுத்தத்தை நடத்தினார். யுத்தமானது வானத்திலே உண்டாயிற்று. நட்சத்திரங்கள் தங்கள் அயனங்களிலிருந்து யுத்தம் பண்ணின. கீசோன் நதி எதிரிகளை அடித்துக் கொண்டு போயிற்று. வானத்தின் பிரதிநிதியாக நட்சத்திரங்களும், பூமியின் பிரதிநிதியாக நதிகளும் இவர்களுக்கு உதவிபுரிய கர்த்தர் அனுமதித்தார் (நியாயாதிபதிகள் 5 : 20, 21).
யாகேல் துணிச்சலுடன் சிசெராவைக் கொன்றாள்:
சேனைத்தளபதியான சிசெரா போரில் தோல்வியுற்று உயிருக்குப் பயந்து தன்னுடைய இரத்தத்திலிருந்து இறங்கித் தப்பித்துக்கொள்ள புறமுதுகு காட்டி கால்நடையாக ஓடி ஒழிய வகை தேடினான். யாகேல் தன்னுடைய கூடாரத்தில் தனிமையாயிருக்கும் போது யாகேலின் கூடாரத்தின் வாசலுக்கு தஞ்சமடைய சிசெரா வந்தான். யாகேல் அவனுக்கு எதிரே போய் ஆண்டவனே என்று அவனை மரியாதையாக அழைத்து தன்னுடைய கூடாரத்துக்குள் வர அழைத்தாள். யாகேல் சிசெராவை உள்ளே அழைத்துச் சென்றது அவனைக் காப்பாற்றுவதற்கு அல்ல. அவனைக் கொல்வதற்குத்தான். அது அந்தப் படைத் தளபதிக்குத் தெரியவில்லை. கேனியரும், ஆத்சோரின் ராஜாவும் சமாதானமாக இருந்ததால் சிசெரா சந்தேகம் எதுவும் படாமல் யாகேலின் கூடாரத்தில் அடைக் கலம் புகுந்தான். அடைக்கலமாக வந்த சிசெரா முன்னறையில் இருக்காமல் படுக்கையறை வரை சென்றான். ஏனெனில் தன்னை யாரும் கண்டுபிடித்து விடக் கூடாது என்பதால் அங்கு சென்றான். அவன் உள்ளே சென்றாலும் அவளும் அவனைத் தடுக்கவில்லை. அவளும் அவனை யாரும் கண்டுபிடித்துவிடக் கூடாதென்று தந்திரமாகத் தன் வீட்டிலுள்ள சமுக்காளத்தைப் போட்டு அவனை மூடி மறைத்து வைத்தாள்.
சிசெரா யாகேலிடம் தான் தாகமாயிருப்பதால் குடிக்கத் தண்ணீர் வேண்டு மென்று கேட்டான். அவளோ தண்ணீர் கேட்ட அவனுக்குப் பாலைக் கொடுத் தாள். சிசெரா பயத்தில் யாகேலிடம் அவளைக் கூடாரவாசலின் நின்று அவனு டைய எதிரிகள் யாராவது கூடாரத்தில் வந்து, யாராவது வந்தார்களா என்று கேட்டால், இங்கு ஒருவரும் வரவில்லை என்று சொல்லச் சொன்னான். நிச்சயமாக யாகேல் தன்னைக் காப்பாற் றுவாள் என்ற நம்பிக்கையில் சிசெரா அயர்ந்து தூங்கி விட்டான். பின்னர் யாகேல் கர்த்தர் தனக்குச் சரியான சந்த ர்ப்பம் கொடுத்திருப்பதாக எண்ணி அதைத் தவறவிடாமல், தன்னிடம் என்ன இருக்கிறது என்று தேடிப் பார்த்திருப்பாள். அவள் கூடாரத்திலிருந்ததால் கூடாரங்களை நிறுத்துவதற்காகப் பெரிய ஆணிகளைத் தரையில் அடிப் பார்கள் அத்தகைய ஆணி அங்கிருந்ததால், அந்தக் கூடார ஆணியை எடுத்து மெதுவாக சிசெராவின் பக்கத்தில் வந்து அவனுடைய நெற்றியில் அந்த ஆணியை அடித்து ஆழமாக இறக்கினாள். அது தரையோடு பதிந்தது. சிசெரா வின் தலையை அவள் அடித்த ஆணி துளைத்தது. தப்பித்தோம் என்று நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்த சிசெரா தெபோராளின் தீர்க்கதரிசனத் தின்படி யாகேல் என்ற பெண்ணின் கையினால் துடிதுடித்து, தேசத்தையே தன்னுடைய காலில் விழ வைத்த சிசெரா யாகேலின் காலடியில் பிணமாகக் கிடந்தான். சிசெரா இறந்தான்.
யுத்தத்தை முன்னின்று நடத்தின பாராக்கிற்கு அந்தப் பெருமை கிடைக்க வில்லை. யாகேலைப் பொறுத்தவரை அடைக்கலமாக வந்தவனை கொன்றது தவறாகத் தோன்றினாலும் சிசெராவின் கொடூரத்தன்மையை அவள் அறிந்தி ருந்ததால் அவ்வாறு செய்தாள். பாராக்கின் படை சிசெராவைத் தேடி வரும் போது யாகேலின் கூடாரத்தில் அவன் ஒளிந்திருப்பதைக் கண்டால் அவளைச் சாகடித்திருப்பர். ராகாப் யோசுவாவின் ஆட்களைத் தன்னுடைய வீட்டில் ஒழித்து வைத்து ராஜாவின் ஆட்களிடம் அவர்கள் இல்லையென்று பொய் சொன்னாலும் அது தேசத்துரோகம் ஆகவில்லை. அதுபோல யாகேலின் செய லும் சூழலின் அடிப்படையில் சிசெராவைக் கொன்றது கொலையாகாது. யாகேல் இஸ்ரவேலின் தேவனை விசுவாசித்ததைத் தன்னுடைய வாயால் அறிக்கையிடாவிட்டாலும் விசுவாசித்தவளாகவே இருந்திருக்க வேண்டும். இஸ்ரவேலின் எதிரியான சிசெராவைக் கொன்ற கிரியையால் அதனை யாகேல் வெளிப்படுத்துகிறாள். அடைக்கலமாக வந்தவரை ஆணியடித்துக் கொன்றது பாவம் என்று கூறினாலும் அதன் பின்னணியில் இருக்கும் விசுவாசத்தையும், அடைக்கலமாக வந்தவனின் தன்மையையும், அடைக்கலம் கொடுக்கப்பட்ட சூழலையும் பார்க்கிறோம். இஸ்ரவேலரின் வெற்றியின் முக்கிய பங்கை யாகேல் பெற்றாள்.
நியாயாதிபதிகள் 5 : 31ல் “ கர்த்தாவே, உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.”
என்ற வார்த்தையின் படி படைத்தளபதியாக சிசெராவுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட யாகேலுடைய கூடாரத்தில் அழிவு வந்தது.
யாகேலும், பாராக்கும்:
பாராக் சிசெரா தப்பி ஓடி விட்டதால் அவனைத் தேடி யாகேலின் கூடாரத் துக்கு வந்தான். பாராக்கின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த யாகேல் பாராக் கைப் பார்த்து ஐயா உங்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்தது என்று கேள்விப் பட்டேன் என்று மகிழ்ச்சியுடன் கூறியிருப்பாள். அதற்கு பாராக் யுத்தத்தில் மகத்தான வெற்றியைக் கர்த்தர் கொடுத்தார், சிசெரா தப்பி ஓடிவிட்டான். அவனைக் கண்டு பிடித்துக் கொன்றால்தான் முழுவெற்றியாகும் என்று கூறியி ருப்பான். அதற்காகத்தான் அவனைத் தேடி அலைகிறேன் என்றும் கூறியிருப் பான். அதற்கு யாகேல் சந்தோஷமாக சிசெரா என் வீட்டில் தான் இருக்கிறான் என்று கூறியதும், பாராக் வாளை உருவிக்கொண்டு கூடாரத்துக்குள் நுழைந்தி ருப்பான். ஆனால் அங்கு அவன் அங்கிருந்த காட்சியைப் பார்த்துத் திடுக்கிட் டிருப்பான். அங்கு சிசெரா இரத்த வெள்ளத்தில் செத்துக் கிடந்தான். அப்பொழுது பாராக்கின் மனதில் தெபொராள் சொன்ன தீர்க்கதரிசனம் நினைவுக்கு வந்தது. தெபொராள் என்ன கூறினாளென்றால்,
நியாயாதிபதிகள் 4 : 9 “ அதற்கு அவள்: நான் உன்னோடேகூட நிச்சயமாய் வருவேன்; ஆனாலும் நீ போகிற பிரயாணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது; கர்த்தர் சிசெராவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி, தெபொராள் எழும்பி, பாராக்கோடேகூடக் கேதேசுக்குப் போனாள்.”
தேவனின் செயலை நினைத்து வியந்து நடுங்கியிருப்பான். இஸ்ரவேல் ஜனங்களை ஒரு கொடுமையான மன்னனிடமிருந்தும், மிகக்கொடுமைப் படுத்திக் கொண்டிருந்த படைத்தளபதியிடமிருந்தும் கர்த்தர் காப்பாற்றின செய்தியை ஜனங்களுக்குச் சொல்ல பாராக் ஓடினான்.
முடிவுரை:
யாகேல் தனக்குக் கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தினாள். தாமதம் ஏதுமில்லாமல் செயலில் இறங்கினாள். தான் போர்வீரர்கள் கையில் அகப்பட்டால் தன்னைக் கொன்று போடுவார்களே என்று சிறிதும் பயப்படா மல் செயலில் இறங்கினாள். தன்னிடம் உள்ளதைக் கொண்டு யாகேல் செய லில் இறங்கத் தீவிரப்பட்டாள். இதேபோல் தாவீது இராட்சதனான கோலியா த்தைக் கொல்லத் தன்னிடமுள்ள கவணினாலும், கல்லினாலும் வீழ்த்தினதை வேதத்தில் 1 சாமுவேல் 17 : 49 ல் பார்க்கிறோம். சிம்சோன் கழுதையின் ஒரு தாடையெலும்பைக் கொண்டு ஆயிரம் பேரை வீழ்த்தினதை நியாயாதிபதிகள் `5 : 16 ல் பார்க்கிறோம்.யாகேல் தெபொராளைப்போல யுத்தகளத்திற்குச் செல்லா விட்டாலும் பெரிய புகழ்பெற்ற பெலத்துடனுள்ள ஒரு படைத் தளபதியை தேவ பெலத்துடன் தன்னுடைய கூடாரத்திலிருந்தே சாகடித்தாள். நாமும் கூட வீட்டிலிருந்தே இயேசு அறியாத ஜனங்கள் நம்முடைய வீட்டிற்கு வரும் போது அவர்களுக்கு இயேசுவைப் பற்றி எடுத்துச் சொல்லலாம். எனவே நாம் யாகேலைப்போல ஞானத்தையும், தைரியத்தையும் கர்த்தர் பேரில் பெரிய விசுவாசத்தையும் தந்து, பெரிய காரியங்களைச் செய்ய கர்த்தரிடம் மன்றா டுவோம். ஏசாயா 52 : 1 ல் “எழும்பு, எழும்பு சீயோனே” என்று கட்டளை கொடு க்கப்பட்டுள்ளது. நாம் எழும்பும்போது அது பலருக்கு முன் மாதிரியாகவும், வழிகாட்டியாகவும், தைரியம் கொடுப்பதாகவும் அமையும். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…