இயேசு சீஷர்களிடம் நான் போய் உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின், மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்வேன் என்றும், தான் போகிற இடத்தையும், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றும் கூறினார். அதற்கு தோமா “நீர் போகிற இடத்தை அறியோமே,வழியை நாங்கள் எப்படி அறிவோம்” என்றான் (யோவான் 14 : 3– 5). அதற்கு இயேசு, 

யோவான் 14 : 6ல் “அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமா யிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினி டத்தில் வரான்.”

என்றார். இயேசு கிறிஸ்து நமக்கு நல்ல ஒரு வழிகாட்டி. பரலோகத்திற்குச் செல் வதைப் பற்றிய வழிகாட்டி. பரிசுத்தத்திற்கான வழிகாட்டி. அவரே நம் ஆத்மாவி ற்கும் வழிகாட்டி.இயேசு ஒருவரே வழியானவரும்,வழிகாட்டியானவருமாய் இருக்கிறார். கர்த்தர் பாவிகளுக்குத் தம் வழியைத் தெரிவிக்கிறார் (சங்கீதம் 25 : 9). சாந்தகுணமுள்ளவர்களுக்கு தமது வழியைப் போதிக்கிறார் (சங்கீதம் 25 : 9). கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷனுக்குத் தான் தெரிந்து கொள்ளும் வழியைப் போதிப்பார் (சங்கீதம் 25 : 12).

வழிகாட்டும் கிறிஸ்து:

அன்று கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள் யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கி றவர் எங்கே என்று திகைத்தபோது, ஒரு அருமையான, விசேஷமான நட்சத்திரம் இயேசு பாலகன் பிறந்த பெத்லகேமுக்கு வழிகாட்டியது (மத்தேயு 2 : 1 -11). நட்சத் திரமானது கல்லும் முள்ளும் நிறைந்த கடினமான பாதை வழியாக சாஸ்திரி களைச் சீராக நடத்தி, இயேசு பாலகன் இருந்த இடத்திற்குக் கொண்டு சேர்த்த தைப் போல, விடிவெள்ளி நட்சத்திரமாகிய கிறிஸ்து இந்த வனாந்தர பாதை வழியாக நம்மை நடத்தி பரம கானானுக்குள் கொண்டு சேர்க்கவே பாலகனாய் உதித்தார்.

வழிகாட்டும்வசனங்கள்

வேத வசனங்கள் நம்முடைய கால்களுக்குத் தீபத்தையும், பாதைக்கு வெளிச்சத் தையும் காட்டுகிறது (சங்கீதம்119 :105, நீதிமொழிகள்6 : 23). இருளிலுள்ள இடங்க ளில் பிரகாசிக்கும் விளக்கைப் போன்ற வசனங்களைக் கவனித்து அதன்படி நடந்தால் நம்முடைய காதுகளில் என்ன கேட்குமென்பதை ஏசாயா தீர்க்கதரிசி,

ஏசாயா 30 : 21 “நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.”

என்றார். பவுல் பிலிப்பியர் 2 : 14 “ஜீவ வசனத்தைப் பிடித்துக் கொண்டு உலகத் திலே சுடர்களைப் போல பிரகாசியுங்கள்” என்றார். வேதத்தை வாசிக்கும் போதெ ல்லாம், வேதத்தின் மூலமாக கர்த்தருடைய குரலைக் கேட்கிறோம்.

வழிகாட்டும் ஆவியானவர்

யோவான் 16 : 13 “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.”

என்று இயேசு தன்னுடைய வாயால் கூறினார். நமக்குள் ஆவியானவர் இருந்து நாம் செல்ல வேண்டிய வழியை உணர்த்துவார் வழி தவறிச் செல்லும்போது செல்ல விடாமல் தடுப்பார். 

யோபு பக்தன், யோபு 28 : 7ல் “ஒரு வழியுண்டு, அது ஒரு பட்சிக்கும் தெரியாது; வல்லுூறின் கண்ணும் அதைக் கண்டதில்லை;” 

என்று ஒரு விடுகதையைப் போல் கூறினார். ஆகாயத்தில் தான் அந்த வழி இருக்கிறது. ஆகாய விமானிகள் அதைக் காணவில்லை. சந்திர மண் டலத்திலே பறந்து செல்கிற விண்வெளி வீரரும் அந்த வழியைக் கண்டுபிடிக்க முடியவி ல்லை. அந்த வழி கர்த்தருடைய வருகையிலே பரிசுத்தவான்கள் பறந்து செல்கிற வழி. எக்காளச் சத்தம் தொனிக்கும் போது இமைப்பொழுதில் மறுரூபமாகி கர்த் தருக்கு எதிர்கொண்டு போகும்வழி. இயேசு கிறிஸ்து பாவத்தை, வியாதியை, உல கத்தை, இயற்கையை, பிசாசை, மரணத்தை, பாதாளத்தை ஜெயித்து ஜெயக்கொடி ஏற்றினவர். நமக்கும் இவைகளையெல்லாம் ஜெயிக்க வழிகாட்டுபவரும் அவ ரே. இயேசுவின் சிலுவையே நமக்கு ஏணியாக மாறுகிறது. அவருடைய காயங்களே பரலோகத்திற்கு ஏறும்படியாக விளங்குகின்றன. அவரேயல்லாமல் யாரும் பிதாவினிடத்தில் செல்ல முடியாது. வேதத்தில் சிலருக்கு தேவன் வழி காட்டியதைப் பற்றி பார்ப்போம்.

ஆபிரகாம்: 

ஆதியாகமம் 12 : 1 “கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.”

கர்த்தர் ஆபிராமைப் பரிசுத்தப்படுத்திப் பூரணப் படுத்துவதற்காக ஊர் என்ற கல் தேயர் ஊரைவிட்டு, இனத்தாரை விட்டு வேறு பிரித்தார். ஒரு தரிசனத்தோடு கானானை நோக்கிப் புறப்பட்டபோது, தரிசனமில்லாத பலரும் ஆபிரகாமோடு வர ஒப்புக்கொண்டு புறப்பட்டார்கள். கொஞ்ச தூரம் ஆபிரகாமின் தகப்பன் வந்தார். பின் அவரை விட்டு ஆபிராமைப் பிரித்தார். இன்னும் கொஞ்ச தூரம் லோத்தும் அவனது குடும்பமும் வந்தது. அவர்களையும் தேவன் ஆபிராமை விட்டு வேறு பிரித்தார். இன்னும் கொஞ்ச தூரம் ஆகாரும், இஸ்மவேலும் வந்தனர். அவர்க ளையும் தேவன் புறம்பே தள்ளுபடி செய்து வேறுபிரித்தார். பின் ஈசாக்கை விட் டும், பிள்ளை பாசத்தை விட்டும் வேறு பிரித்தார். ஆனால் ஒரு குறிப்பிட்ட இடம் வந்தபோது கோதுமை மணியை விட்டுப் பதர்களைப் பிரிப்பது போல, கர்த்தர் ஒவ் வொருவராக பிரிக்கச் சித்தம் கொண்டு, தன்னுடைய வழியில் ஆபிராமை வழி நடத்தி, ஆபிராமின் சந்ததியை வாக்குத்தத்தம் பண்ணின கானான் தேசத்துக்குள் பிரவேசிக்கச் செய்தார். கர்த்தர் ஆபிராமுக்கு நியமித்த வழியில் செல்ல ஆபி ராம் அவருக்கு அருமையான எல்லாவற்றையும் இழக்க வேண்டியதிருந்தது.

யாக்கோபு:

யாக்கோபு தன் தாயின் வயிற்றிலே தன் சகோதரனோடு போராடி அவனுடைய குதிங்காலைப் பிடித்துக் கொண்டே பிறந்தவன். யாக்கோபின் வாழ்க்கை போரா ட்டம் நிறைந்த வாழ்க்கையாகவே இருந்தது. சேஷ்டபுத்திர பாகத்துக்காகத் தன் சகோதரனுடன் போராட்டம், தகப்பனின் ஆசீர்வாதத்திற்காகப் போராட்டம், மனை விகளை அடைய லாபானோடு போராட்டம், கர்த்தரின் ஆசீர்வாதத்திற்காக போரா ட்டம், 20 வருடங்களுக்குப் பின் தன் சகோதரனை எவ்வாறு சந்திப்பது என்ற போராட்டம், தேவதூதனோடு போராட்டம். இத்தனை போராட்டங்களின் மத்தி யிலும் கர்த்தர் அவனை வழி நடத்தினார். எந்த மனிதனும் தூதனோடு போராடி வெற்றி பெற முடியாது. ஆனால் அதையும் தேவன் யாக்கோபை மேற்கொள்ளச் செய்தார்.

மோசே கடைசியாக இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறிய போது யாக்கோபைப் பற்றி உபாகமம் 32 : 9 – 13 ல் என்ன கூறினாரென்றால், கர்த்தர் அவனைக் கண்டு பிடித்தார், அவனை நடத்தினார் அவனை உணர்த்தினார், அவனைக் கண்மணி யைப் போல் காத்தருளினார், அவனை வழி நடத்தினார், உயர்ந்த ஸ்தானங்களில் அவனை ஏறி வரப் பண்ணினார், வயலில் விளையும் பலனை அவனுக்குப் புசிக் கக் கொடுத்தார். கன்மலையில் உள்ள தேனையும், கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் உண்ணும்படி செய்தார் என்றுள்ளது. இதில் அவன் என்ற வார்த்தை ஏழு தடவை வருவதைக் காணலாம்.இதிலிருந்து கர்த்தர் எவ்வாறு யாக்கோபை வழிநடத்தி ஆசியளித்திருக்கிறார் என்று அறிகிறோம்..

யோசேப்பு:

யோசேப்பு தன் வாழ்க்கையில் கர்த்தரைக் கன்மலையானவராக, அடைக்கலம ளிப்பவராக, வழி காட்டுபவராகக் கொண்டிருந்தார் யோசேப்பின் தகப்பனோ, தாயோ வாலிப வயதில் அவனோடில்லை. யோசேப்பின் சொந்த சகோதரர்களே அவன் மேல் பொறாமை கொண்டு அவனைப் பகைத்தனர். குழியிலே தூக்கிப் போட்டனர். எகிப்திலுள்ள மீதியானியரின் கையிலே விற்றுப் போட்டனர். ஆனால் யோசேப்பு முழுவதுமாக கர்த்தரையே சார்ந்திருந்தான். எகிப்தின் சோத னைகளைச் சந்திக்க வேண்டி வந்தது. போத்திபாரின் வீட்டில் அநியாயமாய்க் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைத்தனர். சிறைச்சாலை வாழ்க்கையையும் யோசேப்பு மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டான். ராஜா ஆள் அனுப்பி அவனு டைய கட்டுக்களை அவிழ்க்கவைத்து, பார்வோனுக்கு அடுத்த ஸ்தானத்தில் உயர் த்தினார். எந்த சகோதரர்கள் பகைத்தார்களோ அவர்கள் யோசேப்பின் காலடியில் தேவன் விழச் செய்தார் (ஆதியாகமம் 50 : 20). அத்தனை இடங்களிலும் தேவன் யோசேப்போடிருந்து அவனை வழி நடத்தினார். யாக்கோபை அக்கினியாக மாற் றின தேவன், யோசேப்பை அக்கினி ஜுவாலையாக்கினார். அக்கினி ஒரு இடத் தில் தான் இருக்கும். தேவன் யோசேப்பை அக்கினிஜ்வாலையாக்கி, அவனுடைய புகழைத் தேசம் முழுவதும் பரவச் செய்தார்

இஸ்ரவேல் ஜனங்கள்

இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நேரம் முதல் கானானை சுதந் தரிக்கும் வரையிலும், எத்தனையோ தடைகள் ஏற்பட்டுக் கொண்டே வந்தன. நீண்ட தூர பயணம் பண்ண வேண்டியிருந்தது. முதலில் கானானைச் சுதந்தரிக்க விடாத படி பார்வோன் ஜனங்களைத் தடுத்தான் தேவன் 10 வாதைகளை அனு ப்பிப் பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால் அதைத் தகர்த்தார். இரண்டாவ தாக சிவந்த சமுத்திரம் தடையாக நின்றது. மோசேயின் வாக்குத்தத்த கோல் நீட்டப்பட்ட போது (யாத்திராகமம் 15 : 8) கர்த்தருடைய நாசியின் சுவாசத்தினால் ஜலம் இரண்டாய்ப் பிரிந்து, ஜனங்களுக்கு வழி கிடைக்கப் பண்ணினார். மூன்றா வதாக யோர்தான் தடையாக நின்றது. அதனைத் தவிர்க்க யோர்தானில் ஆசாரி யர்களின் காலை வைக்கச் சொல்லி, வெள்ளத்தைத் திரும்பிப் போய் குவிய லாய் நிற்கப் பண்ணி ஜனங்களுக்கு வழியை உண்டு பண்ணினார். நான்காவதாக எரிகோவின் மதில்கள் உள்ளே செல்ல விடாதபடி தடுத்தது. இந்த தடையை உடைக்க எந்த ஆயுதமோ, குதிரைகளோ, சேனைகளோ இல்லாமல் துதித்து ஆர வாரிக்கப் பண்ணி, கர்த்தருடைய பிரசன்னத்தை இறங்கச் செய்து, எரிகோவின் மதில்களை இடிந்து போகப் பண்ணி ஜனங்களை உள்ளே போகப் பண்ணினார். முதல் தடை மனிதனாலும், இரண்டாவது தடை சமுத்திரத்தினாலும், மூன்றா வது தடை நதியின் வெள்ளத்தினாலும், நான்காவது தடை பட்டணத்தின் மதில்க ளாலும் வந்தது. தடைகள் வித்தியாசப்படலாம். தகர்த்து வழிகளை உண்டு பண்ணினவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே.

2) யாக்கோபுக்குக் காட்டிய ஏணி:

யாக்கோபு தன் தமையனை ஏமாற்றியதால் பெற்றோர்களால் அனுப்பப்பட்டான். தனிமையிலும், இரவு நேரத்தின் திகிலிலும், எதிர்காலத்தைக் குறித்த பயத்தி லும் பெத்தேல் என்ற இடம் வரை வந்தார். இருட்டி விட்டதால் அவ்விடத்துக் கற் களில் ஒன்றைத் தன் தலையில் வைத்துப் படுத்தான். அன்று இரவில் சொப்பன த்தில் அற்புதமான ஒரு ஏணியைக் கண்டார். அந்த ஏணி பூமியில் வைக்கப்பட்டி ரு ந்தது. அதன் நுனி வானத்தை எட்டியிருந்தது. அந்த ஏணியானவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. ஏணியின் ஒரு பகுதி இயேசு மனுஷகுமாரன் என்பதையும், மறு பகுதி இயேசு தேவகுமாரன் என்பதையும் காட்டியது. இது யாக்கோபுக்கு தேவன் தூரத்தில் அல்ல சமீபமாகவே இருக்கிறார் என்று காட்டியது (சங்கீதம் 145 : 8).

ஆகார் என்ற அடிமைப் பெண்ணுக்குத் தேவதூதனைப் போல் தோன்றினார். ஆபிரகாமுக்கு மோரியா மலையில் முட்புதரில் சிக்கிய ஆட்டுக்குட்டியாகக் காட்சியளித்தார். இஸ்ரவேலருக்கு ஞானக்கன்மலையாக இருந்தார். மோசேக்கு மாராவின் தண்ணீரை மதுரமாக்குகிற மரமாக இருந்தார். யோசுவாவுக்கு சேனை அதிபதியாய் தோன்றினார். யாக்கோபுக்கு விண்ணை எட்டும் ஏணியாக தம்மை வெளிப்படுத்தினார். இயேசுவே பரலோகத்திலிருந்து இறங்கினவரும், பரலோக த்தில் இருக்கிற வருமான தேவ குமாரனாகிய இயேசு. ஏணியில் கர்த்தர் நின்று,

ஆதியாகமம் 28 : 13 – 15 “அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.”

ஏணியைச் சந்திக்கும் முன்பாக யாக்கோபின் வாழ்க்கை பயத்தின் வாழ்க்கை யாக இருந்தது. பாவங்களும், சாபங்களும் பின்தொடர்ந்தன. அண்ணனுடைய கோபமும், பழிவாங்கும் எரிச்சலும் பின் தொடர்ந்தது. இப்போது தெய்வீக மனித னாக மாற்றப்பட்டார். யாக்கோபு கண்ட ஏணியில் தேவதூதர்கள் ஏறுகிறவர் களாகவும், இறங்குகிறவர்களாகவும் காணப்பட்டார்கள். இயேசு சிலுவையில் ஏணியாய் மாறி, பரலோக வாசலைத் திறந்து வைத்த போது, திரளான ஜனங்கள் அந்த ஏணியின் வழியாகப் பரலோகத்திற்கு ஏறிச் சென்றார்கள். 

எபிரேயர் 10 : 19, 20 “ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,”

தைரியமாக அந்த வழியில் பிரவேசிப்போம். 

திசை மாறியவனுக்கு வழி:

யோனா: 

கர்த்தர் யோனாவிடம் நினைவேக்குப் போய் அந்தப் பட்டணத்துக்கு எதிராகப் பிர சங்கம் பண்ணச் சொன்னார். ஆனால் யோனாவோ இஸ்ரவேலர் அடைந்த பாதிப் புக்குக் காரணம் அசிரீயர் என்பதால் அவர்கள் அழிக்கப்பட வேண்டும் என்றெ ண்ணிக் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்படியாமல் அவர் சொன்ன இடத்துக் குச் செல்லாமல் தர்ஷிசுக்குச் செல்லக் கப்பல் ஏறினார் (யோனா1 : 1 – 3). இதைய றிந்த கர்த்தர் யோனாவைத் தன் வழியில் திசை திருப்ப பெருங்காற்று என்ற சுக்கானை அனுப்பினார் (யோனா 1 : 4). அந்தக் காற்று யோனாவை தட்டி எழுப் பியது. கர்த்தர் யோனாவைத் திசை திருப்ப, தன் வழிக்குக் கொண்டு வர பெருங் காற்றை, பெரும் கொத்தளிப்பை, பெரியமீனை அனுப்பி, யோனாவைக் கொண்டு தான் செய்து முடிக்க வேண்டிய திட்டத்தை செய்து முடிக்கவும், அவனுடைய வழியை மாற்றவும் பயன்படுத்தினார். கப்பற்காரர்கள் யோனாவைக் கடலில் தூக் கிப் போட்டவுடன் அவனை விழுங்கத் தேவன் கட்டளையிட்டு வைத்திருந்த மீன் அவனை விழுங்கியது. இராப்பகல் மூன்று நாள் யோனா மீனின் வயிற் றிலிருந்து தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தார். யோனா சுவாசி ப்பதற்குத் தேவையான காற்றையும் தேவன் கொடுத்திருப்பார் (யோனா1 : 15, 17, 2 : 1 – 9). கர்த்தர் மீனுக்கு யோனாவை விழுங்கத்தான் கட்டளையிட்டாரே தவிர யோனாவை ஜீரணிக்கக் கட்டளை கொடுக்கவில்லை. யோனா கர்த்தரை நோக்கி அறிக்கையிட்டவுடன் கர்த்தர் மீனுக்கு, அவனைத் தரையில் கக்கக் கட்டளையி ட்டார். யோனாவை மூன்றுநாள் மீன் ஜீரணிக்காமல் வைத்திருந்து கரையில் கக்கியது (யோனா 2 : 7 – 10). அதன் பின் யோனா கர்த்தரின் சத்தத்தைக் கேட்டு நினிவேக்குப் போய்க் கர்த்தர் சொன்னபடியே பிரசங்கம் பண்ணினார். தேவன் நம்மைக் கொண்டு ஒரு காரியத்தைச் செயல் படுத்த நினைத்து, நாம் அதைச் செயல்படுத்தாமல் வழி தவறி சென்றால் கர்த்தர் அதை முடிக்கும் வரை விட மாட்டார்.

அதைரியசாலிகளுக்கு வழி:

கிதியோன் மீதியானியருக்குப் பயந்து கோதுமையைப் போரடித்துக் கொண்டிரு ந்த போது, கர்த்தருடைய தூதன் தரிசனமாகி பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடு இருக்கிறார் (நியாயாதிபதிகள் 6 : 11, 12) என்று கூறி, 

நியாயாதிபதிகள் 6 : 14, 16 “அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்பு கிறவர் நான் அல்லவா என்றார். அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடே கூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்.”

என்றும் கூறினார். கோழையான அவனைப் பார்த்து பராக்கிரமசாலியே என்று அழைத்து, இந்த கட்டளையைக் கொடுத்தார். கடற்கரை மணலைப் போல திரளாய் இருக்கிற மீதியானியரை முறியடிக்க (நியாயாதிபதிகள் 7 : 13) கர்த்தர் வெறும் 300பேரைத் தெரிந்து கொள்ளச் சொன்னார். கிதியோன் அந்த 300பேரிடம் எக்காளங்களையும் வெறும் பானைகளையும், பானைக்குள் வைக்கும் தீவட்டி களையும் கொண்டு தயாராக்கினார். அவர்கள் எக்காளங்களை ஊதி பானைகளை உடைத்து அதற்குள் இருக்கும் தீவட்டியைக் கையில் எடுத்து, “கர்த்தருடைய பட்டயம் கிதியோனின் பட்டயம்” என்று சத்தமிட்டனர். கர்த்தர் ஒருவர் பட்ட யத்தை ஒருவருக்கு விரோதமாக ஒங்கப் பண்ணினார். அவர்கள் அனைவரும் சிதறிக் கூக்குரலிட்டு ஓடிப் போனார்கள். இதில் பானையானது நமது சரீரத்தைக் குறிக்கிறது. தீவட்டி கர்த்தருடைய வசனத்துக்கும், பரிசுத்தஆவியின் அக்கினிக் கும் அடையாளமானது (எரேமியா 5 14). எக்காளமானது அதன் சத்தத்தை கேட் கும் ஜனங்களுடைய எலும்புகளில், நரம்புகளில், வல்லமையும், பலனையும், வீரத்தையும் கொண்டு வரும். கோழையாக எதிரிகளுக்குப் பயந்து கொண்டிருந் தவனை தேவன் அவனுடைய வழிகளை மாற்றி, திரளான எதிரிகளுக்கு மத்தியில் நிற்க வைத்து ஜெயத்தைக் கொடுத்தார்.

சத்தியம்

யோவான் 17 : 17 “உம்முடைய வசனமே சத்தியம்.”

சங்கீதம் 119 : 142 “உம்முடைய வேதம் சத்தியம்.” 

இயேசு மற்ற தலைவர்களைப் போலவோ, முனிவர்களைப் போலவோ சத்தியத் தைத் தேடி அலையவில்லை. அவர்கள் அனைவரும் மனிதன், ஆவி, மரணம், பிரபஞ்சம், சொர்க்கம், நரகம் போன்றவற்றைப் பற்றி பல கருத்துக்களைக் கூறி னர். இயேசு இவர்களைப் போல சிந்தனை கருத்துக்களை வெளியிடவில்லை. தேவன் மனிதன், ஆவி, மரணம், பிரபஞ்சம், பரலோகம், நரகம், நியாயத்தீர்ப்பு, பாவம், சாத்தான், தூதர்கள், இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் போன்றவ ற்றைப் பற்றித் தெளிவாகவும், அழுத்தமாகவும், அதிகாரமுடனும் கூறினார். அவருடைய அதிகாரமுடைய சொற்களைக் கேட்டு மக்கள் மலைத்தனர் (லூக் கா 4 : 36). இப்படிப்பட்ட சத்திய வார்த்தைகளைக் கொண்டு தான் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார் (ஆதியாகமம் 1 :1). அவருக்குள் சகலமும் சிருஷ்டி க் கப்பட்டது. அவரைக் கொண்டும், அவருக்கென்றும் சகலமும் சிருஷ்டிக்கப் பட்டது (கொலோசெயர் 1 : 16).

யோவான் 1 : 1 – 3 “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.”

என்று யோவான் அப்போஸ்தலர் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். ஆதியாகமத் திலிருந்து வெளிப்படுத்தல் வரை தேவன் சொன்னதைத் தான் இன்னொருவர் சொல்லியிருப்பார். வேத புத்தகம் விலை மதிக்க முடியாத பொக்கிஷமாகும். இதி லுள்ள சத்திய வசனங்கள் பிள்ளைகளை வளரச் செய்யும் பாலாகவும், மற்றவர் களுக்கு ஆவிக்குரிய மன்னாவாகவும் விளங்குகிறது. வேதத்திலுள்ள ஒவ்வொரு எழுத்தும் ஆவியாயும், ஜீவனாயும் இருக்கிறது (யோவான் 6 : 63). வேதத்தில் பிரி யமாயிருந்து இரவும் பகலும் அதை தியானிக்கும் போது, நல்ல கனி கொடுக்கி றவர்களாகவும், இலை உதிராமலிருக்கிற மரத்தைப் போலவும் இருப்பார்கள் என்று தாவீது (சங்கீதம் 1 : 2, 3 ல் கூறியிருக்கிறார். சத்திய வசனங்கள் நம்மைப் பரிசுத்தப் படுத்துவதால் பரிசுத்த வேதாகமம் என்று அழைக்கிறோம். வேதத்தில் பரிசுத்தத்தின் ரகசியம் அடங்கியிருக்கிறது. காரணம் அந்த சத்திய வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது (யோவான் 6 : 63). அது பேதையை ஞானியா க்குகிறது, பாவியை பரிசுத்தப் படுத்துகிறது. யோசுவாவிடம் கர்த்தர்,

யோசுவா 1 : 7, 8ல் “என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்க மாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக் கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப் பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்.”

அதன்படி யோசுவா சென்ற இடமெல்லாம் வெற்றி வாகை சூடினான். சத்திய வார்த்தைகளைப் படிக்கப்படிக்கப் பேதைகளும் ஞானவான்களாவார்கள் (சங்கீதம் 19 : 7). இது நாம் நடக்க வேண்டிய வழியைக் காட்டும். நாம் படுத்திருக்கும் போது அது நம்மைக் காப்பாற்றும். நாம் விழித்திருக்கும் போது அது நம்மோடு சம்பாஷிக்கும் (நீதிமொழிகள் 6 : 21,22). இதைத் தியானிக்கும் போது நமக்குள் அக் கினி மூழும் (சங்கீதம் 39 : 3).பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்ட யாவர் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார் (அப்போஸ்தலர்10 : 44 – 46). இது நம்மை நமக் குக் காட்டும் கண்ணாடியாக உள்ளது. நம்ஆத்மாவின் நிலைமையையும், ஆவிக் குரிய நிலையையும் காட்டுகிறது. வேதத்தை வாசிக்கிறவர்களும், கேட்கிறவர் களும் பாக்கியவான்கள் என்று யோவான் கூறுகிறார் (வெளிப்படுத்தல் 1 : 3). மேலும் தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருந்து அதற்குக் கீழ்படிய வேண் டும் என்றும் யோவான் கூறுகிறார் (யோவான் 15 : 7). கர்த்தர்,

உபாகாமம் 11 : 19 – 21 “நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து, அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிற போதும் அவைகளைக் குறித்துப் பேசுவீர்களாக. அவைகளை உங்கள் வீட்டு நிலைகளிலும் உங்கள் வாசல்களிலும் எழுதுவீர்களாக.” 

இந்த சத்திய வசனங்கள் செய்தவைகளைப் பற்றிப் தியானிக்கலாம்.

சத்திய வார்த்தையால் சாத்தானை ஜெயித்தார்:

சாத்தான் இயேசுவை சோதிக்கத் தனிமையாக அவர் வனாந்தரத்தில் இருக்கும் போது வந்தான். அப்போது இயேசுவின் உறவினர்களோ, நண்பர்களோ, இனத் தவரோ அவர் கூட இருந்ததில்லை. இதை மத்தேயு 4 : 1 -11, மாற்கு 1 : 12 –13 லூக்கா 4 : 1 –12ல் காணலாம். இந்த வேதப்பகுதிகள் நாம் சோதனைகளை எவ்விதமாய் “எழுதியிருக்கிறதே” என்று சொல்லி வேத வசனங்கள் மூலம் ஜெயிக்க முடியும் என்பதைக் காட்டுகிறது. இயேசு இரவும் பகலும் 40 நாட்கள் உபவாசம் இருந்ததினால் அவருக்குப் பசி உண்டாயிற்று. அப்போது சாத்தான் அவரிடத்தில் வந்து,

மத்தேயு 4 : 3 “அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.” 

இயேசு பசி மயக்கத்தில் இருப்பார் என்பதையும் உபவாசத்தால் சரீர பலன் ஒடுங்கிப் போயிருக்கும் என்பதையும் அறிந்து சாத்தான் வந்தான். நீர் தேவனு டைய குமாரனேயானால் என்ற சந்தேகத்தைக் கொண்டு வருகிற வார்த்தை யைக் கூறுகிறான். இயேசு தேவகுமாரன் என்பதற்காகக் கற்களை அப்பமாக்க விரும்பவில்லை. சாத்தானுக்குச் செவி கொடுத்து தன் பசியை ஆற்றவும் விரும் பவில்லை. அதனால் பேரும், புகழும் பெறவும் விரும்பவில்லை. பிதாவின் சித் தமில்லாமல் தாமாக ஒரு காரியத்தைச் செய்யவும் இயேசு பிரியப்படவில்லை. தேவனுடைய வரத்தைத் தன்னுடைய சொந்த பிரயோஜனத்திற்குப் பயன்படு த்தவும் இயேசு விரும்பவில்லை. எனவேதான் இயேசு, 

மத்தேயு 4 : 4 “அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தி னாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.” (உபாகமம் 8 : 3) 

இரண்டாம் சோதனை:

மத்தேயு 4 : 5, 6 “அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.”

என்று சாத்தான் இரண்டாவது தடவையாக இயேசுவைச் சோதித்தான். இந்த முறை “எழுதியிருக்கிறதே” என்று கூறி வேத வசனத்தை வைத்து சோதித்தான். அவன் காட்டிய வசனம் (சங்கீதம் 91 : 11, 12). இயேசு குறுக்கு வழியில் தமது வல்லமையை, வரங்களை நிரூபிக்க விரும்பவில்லை. இயேசு, உபாகமம் 6 : 16 ல் உள்ள “உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பீர்களாக.” (மத் தேயு 4 : 7) என்ற வேத வசனங்களின் மூலம் இரண்டாவது சோதனையிலும் வெற்றி பெற்றார்.

மூன்றாவது சோதனை

மத்தேயு 4 : 8, 9 “மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.”

என்று சாத்தான் மூன்றாவது முறையாக இயேசுவை சோதித்தான். இயேசு பூமிக்கு வந்ததன் நோக்கம் சாத்தானுக்குத் தெரியும். ஆதலால் அதை முறியடி க்க இவ்வாறு கூறினான். நியாயப்பிரமாணத்தின் முதல் கட்ட ளையை மீறும்படி தன்னைப் பணிந்து கொள்ளும்படி சாத்தான் கூறினான். உடனே இயேசு உபாகமம் 6 : 13 ல் உள்ள, 

மத்தேயு 4 : 10 “அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.”

மற்ற இரண்டு சோதனைகளிலும் இயேசு “அப்பாலே போ சாத்தானே” என்று சொல்லவில்லை. சாத்தான் ஆராதனையை விரும்பிய போது அவனைக் கடிந்து கொண்டார். சோதனைகளை இயேசு ஜெயித்ததால் தேவ தூதர்களுக்குப் பெரிய சந்தோஷம் உண்டாகி, அவர்கள் வந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்கள். சோதனை முடிந்த பின் ஆவியானவரின் பலத்தினாலே கலிலேயாவுக்கு திரும் பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசம் எங்கும் பரவியது (லூக்கா 4 : 14). ஆவியானவரை சத்திய ஆவி என்று வேதத்தில் கூறியிருப் பதைப் பார்க்கிறோம். சத்திய ஆவி நமக்குள் இருப்பதாக (யோவான் 14 : 17) லும், தேவன் அனுப்பப் போகிற சத்திய ஆவியாகிய தேற்றரவாளன் வந்து இயேசுவைக் குறித்து சாட்சி கொடுப்பார் என்றும் யோவான் 15 : 26 லும், சத்திய ஆவியாகிய அவர் வந்து சகல சத்தியத்திற்குள்ளும் நம்மை நடத்துவார் என்று யோவான் 16 : 13 லும், நாம் தேவனால் உண்டாயி ருப்பதினால் வஞ்சக ஆவி இன்னதென்றும் சத்திய ஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம் 1யோவான் 4 : 6 லும், இயேசு கிறிஸ்துவே ஜலத்தினாலும், இரத்தத்தினாலும் வந்தவர் என்று சத்திய ஆவியா னவர் சாட்சி கொடுக்கிறார் என்றும் சத்திய ஆவியைக் குறித்து வேதத்தில் பார்க் கிறோம். சத்தியஆவியான அவர் கேள்விப்பட்டவைகள் யாவையும் சொல்லி, வரப்போகிற காரியங்களை நமக்கு அறிவிப்பார். அவர் அருளிச் செய்ததுதான் வேதாகமம். அவருடைய பிள்ளைகளை சத்திய மார்க்கத் திலே அழைத்துச் செல்வார். அதனால் தான் தாவீது, 

சங்கீதம் 43 : 3 “உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக.” என்று கூறினார்.

யோவான் 1 : 4 “அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.”

எல்லா ஜீவனும் இயேசு கிறிஸ்துவுக்குள்ளிருக்கிறது. அந்த ஜீவன் ஒவ்வொருவ ருக்குள்ளும் ஒளியாய் இருக்கிறது.ஒரு மனிதனுடைய ஆத்மாவில் இயேசு தருகிற ஜீவன்தான் நித்தியஜீவன். அது என்றென்றைக்கும் அழியாது. விசுவாசி களின் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. அந்த ஜீவன் கிறி ஸ்துவாகிய ஜீவன் வெளிப்படும் போது, அவரோடு கூட வெளிப்படும் (கொலொ செயர் 3 : 4). அவர்கள் பரலோகம் சென்று அந்த தேசத்திலே என்றென்றும் வாழ்வா ர்கள். இயேசு நிக்கோதேமுவிடம் பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரனை எதற்காக அனுப்பினார் என்று,

யோவான் 3 : 16ல் “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”

இயேசு நமக்கு ஜீவனை கொடுக்கவும் அது பரிபூரணப்படவும் தான் வந்தார். 

1.கிறிஸ்துவில்நித்திய ஜீவன்

ஒரு மனிதன் பெற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஈவு நித்திய ஜீவன். அது பரலோகத்திற்குச் செல்லக்கூடிய கிருபையைக் குறிக்கிறது. நமது சரீரம் மரணம் அடைந்தாலும், நமது ஆத்மாவுக்குள் ஜீவன் இருக்கும். விசுவாசிகளின் இந்த ஜீவன் கிறிஸ்துவோடு சேருகிறது. ஆதாம் தேவனுடைய கட்டளையை மீறி விலக்கப்பட்ட கனியைப் புசித்ததால் “நீ புசிக்கும் நாளிலே சாகவே சாவாய்” என்று கர்த்தர் கூறினார் (ஆதியாகமம் 2 :17).ஆனால் 930 வருடங்கள் வரை ஆதாம் வாழ்ந்தான். தேவன் கூறியது அந்த நிமிடத்தில் அவனுடைய ஆத்மா மரணம் அடைந்தது. ஆதாமுக்கும் தேவனுக்கும் உள்ள உறவு அன்றோடு மறைந் தது. மரித்துப் போயிருக்கும் ஆத்மாவிலே மீண்டும் ஜீவனையும் வெளிச்சத் தையும் கொண்டு வருவது இயேசுவின் இரத்தம் தான். இயேசு தன்னுடைய சீஷர் களிடம் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். அதற்குப் பேதுரு “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்றான் (மத்தேயு 16 : 15, 16).

1யோவான் 5 : 11. 12 “தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச்சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.” 

2) வேத வாக்கியங்கள் மூலம் நித்திய ஜீவன்:

வேத வசனத்தின் படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்போது நமக்கு நித்தியஜீவன் கிடைக்கிறது. அவைகள் இயேசுவைக் குறித்து சாட்சியும் கொடுக் கிறது (யோவான் 5 : 39). இயேசு இன்னும் அழுத்தமாக,

யோவான் 5 : 24ல் “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” என்றார்.

தேவனுடைய வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது என்கிறார் (யோவான் 6 : 63). எரேமியா அவருடைய வார்த்தைகள் “என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப் போல் என் இருதயத்தில் இருந்தது என்று எரே மியா 20 : 9 ல் கூறினார். கர்த்தரோ எரேமியா 23 : 29 ல் “என் வார்த்தை அக்கி னியை போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப் போலும் இருக்கும்” என்றார். ஒவ்வொரு வேத வசனத்துக்குள்ளும் தேவ ஆவியும், தேவனுடைய ஜீவனும், தேவனுடைய அக்கினியும், தேவனுடைய வல்லமையும் இருக்கிறது. அவருடைய வாக்குத்தங்கள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறது. வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் அவருடைய வார்த்தைகள் ஒழிந்து போவதில்லை.

3) கிறிஸ்துவின் மாம்சத்தில் நித்திய ஜீவன்

யோவான் 6 : 54 “என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.”

கர்த்தருடைய பந்தியில் பங்கேற்கும் போதெல்லாம் கர்த்தருடைய மாம்ச த்தையும், இரத்தத்தையும் நினைவு கூறுகிறோம். அப்பமானது இயேசுவு க்கு அடையாளமாய் இருக்கிறது. திராட்சைரசமானது இயேசுவின் இரத்தத்திற்கு அடையாளமாய் இருக்கிறது. அது பாவ மன்னிப்புக்காக இயேசு கிறிஸ்து நம் மோடு செய்த புதிய உடன்படிக்கை. இயேசு தம்முடைய பிள்ளைகளுக்கு தம்மு டைய சரீரத்தை அப்பமாக்கினார்.

4) விசுவாசம்மாயிருக்கிறவனுக்கு நித்திய ஜீவன்:

குமாரனிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாய் இருக்கிறான் (யோவான் 3 : 36). இயேசு ஆணித்தரமாக,

யோவான் 6 : 47ல் “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

என்றார். இதை யோவான் நாம் நித்திய ஜீவன் உண்டென்று அறிய வேண்டு மென்றும், தேவனுடைய குமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்க வேண்டுமென்றும் கூறுகிறார் ( 1யோவான் 5 : 12).

5) சோர்ந்து போகிறவனுக்கு நித்திய ஜீவன்:

ரோமர் 2 : 7 “சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.”

என்று பவுல் கூறுவதைப் பார்க்கிறோம் ஆவிக்குரிய ஜீவியத்தில் நாம் முன்னே றும் போது சோர்வு வருகிறது. அந்த சமயத்தில் நாம் கர்த்தரை சார்ந்து கொண் டோமானால், எந்த சோர்வும் நம்மை மேற்கொள்ளாது. முடிவு பரியந்தம் நிலை நிற்பவன் தான் இரட்சிக்கப்படுவான். மாம்சம் பலவீனமாக இருந்தாலும் ஆவியோ உற்சாகமுள்ளது. சரீர சோர்வு நீங்கி நித்திய ஜீவன் உங்கள் உள்ளத்தில் உருவாகும்.

முடிவுரை:

யோவான் 17 : 3 “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.”

என்று இயேசு கூறிய நித்திய ஜீவனை நம்முடைய சொந்த முயற்சியாலோ, நாம் செய்கிற நற்கிரிகளினாலோ, தூய்மையாக வாழ்வதாலோ பெற முடியாது. இயே சுவின் கிருபையினாலும், இரக்கத்தினாலும் இலவசமாக அவரிடமிருந்து விசுவா சிகளாக, அவருடைய பிள்ளைகளாக மாறும் போது பெறுகிறோம். நாம் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பது தான் தேவனுடைய சித்தமாயிருக்கிறது (யோவான் 6 : 40). இயேசு இந்த பூமியில் வாழ்ந்த முப்பத்தி மூன்றரை ஆண்டுகள் இயேசுவின் மாம்சசரீரம் ஏதாவது ஒரு இடத்தில் தான் இருக்க முடிந்தது. ஆனால் இயேசுவின் சரீரம் சிலுவையில் உடைக்கப்பட்டு, அவருடைய ஜீவன் ஊற்றப்பட்ட போது, அவருடைய பிரசன்னம் உலகம் முழுவதும் நிரம்பியது. எனவே அந்த ஜீவனுக்குள் நாம் பிரவேசிப்போம். இயேசுவிடம் ஒருவன் வந்து “நித்திய ஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையை செய்ய வேண்டும்” என்று கேட்டதற்கு “நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.” எனவே நாம் அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய ஜீவனில் பிரவேசிப்போம். ஆமென்.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago