யோவான் 10 : 7, 9 “ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லு கிறேன். நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட் சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.”
யோவான் சுவிசேஷத்தின் 7 இடங்களில் “நான்யார்” என்று கூறியுள்ளார் இதில்”நானே ஆடுகளுக்கு வாசல்” என்று கூறியதின் விளக்கத்தைப் பார்க்கலாம். இயேசு சமயத் தலைவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது இவ்வாறு கூறினார். இங்கு இஸ்ரவேலரை தொழுவமாகவும், இயேசுவைத் தொழுவத்தின் வாசலா கவும், கிறிஸ்து யாருக்காக மரித்தாரோ அவர்களை ஆடுகளாகவும் வேதம் கூறுகிறது. இஸ்ரவேல் தேசத்திற்குள் வாசல் வழியாக தன்னுடைய பிள்ளைக ளுக்காக வந்தவர் இயேசு. சட்டப்படியாக, பழைய ஏற்பாட்டின் நிறைவேறுதலாக வந்தவர் (லூக்கா 1 : 38, மீகா 5 : 2,ஏசாயா 7:14,11 :1). இயேசு தனக்குச் சொந்தமான வர்களைப் பெயர் சொல்லி அழைக்கிறார். பேதுரு, சவுல் யாக்கோபு, யோவான், பிலிப்பு, நாத்தான்வேல்,சகேயு, பவுல் இவர்களனைவரும் இயேசுகிஸ்துவின் சத்தத்துக்குச் செவி கொடுத்தனர். இயேசு நம்மை அவருடைய சீஷத்துவத்துக் காக அழைக்கிறார். உண்மையான மேய்ப்பனாக விரும்பும் அனைவரும் கிறிஸ்து என்ற வாசல் வழியாக ஆட்டுத் தொழுவத்துக்குள் பிரவேசிப்பார்கள். நாம் அவரு டைய ஆடுகளில் ஒன்றாக இருந்தால் நம்மையும் அவர் பெயர் சொல்லி அழைத்து, அவருடைய வாசல்களில் பிரவேசிக்கச் செய்வார். ஜெப ஆலயத்தி லிருந்து பிறவியிலேயே பார்வையற்றவனாக இருந்த ஒருவனை வெளியேற் றினர். இயேசு அந்த மனிதனைத் தேடிச் சென்று அவனுக்குத் தான் யார் என்பதை வெளிப்படுத்தி பார்வையடையச் செய்தார். இப்பொழுது அந்த பார்வையற்ற மனிதனுக்கு இயேசு வாசலானார். அப்பொழுது அந்தப் பார்வை பெற்றவன் இயேசுவின் மந்தைக்குள் வந்து இயேசுவைப் பின்பற்றினான். நம்மை இரட்சிப்புக்குள் அழைத்துச் செல்லும் ஒரே வாசல் கிறிஸ்துவாகிய வாசல்.
அப்போஸ்தலர் 4 : 12 “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.”
நாம் பாவச்சேற்றிலிருந்து வெளியே வரவும், நம்முடைய பாவங்கள் கழுவப் பட வும் இருக்கும் ஒரே வாசல் கிறிஸ்துவாகிய வாசல். நம்மை சிலுவையாண்டை அழைத்துச் செல்லும் வாசல் கிறிஸ்துவாகிய வாசல். நம்மைப் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரே வாசல் கிறிஸ்துவாகிய வாசல். அந்த வாசல் ஒரு நம்பிக்கையின் வாசல், அற்புதத்தின் வாசல், வாக்குத்தத்தின் வாசல், ஆசீர்வாத த்தின் வாசல். அப்படிப்பட்ட வாசல்களை பற்றிப் பார்க்கலாம்.
2) இயேசு திறந்த வாசல்:
மத்தேயு 27 : 51 “அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது.”
இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது தேவாலயத்தின் திரைசீலை கீழிருந்து மேல் வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. துணிகள் காற்றினால் கீழிருந்து மேலா கக் கிழிவது இயற்கை. ஆனால் அப்பொழுது மேலிருந்து கீழாகக் கிழிந்தது. இயேசுவின் சரீரமாகிய அந்தத் திரை இயேசுவின் மரண நேரத்தில் கிழிக்கப் பட்டது. பரிசுத்த ஸ்தலத்தையும், மகாபரிசுத்த ஸ்தலத்தையும் பிரிப்பதற்காகப் போடப்பட்ட அந்தத் திரை தேவனுடைய சமூகத்துக்குச் செல்லும் பாதையை அடைத்துக் கொண்டிருந்தது. இயேசுவின் மரணத்தின் மூலம் அந்தத் திரை நீக்கப்பட்டது. மகாபரிசுத்த ஸ்தலத்தின் வாசலிலிருந்த அந்தத் திரைச்சீலை தேவனுடைய சித்ததினால், தேவனுடைய வல்லமையினால் மேலிருந்து கீழாகக் கிழிந்தது. அதாவது பிதாவாகிய தேவனுடைய சமூகத்திற்கும், கிருபை யின் சிங்காசனத்திற்கும் நாம் நேரிடையாகச் செல்ல முடியாமலிருந்த தடைகள் யாவும் தேவனுடைய செயலால் அகற்றப்பட்டன. பிரதான ஆசாரியன் மட்டுமே வருடத்திற்கு ஒரு முறை மக்கள் சார்பாக பாவநிவாரணப் பலியின் இரத்தத் துடன், அந்த மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் நுழைய முடியும். ஆனால் அந்த வாசல் கிறிஸ்துவின் மரணத்தினால் திறக்கப்பட்டு விட்டது. கிறிஸ்துவையும், அவருடைய வார்த்தையையும் விசுவாசிக்கும் யாவரும் கிறிஸ்துவின் வாசல் வழியாக தேவனுடைய சமூகத்தில் பிதாவின் மகிமையின் பிரசன்னத்திற்குள் பிரவேசிக்க முடியும். அங்கே தேவாதி தேவனோடு ஐக்கியம் கொள்ளலாம் (மத்தேயு 27 : 51) இயேசுதான் அந்த புதிய ஜீவவழியை ஏற்படுத்தினார்.
3) உடைக்கப்பட்டவாசல்:
யோசுவா 6 : 1 “எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை.”
இஸ்ரவேலர்கள் எரிகோவை நோக்கி உடன்படிக்கையோடும், உடன்படிக்கை பெட்டி யோடும், காண்டாமிருகத்துக்கொத்த பலனோடும் வருகிறார்கள். ஆனால் எரிகோவின் வாசலோ அடைக்கப்பட்டிருந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் தேவனின் கட்டளைப்படி எரிகோவைச் சுற்றித் துதித்துக் கொண்டே வந்தபோது தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாகப் போனார் (மீகா 2 : 13). சேனைகளின் கர்த்தரால் எரிகோவின் மதில்கள் உடைக்கப்பட்டு திறந்த வாசல் வழியாக உள்ளே நுழைந்து எரிகோவைக் கைப்பற்றினர். ஏரோதுராஜா பேதுருவை சிலுவை யிலடைத்தான். கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பி முதலாம் வாசலையும், இரண்டாம் வாசலையும் திறந்து கடக்கச் செய்து, நகரத்துக்குள் செல்கிற இரும்புக் கதவு போட்டிருந்த வாசலையும் திறக்கச் செய்து, பேதுருவை வெளியே வரச் செய்தார் (அப்போஸ்தலர் 12 : 1–10). ரோம அதிகாரிகள் பவுலையும், சீலாவையும் அநேக அடி அடித்துச் சிறையிலடைத்தனர். அவர்களிருவரும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணித் துதித்தப் பாடினார்.
சடுதியில் சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்தது. கட்டுகளும் கழன்றது (அப்போ ஸ்தலர் 16 : 22 – 26). துதிகளின் மத்தியில் வாசம் பண்ணும் தேவன் தடைகளை அகற்றி வாசல்களைத் திறக்கச் செய்தார். இஸ்ரவேல் ஜனங்களைக் கானானுக் குள் நுழைய விடாதபடி பார்வோன் தடை செய்தான். சிவந்த சமுத்திரம் தடையாக நின்றது. யோர்தான் தடையாக நின்றது. அமலேக்கியர் யுத்தம் பண்ணித் தடை செய்தனர். ஆனால் சேனைகளின் கர்த்தரான இயேசு ஒவ்வொரு அடைக்கப்பட்ட வாசலையும் திறக்க வைத்து கடக்கப் பண்ணினார். எசேக்கியா ராஜா மிகவும் வியாதிப்பட்டு மரணத்தருவாயில் இருந்தார். அவர் கர்த்தரை நோக்கிக் கண்ணீரோடு வேண்டினார். தேவன் அவருடைய கண்ணீரைக் கண்டு மனதுருகி ஆரோக்கியத்தின் வாசலைத் திறக்கச் செய்து அவருடைய ஆயுசு நாட்களை 15 வருடம் கூட்டிக் கொடுத்தார். மூன்றாம் நாளில் துதித்துக் கொண்டே எசேக்கியா ராஜா ஆலயத்துக்குச் சென்றார் (2இராஜாக்கள் 20 : 5, 6). கோரேஸ் ராஜா பிறப்பதற்கு முன்னே ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக,
ஏசாயா 44 : 28 “கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்.”
ஏசாயா 45 : 1, 2 “கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப்பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:”
இந்தக் கோரேஸ் ராஜா தேவனை ஆராதிக்காதவன். ஆனாலும் தேவன் அவனை ஏசாயா 45 : 1 ல் “அபிஷேகம் பண்ணப்பட்டவன்” என்கிறார். கோரேஸ் ராஜா பெர்சிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி அரசாண்டவன். பின்பு பாபிலோனைக் கைப் பற்றினான். மத ஒற்றுமை வேண்டுமென்று நினைத்துச் செயல்பட்டவர். தேவன் இவரை தன்னுடைய ஒரு முக்கியமானப் பணியைச் செய்வதற்காக வேறு பிரித்தார். எருசலேம் நகரத்தைக் கட்ட அனுமதியளிக்க இவர் மூலம் கர்த்தர் செயல்பட்டார். மனிதகுலத்தின் மீட்பை இஸ்ர வேலின் மூலம் அருளுவதற்காகத் தேவன் தனது மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கவும் கோரேஸை உபயோகித்தார். கோரேஸ் ராஜா யூதர்களை (அடிமைப் பட்டு, சிறை பிடிக்கப்பட்டுக் கூட்டி வந்தவர்களை) தங்கள் தேசத்துக்குத் திரும்பிப் போக அனுமதியளித்தார். கர்த்தர் அவனுக்கு முன்பாகச் சென்று கதவுகளைத் திறந்து வைத்து கோணலானவைகளை செவ்வையாக்குவேன் என்கிறார். தேவனை வணங்காத ஒரு மனிதனை தேவன் அபிஷேகம் பண்ணி அவன் மூலமாக சில காரியங்களைச் செய்யச் செய்து, . அடைக்கப்பட்ட வாசல்களைத் திறக்கச் செய்ததை இந்த ராஜாவிலிருந்து அறிகிறோம்.
4) பரலோக வாசல்:
இயேசு மத்தேயு 16 : 19ல் “பரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்தில் நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார்.”
பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோல்களை பேதுரு பயன்படுத்தினார். யூதர்களு க்கிடை யில் முதன்முதலில் நற்சாட்சி அறிவித்த போதும், புதிதாக சபையிலே யூதர்களை சேர்த்த போதும், புற இனமான ரோமர்களின் மத்தியில் கொர்நெ லியுவின் வீட்டில் நற்செய்தியை அறிவித்து அவர்களுக்கு ஞானஸ்நானம் அளிக் கச் செய்த போதும் இயேசு கூறின திறவு கோல்களைப் பயன்படுத்தி வாசல்க ளைத் திறந்தார் (அப்போஸ்தலர் 2 : 14 – 41, 10 : 34 – 48). பரலோகவாசல் என்பது நித்திய வாசல், ஒளிமயமான வாசல். அங்கே இராக்காலம் இல்லாதபடியால் பர லோகத்தின் வாசல்கள் அடைக்கப்படுவதே இல்லை. பாதாளத்திற்கு 1000 வாசல் கள் உண்டு. ஆனால் பரலோகம் செல்ல ஒரே ஒரு வாசல்தான் உண்டு. அது இயேசு கிறிஸ்து என்னும் வாசல். அவரையல்லாமல் ஒருவனும் அந்த வாசலுக் குள் நுழைய முடியாது. அதைத்தான் இயேசு,
மத்தேயு 7 : 13, 14 இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.”ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.”
இந்த வசனங்களில் இயேசு இரண்டு வகையான வாசல்களை பற்றிக் கூறுகிறார். 1. இடுக்கமான வாசல் 2. விசாலமான வாசல். இடுக்கமான வாசல் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் மிகக் குறைவான ஜனங்களே. உண்மையான மனந்திரும்பு தலோடு பிரவேசிக்கிறவர்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாகவும், அவரு டைய கற்பனைக்கு உண்மையுடன் கீழ்ப்படிகிறவர்களாகவும், அவருடைய ராஜ்ஜியத்தையும், நீதியையும்தேடுகிறவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் உண்மையான விசுவாசத்துடனும், அன்புடனும் தூய்மையுடனும், விடா முயற் சியோடு, முடிவு வரை அந்த இடுக்கமான வாசலுக்குள் நுழைய முயற்சிப்பார்கள். கெட்டுப் போகிறவர்கள் ஜீவனுக்கு அழைத்துச் செல்கிற அந்த இடுக்கமான வாசல்களுக்குள் பிரவேசியாமல் விரிவும், விசாலமுமாக இருக்கிற அந்த வாசலுக்குள் பிரவேசிப்பார்கள்.
5) ஆட்டுவாசல்:
நெகேமியா 3 : 1ல் பிரதான ஆசிரியனும், ஆசாரியர்களும் எழுந்து ஆட்டு வாசலைக் கட்டினார்களென்று பார்க்கிறோம். இயேசு அந்த ஆட்டுவாசல் வழியாகத்தான் நுழைந்தா ரென்று என்று யோவான் 5 : 2 ல் கூறப்பட்டுள்ளது. அந்த வாசலின் அருகே தான் பெதஸ்தா குளம் இருக்கிறது. இயேசு குருத்தோலை பவனியோடு செல்லும் போது மட்டும் தான் கிழக்கு வாசல் வழியாகச் சென்றார். மற்ற எல்லா நேரங்களிலும் ஆட்டுவாசலைத் தான் பயன்படுத்தினார். இந்த வாசல் வழியாகத்தான் பலிக்கான மிருகங்களை நகரத்துக்குள் கொண்டு வருவார்கள். பலியிடப்படும் ஆடுகளுக்கு அடையாளமாக இயேசு அந்த வாசலைப் பயன்படுத்தியிருக்கலாம். யோவான் ஸ்நானகன் இயேசுவை,
யோவான் 1 : 29 “யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.”
இயேசு தன்னுடைய செயலிலும், ஆழ்த்துவத்திலும் ஆட்டுக்குட்டியானவர். உலகத்தின் பாவங்களை நீக்க வந்தவரும் இயேசுவே. எனவே இந்த ஆட்டு வாசலானது சிலுவைக்கு அடையாளமாக இருக்கிறது. சிலுவை தான் தேவனோடு நமக்குள்ள தொடர்பைத் துவங்கும் இடம். இயேசுவை நமது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் வரை வேறு எதையும் நாம் இயேசுவினிடத்தில் கேட்க முடியாது. ஆட்டுவாசல்தான் தேவனுக்கும் நமக்கு முள்ள முதல் உறவை வெளிப்படுத்தும் அடையாளமாயிருக்கிறது. ஏசாயா தீர்க்கதரிசி தீர்க்கதரிசனமாக,
ஏசாயா 60 : 11ல் “உன்னிடத்துக்கு ஜாதிகளின் பலத்த சேனையைக் கொண்டுவரும்படிக்கும், அவர்களுடைய ராஜாக்களை அழைத்து வரும்படிக்கும் உன் வாசல்கள் இரவும்பகலும் பூட்டப்படாமல் எப்பொழுதும் திறந்திருக்கும்.’
இரட்சிக்கப்பட்ட உலக ஜனங்கள் ஆயிரவருட அரசாட்சியில் இஸ்ரவேலுக்கு கொண்டு வரப்படுவார்கள். நாம் இவைகளையெல்லாம் செய்ய இந்த நம்பிக்கையின் வாசலுக்குள் நுழைந்து கிருபாசனத்தண்டை சேருவோம்.
6) ஜீவனருளும் வாசல்:
யோவான் 10 : 9, 10 “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.”
என்று இயேசுதெளிவாக நானேவாசல் என்கிறார். இயேசு ஒருவரே உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்குமான வழி. திருடன் திருடவும், கொல்லவும், அழிக்கவுமே வருகிறான். ஆனால் இயேசுவோ நமக்குப் பரி பூரண நன்மையைக் கொடுக்கவும், பரிபூரண வாழ்க்கையைக் கொடுக்கவும், பாவிகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கவும் வந்தார். இயேசு திருடனைப் போல் பின்வாசல் வழியாக வராமல் வாசல் வழியாகவே ஆட்டுத் தொழுவமாகிய இஸ்ரவேல் தேசத்திற்குள் வந்தவர். இயேசு தமது ஆடுகளை யூத சமயத்திலிருந்து சடங்காச்சாரங் களிலிருந்து வெளியே கொண்டு வருவார். இயேசுவே யூத சமயத்திலிருந்து வெளியே வருகிறவர்களுக்கு வாசலாய் இருக்கிறார். இயேசு யூதர்களுக்கு மட்டுமல்லாமல் புறஜாதியாருக்கும் மீட்பின் வாசலாயிருக்கிறார்.
இந்த ஜீவனருளும் வாசலில் நுழைந்தவர்கள் இயேசுவின் சத்தத்திற்கு கீழ்ப்படிகிறவர்களாகவும், இரட்சிக்கப்பட்டவர்களாகவும் இருப்பர். அவருடைய வாசலில் நுழைகிறவர்களுக்கு நித்திய ஜீவனை அருளுவார். நித்திய ஜீவன் என்பது ஒரு வாரத்திற்கோ மட்டுமோ, ஒரு வருஷத்திற்கோ மட்டுமோ தேவனால் அருளப்படுவதில்லை. அது நித்திய நித்திய காலமாய் தேவனால் அருளப்படுவது. இந்த நித்திய ஜீவனைப் பெற்றவர்களின் வாழ்க்கை நிலைத்தி ருக்கும் வாழ்க்கையாக இருக்கும். ஆபத்து வந்தாலும் இயேசு அவர்களைப் பாது காக்கிறார். சிதறிப் போனாலும் இயேசு அவர்களை ஒன்று சேர்க்கிறார். இயேசுவின் கரத்திலிருந்து யாரும் அவர்களை பறித்துக் கொள்ள முடியாது. இயேசுவால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் எங்கும் ஓட முடியாது.
மறுபிறப்படைந்தவர்கள் நிறைவான,வளமான, நிம்மதியான, மகிழ்சியான நம்பிக் கையுள்ள வாழ்க்கையை அனுபவிப்பர். இதைக் கொடுப்பதற்காகவே இயேசு வந்தார். இயேசுவினுடையவர்கள் நோயிலும், வறுமையிலும்,தோல்விகளிலும் கஷ்டப்பட்டாலும் தொடர்ந்து தேவனோடிருக்க வேண்டும். அவைகளையெல் லாம் தேவன் நீக்கிப் போடுவார். தேவனுடையவர்களை தேவனுடைய அன்பிலி ருந்தும் அவருடைய பிரசன்னத்திலிருந்தும் எந்த வல்லமையினாலும், எந்த சூழ்நிலைகளினாலும் பிரிக்க முடியாது. எத்தனை பலவீனர்களாயிருந்தாலும் அவருடைய பிள்ளைகளுக்குப் பாதுகாப்பையும், அரவணைப்பையும் கொடுப்பவர் இயேசு.
7) இரட்சிப்பின் வாசல்:
நாம் அனைவரும் இரட்சிக்கப்படவே இயேசு இந்த உலகத்துக்கு மனிதனாக வந்தார். இயேசு என்ற பெயருக்கு இரட்சகர் என்று பொருள். இயேசு சிலுவையில் அறையப் பட்டதன் நோக்கமே நாம் இரட்சிப்பைப் பெறுவதற்காகத்தான். பாவத்தில் வாழ்பவர்கள் இந்த இரட்சிப்பின் வாசலைக் கண்டுபிடிக்க விடாதபடி இந்தப் பிரபஞ்சத்தின் லோகாதி பதி ஜனங்களின் கண்களைக் குருடாக்குகிறான் (2கொரிந்தியர் 4 : 4). இயேசு கிறிஸ்துவை சிமியோன் “இரட்சண்யம்” என்றார் (லூக்கா 2 : 32). இரட்சிப்பு என்றால் ஆபத்து, தண்டனை, பாவத்தண்டனை ஆகியவற்றிலிருந்து விடுவித்தல் என்று பொருள். இந்த இரட்சிப்பினால் தேவனுக்குப் பகைவனாக இருந்த மனிதகுலம் ஒப்புரவாக்கப்பட்டு தேவனுடைய பிள்ளைகளாகின்றனர். ஆவியினால் இரட்சிக்கப்படுகிறவர்கள் மரணத் தண்டனையிலிருந்து விடுவிக்கப் படுகின்றனர். அதன்பின் தேவனுக்கு முன்பாக நீதிமான்களாக்கப் படுகின்றனர். பரிசுத்தமாக்கப் படுகின்றனர். பின்பு சரீரத்தில் இரட்சிப்படையும் போது பாவத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்படுவர். புதிய வாசலுக்குள் நுழைந்து தேவ சன்னி தானத்தில் நிற்பர். பாவமன்னிப்பாகிய இரட்சிப்பு கிறிஸ்துவின் வாசலுக்குள் நுழைந்தால் மட்டுமே கிடைக்கிறது.
இயேசுவே நம்மைப் பாவச்சேற்றிலிருந்து தூக்கியெடுத்து சிலுவையண்டை கொண்டு போய், தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தை ஊற்றி நம்மைப் பாவங்களற கழுவுகிறார். பிசாசின் தலையை நசுக்கி அந்தகார வல்லமைகளின் ஆதிக்கத்திலிருந்தும், மந்திரவாதிகள் பிடியிலிருந்தும், மீட்பையும், இரட்சிப் பையும் தருகிறார். மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோலை மரணத் தின் அதிபதியான பிசாசிடம் இருந்து பிடுங்கி, வெற்றி சிறந்து இரட்சிப்பைத் தருகிறார். இரட்சிப்பானது பாதாளத்தின் வாசல் நம்மை மேற்கொள்ளாதபடி பாதுகாக்கிறது. கர்த்தருடைய வாசலுக்குள் நுழைந்து அவரை ஏற்றுக் கொள்ளும் போது நமது ஆவி இரட்சிக்கப்படுகிறது. கர்த்தருக்காக நாம் வாழும்போது நமது ஆத்துமா இரட்சிக்கப்படுகிறது. இரட்சிக்கப்பட்டவர்கள் கர்த்தரைக் காணும்போது சரீரம் இரட்சிக்கப்படுகிறது,. நாம் இரட்சிக்கப்பட்டவுடன் புதிய ஜீவனைப் பெற்று (கொலோசெயர் 3 : 4)புதிய ஆவியுடன் புதிய சிருஷ்டியாகிறோம் (2தீமோத்தேயு 1 : 7).
8) காணக்கூடாத வாசல்:
சோதோம்கொமாராவின் கூக்குரல் பெரிதாக இருந்ததாலும், அவர்களுடைய பாவம் மிகவும் கொடியதாக இருந்ததாலும், கர்த்தர் தானே இறங்கி அதைப் பார்க்க வந்தார். தான் அந்தப் பட்டணங்களை அழிக்கவிருப்பதை சிநேகிதனான ஆபிரகாமிடம் கூறினார். ஆபிர காம் அதைக் கேட்டவுடன் தேவனிடம் மன்றாடி 10 நீதிமான்கள் அந்தப் பட்டணத்திலிருந்தால் அதை நான் அளிக்கமாட்டேன் என்ற வாக்குறுதியை தேவனிடம் பெற்றார். ஆனால் சோதோகோமாரா பட்டணத்திலிருந்த ஒரேயொரு நீதிமான் லோத்து மட்டுமே. தேவன் ஆபிரகாமின் நிமித்தமும், தான் அவருக்கு வாக்களித்ததின் நிமித்தமும் இரண்டு தூதர்களை அங்கு அனுப்பினார். அவர்கள் லோத்திடம் அந்தப்பட்டணத்தைத் தாங்கள் அழிக்கப் போவதைப் பற்றிக் கூறி விரைவாக வெளியேறக் கட்டளையிட்டனர்.
அந்தப் பட்டணத்தின் பழக்கம் அந்த ஊருக்கு யாராவது அன்னியர் வந்தால் அவர்களைப் பலவந்தப்படுத்தி தங்கள் இச்சைகளை நிறைவேற்றும் அளவுக்கு வெறி கொண்டிருந்தனர். லோத்து அந்தப் பட்டணத்தை விட்டு வெளியேறத் தாமதித்துக் கொண்டிருந்தபோது அங்குள்ள ஜனங்கள் அனைவரும் நாலா திசையிலிருந்து வந்து அந்த வீட்டை சூழ்ந்த னர். வீட்டின் வாசல் அடைக்கப் பட்டவுடன் கர்த்தர் அவர்களைக் குருட்டாட்டம் பிடிக்கப் பண்ணினார். அதனால் அவர்கள் வாசலைக் கண்டுபிடிக்க முடியாமல் தேடி அலுத்துப் போனார்கள் தேவன் தன்னுடைய ராஜ்ஜியத்துக்குள் வேண்டாத ஜனங்களை உள்ளே வரவிடாமல் வாசலை அடைத்து விடுவார். என்பதை இந்தச் சம்பவத்திலிருந்து அறிந்து கொள்கிறோம்.
முடிவுரை:
இயேசு ஒரு மதத்தை உருவாக்கவுமில்லை. அவர் ஒரு மதத்தலைவரு மல்ல. கிறிஸ்தவ மதம் என்ற சொல் வேதத்தில் இல்லை. இயேசுகிறிஸ்து மனிதனாக வந்த தேவன். மதங்கள் கூறியதன் சாராம்சம். யூதசமயம் காத்திருந்த மேசியா. உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்க வெளிப்பட்ட தேவ ஆட்டுக்குட்டி (யோவான் 1 : 29). இயேசுவுக்கு மத எல்லை கிடையாது. எங்கும் விரிந்த வானம் போல அனைவருக்கும் பொதுவான கதிரவனைப் போல உலகின் ஒரே இரட்சகர்.
அப்போஸ்தலர் 4 : 12 “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.”
இயேசு தந்த மார்க்கம் உலக மக்கள் அனைவருக்குமான இரட்சிப்பின் மார்க்கம். அது தேவன் மனிதனாக வந்த மார்க்கம். தேவ ஆலோசனையில் உதித்த மார்க்கம். மனிதனைப் பரலோகத்திருக்குக் கொண்டு சேர்க்கும் வாசல். இந்த வாசலுக்குள் செல்லவிடாதபடி சாத்தான் அநேகத் தடைகளைக் கொண்டு வருவான் கர்த்தர்,
வெளிப்படுத்தல் 3 : 8ல் “இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக் கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.”
என்கிறார். இயேசு பாவ உலகிற்காக, உன்னதத்திலிருந்து தோண்றிய அருணோதயம் (லூக்கா 1 : 78, 79) உலகத் தோற்றத்திற்கு முன்னே கிறிஸ்து இரு ந்தவர். எல்லாம் அறிந்தவர். தேவன் நம்மேல் வைத்த அன்பினால் அவருடைய சமூகம் நமக்கு முன் சென்று அடைக்கப்பட்ட வாசல்களைத் திறக்கச் செய்வார். அந்த இடுக்கமான வாசலுக்குள் நுழைந்து அவரது உன்னத ஆசிகளைப் பெறுவோம். கர்த்தர்,
வெளிப்படுத்தல் 3 : 20 “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.” என்கிறார்.
நமது உள்ளமாகிய வாசலைக் கர்த்தருக்கென்று திறந்து கொடுத்தால், திறந்த வாசலைக் கர்த்தர் நமக்கு முன்பாக வைப்பார். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…