அக்கினியால் பதில் அளிக்கும் தேவன்

சாலமோன் ஆலயப் பிரதிஷ்டையில் ஜெபித்தபோது இறங்கிய அக்கினி

சாலமோன் ஆலயப்பிரதிஷ்டையில் ஜெபித்த ஜெபம்:

தேவனுடைய விருப்பப்படி தாவீதின் மகனான சாலமோன், தேவன் கொடுத்த மாதிரியின்படியும், தேவனுடைய விருப்பத்தின்படியும் கட்டப்பட்ட தேவாலய த்தில் துதிகளும் ஸ்தோத்திரங்களும் ஏறெடுத்தான். தேவாலய பிரதிஷ்டைய ன்று ஜெபத்தை முன் நின்று வழிநடத்திய சாலமோன் தேவனிடம் பல்வேறு வகையான சூழல்களில் ஏறெடுக்கப்படும் ஜெபங்களுக்குப் பதில் கொடுக்கப்பட வேண்டுமென வேண்டினார். யாராவது குற்றம் செய்து இந்த ஆலயத்துக்கு வந்தால் அவர்களை நியாயம் தீர்க்கப்பட வேண்டுமென்று 6 : 22, 23 லும், இஸ்ர வேலர் பாவஞ் செய்து எதிரிகளின் கையில் தோற்கடிக்கப்பட்டு, ஆலயத்துக்கு வந்தால், அவர்களின் பாவத்தை மன்னித்து அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்துக்குத் திரும்பிச் செல்லப் பண்ண வேண்டுமென்று 6 : 24, 25 லும் கூறினார்.

உமக்கு விரோதமாகச் செயல்பட்டு அதனால் தேசத்தில் மழை பெய்யாமலி ருந்தால், அவர்கள் இதினிமித்தம் மனந்திரும்பி உம்முடைய நாமத்தினால் அறிக்கையிட்டால் அவர்களை மன்னித்து அவர்களுக்குச் சுதந்திரமாகக் கொடுத்த உம்முடைய தேசத்தில் மழையைப் பொழியப்பண்ணும் என்று 6 : 26, 27லும், தேசத்தில் பஞ்சமோ, கொள்ளை நோயோ உண்டாகிறபோது இந்த ஆலயத்திற்கு வந்து விண்ணப்பம் பண்ணினால் தேவன் அதைக் கேட்டு அவைகளிருந்து விடுதலை பண்ண வேண்டுமென்று 6 : 28 – 31 லும், புறஜாதியர் வந்து இந்த ஆலயத்தில் உம்முடைய மகிமையை அறிந்து விண்ணப்பம் பண் ணினால் தேவரீர் அவர்களுக்குப் பதிலளிக்க வேண்டுமென்று 6 : 32, 33 லும் விண்ணப்பித்தார்.

உம்முடைய ஜனங்கள் எதிரிகளோடு யுத்தம் பண்ணப் புறப்படும்போது இந்த ஆலயத்துக்கு வந்து ஜெபம் பண்ணினால் தேவரீர் அதைக்கேட்டுப் பதிலளிக்க வேண்டுமென்று 6 : 34, 35 லும் ஜனங்கள் உமக்கு விரோதமாகப் பாவஞ் செய்து, அதனால் தேவன் கோபங்கொண்டு, அவர்களைச் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுத்தால், அவர்கள் சிறைபட்டுப்போன தேசத்தில் மனந்திரும்பி, இந்த ஆலயத்துக்கு வந்து கெஞ்சினால் அவர்களை மன்னித்தருளும் என்று 6 : 36 – 39 லும், இந்த ஆலயத்தில் செய்யப்படும் எல்லா ஜெபங்களுக்கும் உமது கண்கள் திறந்திருக்க வேண்டுமென்றும், அதைக் கேட்பதற்கு உமது செவிகள் கவனித் திருக்க வேண்டுமென்றும் ஜெபித்ததை 6 : 40 லும், கடைசியாகத் தேவன் இந்த ஆலயத்திற்கு உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் எழுந்தருளி, உம்மு டைய தாசனாகிய தாவீதுக்கு வாக்குப்பண்ணின கிருபையை நினைத்தருளும் என்றும் ஜெபித்து முடித்தான்,

கர்த்தரின்அக்கினிமயமானபதில்:

2 நாளாகாமம் 7:1,2 “சாலொமோன் ஜெபம் பண்ணி முடிக்கிற போது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்ற பலிகளையும் பட்சித் தது; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று. கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பினதினால், ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக்கூடாதிருந்தது.”

சாலமோன் ராஜா ஜெபத்தை முடித்தபோது தேவமகிமையால் தேவாலயம் நிறைந்தது. வானத்திலிருந்து அக்கினி இறங்கி சர்வாங்க தகனபலிகளையும், மற்ற பலிகளையும் பட்சித்தது. ஆசாரியர்கள்கூட அந்த மகிமையால் ஆலயத் துக்குள் பிரவேசிக்க முடியாமலிருந்து. இந்த அபூர்வ நிகழ்ச்சி தேவன் அவர்கள் செய்த காரியங்களை அங்கீகரித்ததற்கும், ஜெபத்தைக் கேட்டதற்கும் அடையா ளமாயிற்று. தேவன் ஆராதனை செய்வோரைக் கவனிக்கிறவரும், ஆராதனை களை அங்கீகரிப்பவருமான தேவன். இதுபோல ஜீவனுள்ள கற்களான விசுவா சிகள் வசன மாதிரியின்படி கூடி தேவனுக்குத் துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கும்போது தேவன் மகிமைப்படுவார். அவர்கள் இயேசுவின் நாமத்தில் கூடி வரும்போதே அங்கு அவரது பிரசன்னம் இறங்கும். எசேக்கியேல் தனது தரிசனத்தில் கர்த்தருடைய மகிமை கேருபீனின் மேலிருந்து எழும்பி கர்த்த ருடைய ஆலயம் மகிமையால் பிரகாசித்ததை எசேக்கியேல் 10 : 4ல் பார்க்கி றோம். சாலமோன் கட்டிய இந்தமுதல் தேவாலயத்தில் இந்த அபூர்வ நிகழ்ச்சி தேவ அங்கீகாரத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. ஆனால் இரண்டாம் தேவாலயத்தில் அப்படியொரு நிகழ்ச்சி நடைபெறவில்லை. ஆனால் ஆகாய் தீர்க்கதரிசி மூலம் தேவன் தனது ஏற்ப்பை உறுதிப்படுத்தினார் (ஆகாய் 2 : 9). பின்பு அதுபோன்ற நிகழ்ச்சி நடைபெறவில்லை. நாமும் ஓவ்வொரு நாளும் நாம் ஜெபிக்கும்போது அக்கினிமயமான நாவுகள்போல பிரித்தெடுக்கும் நாவுகள் நமக்குத் தோன்றி ஆவியில் நிரம்பி ஜெபிக்க வேண்டும்.

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago