இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் தகப்பனான உம்ரி வலிமைமிக்க அரசர்களில் ஒருவனாக வரலாற்றில் கருதப்பட்டவர். ஆனால் வேதாகமத்தில் அவர் பாராட்டப்படவில்லை. கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, கர்த்தரை வீணான விக்கிரகங்களினாலே கோபமூட்டினவர். தந்தையின் வழியையே ஆகாபும் பின்பற்றினார். உம்ரி அரசர் தன்னுடைய மகனான ஆகாபுக்கு சீதோனியரின் ராஜாவான ஏத்பாகாலின் மகளான யேசபேலைத் திருமணம் செய்து வைத்தார். இந்த சீதோனியரின் ராஜா மனித உரிமைகளை அலட்சியமாகக் கருதியவர். விக்கிரக ஆராதனை தான் அவருடைய ஆட்சியில் ஓங்கி இருந்தது. அவரது மகளான யேசபேலும் தந்தையின் அடிச்சுவடுகளையே பின்பற்றினாள். ஆகாபை அரசியல் லாபத்திற்காகவே யேசபேல் திருமணம் செய்திருந்தாள். ஆகாப் ராஜா ராணியின் ஆளுகைக்குள் அடங்கியிருந்தார். யேசபேலின் கைப்பொம்மை யாகத் திகழ்ந்தார்.
இஸ்ரவேல் தேசமானது பனி மிகுதியாகப் பொழியும். தேசம். மிகவும் செழிப்புள்ள தேசம். ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதிக்கும் போதும், மோசே யோசேப்பை ஆசீர்வதிக்கும் போதும், அந்தத் தேசம் எத்தனை செழிப்பான தேசம் என்று (ஆதியாகமம் 27 : 28, உபாகமம் 33 :13)ல் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் யேசபெல் ராணியோ இத்தனை செழிப்பாக இந்தத் தேசம் இருப்பதற்கும், அங்கு பெய்யும் பனிக்கும், மழைக்கும், நல்ல அறுவடைக்கும் காரணம் பாகாலின் தெய்வந்தான் என்று கூறி, ஜனங்களை நம்ப வைத்தாள். பாகால் என்றால் வானத்தின் அதிபதி என்று பொருள். ஆகாப் ராஜாவும் அவள் கூறியதையே நம்பினான். இஸ்ரவேலின் தலைநகரமான சமாரியாவில் ஒரு பலிபீடத்தைக் கட்டி அதற்கு ஆசாரியர்களை நியமித்து, அந்த நகரத்தை பாகாலின் நகரமாகவே மாற்றினாள். எகிப்திலிருந்து வந்த நாளிலிருந்து ஜனங்கள் கர்த்தர் தங்களைக் காப்பாற்றியதை நினைத்தும், அவர் செய்த அற்புதங்களையும், வல்லமையும், நினைத்தும் கர்த்தரே தெய்வம் என்றிருந்தனர்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
ஆனால் யேசபேல் ராணியின் சொல்லைக் கேட்டு பாகாலே தெய்வம் என்றனர். அந்த நாடு ஆண்டவரைத் தொழுது கொள்பவர்களுக்கும், பாகாலை வழிபடுகிறவர்களுக்கும் நடுவேயுள்ள குழப்பமான சூழ்நிலையை மையமாகக் கொண்டிருந்தது. இப்படிப்பட்ட நேரத்தில் எலியாவின் எண்ணமும், பணியும் இஸ்ரவேல் மக்களை அவர்களுடைய விசுவாசம் மறுதலிப்பை விட்டு விட்டு, ஜீவனுள்ள தேவனிடம் திரும்பச் செய்வதாக இருந்தது. ( 1 இராஜாக்கள் 18 : 21,36, 37 ) மக்களைத் தீய வழியிலிருந்து மீட்கவும், அவர்களைச் சீர்திருத்தவும், ஆகாப் ராஜாவுக்கு முன்பாக நின்று சவால் விட்டார். யாக்கோபு 5 ; 17 ல் எலியா தேவனிடம் போய் கருத்தாய் ஜெபம் பண்ணினான், அதனால் பூமி மழையைப் பொழிந்தது என்று கூறியிருப்பதைக் காணலாம். இஸ்ரவேலின் சீதோஷ்ண நிலையைக் குறித்த ஒரு அறிவிப்பைக் கொடுப்பதற்காகத் திடீரென்று அரண்மனைக்குச் சென்று
1இராஜாக்கள் 17 : 1 “கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.”
என்ற அறிவிப்பைக் கொடுக்கிறார். அதேபோல் பேசி முடித்து விட்டு சென்று விடுகிறார். இதனால் அவர்கள் அதிர்ந்து போயிருந்தனர். இப்படிப்பட்ட சவாலை ராஜாவின் முன் கூறுவதற்கு ஜெபிக்கிறவர்களாலும், கர்த்தரின் சத்தத்தைக் கேட்கிறவர்களாலும் தான் முடியும். எலியாவின் மேன்மையெல்லாம் “நான் கர்த்தருக்கு முன்பாக நிற்கிறவன், ஜெபத்திலும் விண்ணப்பத்திலும் நிற்கிறவன்” என்பது தான். இதன் அர்த்தம் என்னவென்றால் கர்த்தருடைய வல்லமையினாலும், மகிமையினாலும் நிரப்பிக் கொண்டவன் ஆகாப் ராஜாவுக்கு எதற்காக இந்தத் தண்டனையென்றால்,
1இராஜாக்கள் 16 : 30 “உம்ரியின் குமாரனாகிய ஆகாப், தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.”
ஆகாப் பாகாலுக்குப் பலியிட்டான். ஒரு விக்கிரகத் தோப்பை உண்டுபண்ணி கர்த்தருக்குக் கோபமூட்டினான். அதனால் தான் கர்த்தர் எலியாவின் மூலம் மழையில்லாத பஞ்சத்தைக் கொடுத்தார். இந்தப் பாதிப்பு இஸ்ரவேலருக்கு மட்டுமல்ல எலியாவுக்கும் தான். எலியா கருத்தாய் ஜெபித்ததாலும், பதில் கிடைக்கும் வரை போராடி ஜெபித்ததாலும், அவருடைய சொற்படி மூன்றரை வருடங்கள் இஸ்ரவேல் தேசத்தில் மழை பெய்யவில்லை. அவருடைய ஜெபத்தினால் வானம் அடைபட்டது. மூன்றரை ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் எலியா ஜெபம் பண்ணிய போது வானம் திறந்தது. கர்த்தர் மழையை அனுப்பினார். இது எலியாவின் வாக்கின்படி நடந்த அற்புதம். நாமும் வல்லமையுள்ள தேவனுக்கு முன்பாக நின்றால், மழையும், பனியும் நம்முடைய கட்டளைக்குக் கீழ்ப்படியும்.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…
View Comments
அருமையான விளக்கங்கள் நிறைந்த பதிவு தொடரட்டும் தங்கள் பணி .