ஆபிரகாம்:
கர்த்தர் ஆபிரகாமை மெசபொத்தோமியாவில் இருக்கும் போது அழைத்தார். இரண்டாவதாக ஆரானிலிருக்கும் போதும் அழைத்தார். அதன்பின் கானானி லும், எகிப்திலும், பெத்தேலிலும், அதன்பின் பெலிஸ்தியர் குடியிருந்த பெயர்செ பாவிலும் குடியிருந்தான். ஒவ்வொரு இடத்திலும் கர்த்தரையே நம்பி வாழ்ந் தான். அவனுக்கு 25 வருடங்கள் பிள்ளையில்லாமலிருந்து, கர்த்தரிடம் வேண்டி அவர் வாக்களித்து ஆபிரகாமின் 100 வது வயதில் ஈசாக்கு பிறந்தான். ஆபிரகா முக்கு முதல் இக்கட்டு, தான் அத்தனை வருடங்கள் வாழ்ந்த கல்தேயர் பட்ட ணத் திலிருந்து எல்லாவற்றையும், எல்லா சொந்தங்களையும் விட்டு வர வேண்டும் (ஆதியாகமம் 12 : 1). எங்கே போகிறோம் என்று தெரியாமல் பயணம் செய்தது (எபிரேயர் 11 : 8).
ஆரம்பத்தில் ஆபிரகாம் சிறப்பாகச் செயல்படாவிட்டாலும், பின்னர் பரிபூர ணமாகச் செயல்பட்டான். இரண்டாவது தன்னுடைய அண்ணன் மகனான லோத்தை ஆபிரகாம் மிகவும் நேசித்ததால் அவனைத் தன்னுடனே கூட்டிக் கொண்டு வந்தான். அவனும் பிரிந்து சோதோமை நோக்கிப் போனான் (ஆதியாக மம் 13 : 11). மூன்றாவதாக ஆகாரின் மூலம் தான்பெற்ற மகனான இஸ்ம வேலைப் பிரிய வேண்டியநிலை. அதைத் தாங்க மாட்டாமல் தேவனிடம் அவ னுக்காக வேண்டினான். “உமக்கு முன்பாக பிழைப்பானாக” என்று வேண்டினான் (ஆதியாகமம் 17 : 18). கர்த்தர் ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையும் வாக் குத்தத்தங்களும் நிறைவேறாமல் 25 வருடங்கள் கர்த்தர் பேரில் விசுவாசத் துடனும், நம்பிக்கையுடனும் காத்திருந்தான் (ஆதியாகமம் 12 : 1 – 3, 15 : 6, 18, 18 : 9 – 14, எபிரேயர் 11 : 8 – 13).
கர்த்தர் ஆபிரகாமுக்கு வைத்த பரீட்சை:
ஆதியாகமம் 22 : 2 “அப்பொழுது அவர்: உன் புத்திரனும், உன் ஏகசுதனும், உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.”
ஆபிரகாம் தன் சொந்தக் குமாரனை இவ்விதமாகக் கொன்று சுட்டெரிக்கும் படியாகத் தேவன் அறிவித்தபோது, தேவனுக்கு எதிராக முறுமுறுக்கவில்லை. அதற்கான காரணங்களையும் கேட்கவில்லை. சிலநாட்கள் கழிந்தபின் நிறைவே ற்றுகிறேன் என்று கூறவுமில்லை. கர்த்தர் ஏதோ தவறாகவே கூறுகிறாரே என்று அழுது புலம்பவுமில்லை. ஆபிரகாமுக்குத் தேவன் பேரில் இருந்த விசுவாசமும், தேவனுக்கு ஆபிரகாம் செய்திருந்த அர்ப்பணிப்பும் மிக அதிக அளவில் சோதிக்கப்பட்டன. கர்த்தர் செய்யச் சொன்ன காரியம் சாதாரண மனித அறிவுக்கு முற்றிலும் முரண்பாடானதும், பிள்ளையின் மேல் தகப்பன் கொண்டிருக்கும் அன்புக்கும் சவாலான ஒரு காரியத்தைச் செய்யும்படி, கர்த்தர் ஆபிரகாமுக்குக் கட்டளையிட்டார். ஆபிரகாமுக்குக் கடைசியாக ஒரு பரீட்சை வைக்கிறார். கர்த்தர் யாரையும் சோதிப்பதில்லை. இந்தப் பரீட்சை ஆபிரகாமை விழச்செய்வதற்காக அல்ல. அவருடைய விசுவாசத்தையும், கீழ்ப்படிதலையும் வளர்ந்தோங்கச் செய்வதற்காகவே இவ்வாறு செய்தார். ஈசாக்கு பலியிடப்பட்டு மரிப்பதைத் தேவன் விரும்பவில்லை. லேவியராகமம் 20 : 1 – 5 ல் கர்த்தரே மனிதனைப் பலியிடுவதை வன்மையாகக் கண்டித்து, அது பயங்கர பாவம் என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். எனினும் ஆபிராமுக்குள்ள அர்பணிப் பைச் சோதிக்க விரும்பினார்.
இதேபோல் நம்மையும் புடமிட்டுப், பரிசுத்தப்படுத்தி உயர்த்துவதற்காகவே தேவன் அவற்றை அனுமதிக்கிறார். அது என்னவென்றால் 100 வயது வரைக் காத்திருந்து பெற்ற அவனுடைய ஒரே மகனைத் தனக்குத் தகனபலியாகக் கொடுக்க வேண்டும் என்பது தான். கர்த்தர் கூறும் போது உன்னுடைய புத்திரன் என்று மட்டும் கூறாமல் உன் ஏகசுதன் என்றும், உனக்குப் பிரியமான குமாரன் என்றும் அழுத்திக் கூறுவதைப் பார்க்கிறோம். ஏகசுதன் என்றால் வாக்குத்தத் தத்தின்படி பிறந்த ஒரே மகன். இயேசுவையும் யோவான் 3 : 16 ல் பிதாவின் ஒரேபேறான குமாரன் என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். ஒரு விநோதமான காரியத்தைச் செய்யச் சொல்லுகிறார். அத்தனை வருடங்கள் காத்திருந்து பெற்ற தன்னுடைய ஒரே மகனை இவ்வாறு கேட்டால், யாரும் அதற்குச் செவி கொடுக்க மாட்டார்கள். ஆபிரகாம் செய்வதறியாமல் முதலில் திகைத்திருப்பான். ஒருபக்கம் தன்னுடைய நேசகுமாரன், மறுபக்கம் தன்னை அழைத்த கர்த்தர். அவனுடைய பாசத்தைச் சோதிக்க வைத்த பரீட்சை இது. கர்த்தர் தன்னுடைய ஒரேபேறான குமாரனையே நமக்குத் தந்தருளி அவரை நம்முடைய பாவங்க ளுக்காகவும் அக்கிரமங்களுக்காகவும் சிலுவையிலறைய ஒப்புக்கொடுத்தாரே. இதைத்தான் இயேசுவானவர்,
மத்தேயு 22 : 37 “ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக;” என்றார்.
தன்னுடைய மகனையே தன்னுடைய கையால் தகனபலியாக இடுவதென்பது கூடாத காரியம். தகனபலியென்பது கர்த்தர் சொன்ன பிள்ளையை வெட்டி, அதை எரிகிற தீயில் போடணும். அந்த வாசனையைக் கர்த்தர் முகர்வார் என்பதாகும். ஆபிரகாம் சோதிக்கப்பட்டதுபோல ஒவ்வொரு விசுவாசிகளின் உண்மையான விசுவாசமும் சோதிக்கப்படும். எதற்காக இந்தப் பரீட்சை என்றால், கர்த்தர் ஆபிரகாம் தன்னுடைய குமாரனை விட தன்னை நேசிக்கிறானா என்றும், தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் என்ற நம்பிக்கை ஆபிரகாமுக்குத் தேவன் பேரில் உள்ளதா என்றும், ஆபிரகாம் அவனுடைய முழு இருதயத்தோடு விசுவாசித்து கீழ்ப்படிக்கிறானா என்றும் அனைவரும் அறிய விரும்பினார்.
ஆபிரகாம் ஆயத்தமானது:
ஆபிரகாம் எல்லோரையும் போல ஒரு சாதாரண மனிதனாக இருந்தால், கர்த்தர் கூறியதைத் தன்னுடைய மனைவியாகிய சாராளிடம் உடனே போய்க் கூறி அழுதிருப்பான். ஆனால் தன்னுடைய மனைவியிடமோ, தான் கூட்டிக் கொண்டு சென்ற ஈசாக்கிடமோ, வேலைக்காரர்களிடமோ தான் எதற்காகப் போகிறேன் என்று எதுவும் கூறவில்லை. இதிலிருந்து நாமும் எல்லாவற்றையும் எல்லோ ரிடமும் கூறிவிட முடியாதென்றும், எதை யாரிடம் கூற வேண்டுமோ அதை அவர்களிடம் மட்டுமே கூற வேண்டும் என்றும் அறிந்து கொள்கிறோம்.. ஆபிரகாம் சிறிதளவுகூடத் தயங்காமல், கர்த்தரின் வார்த்தைக்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் செயலில் இறங்கினான். அதனால்தான் கர்த்தர் உலகத்திலுள் ளவைகளில் அன்பு கூறாதிருங்கள் என்கிறார். கர்த்தர் எதைச் செய்யக் கூறினா லும் செய்ய ஆயத்தமாக இருந்தவன் ஆபிரகாம் என்று இதிலிருந்து அறிகிறோம். அதிகாலையில் எழுந்து கழுதையின் மேல் சேணங்கட்டி, தன்னோடுள்ள இரண்டு வேலைக்காரர்களைத் தன்னோடும் ஈசாக்கோடும் கூட்டிக் கொண்டு, தனபலிக்கான கட்டைகளையெல்லாம் தானே பிளந்து எடுத்துக் கட்டி, கர்த்தர் தன்னிடம் கூறிய இடத்துக்குப் புறப்பட்டான்.
ஆபிரகாமின் பயணம்:
கர்த்தர் ஈசாக்கைப் பலியிட வேண்டிய இடத்தைக் கூட குறிப்பிட்டுச் சொல்லுகிறார். அந்த இடம்தான் மோரியா மலை. இந்த இடத்தில்தான் பல ஆண்டுகளுக்குப் பின் தேவனுடைய ஆலயம் சாலமோனால் கட்டப்பட்டது (2 நாளாகாமம் 3 : 1). அர்வனா களத்தில் தாவீதுடன் தூதன் நின்ற இடமும் இதுதான் (2 சாமுவேல் 24 : 16 – 25). இந்த இடத்தில்தான் இயேசுவைச் சிலுவை யில் அறைந்தனர் (மத்தேயு 27 : 33). கர்த்தர் தகனபலியிடக் கூறின இடம் ஆபிரகாம் குடியிருந்த பெயர்செபாவிலிருந்து 50 மைல் அதாவது 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மூன்று நாட்கள் பிரயாணம் பண்ணினால் தான் அந்த இடத்தை அடைய முடியும். அந்த மூன்று நாள் பிரயாணத்தில் ஆபிரகாமின் மனம் என்ன பாடுபட்டிருக்கும். ஆனால் அவன் எதையும் வெளிக் காட்டவில்லை. கர்த்தர் இந்த மூன்று நாட்களும் அவனுடைய சிந்தனை, பேச்சு எப்படியிருக்கிறது என்று பார்த்திருப்பார். ஈசாக்கு போகும்போது தன்னுடைய தந்தையிடம் பலியிடுவதற்கு ஆட்டுக்குட்டி எங்கே? என்று கேட்கிறான். இதிலிருந்து ஈசாக்குக்குப் பலியிடுவதற்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து வைத்திருந்தான் என்று அறிகிறோம்.
அதற்கு ஆபிரகாம் “உன்னைத்தான் பலியாகக் கொடுக்கப் போகிறேன்” என்று அவனிடம் கூறவில்லை. “அதைக் கர்த்தர் பார்த்துக் கொள்வார்” என்று தீர்க்க தரிசனமாக முன்னறிவித்ததைப் பார்க்கிறோம். இந்தத் தீர்க்கதரிசனமானது, தேவன் ஒரு ஆட்டுக்கடாவாகிய ஒரு பலிப்பொருளை கொடுக்கப்போவதைக் குறிக்கிறது. ஆபிரகாம் கூறியது இறுதியில் கொல்கொதாவில் நிறைவேறி யது. அங்கே கர்த்தர் தமது ஒரேபேறான குமாரனை பாவநிவாரணபலியாக மனித இனத்தின் மீட்புக்கென்று ஒப்புக் கொடுத்தார். இவ்வாறு கர்த்தர் ஆபிரகாமிடம் செய்யச் சொன்ன காரியத்தைத் தாமே செய்தார் (யோவான் 3 : 16, ரோமர் 3 : 24, 25, 8 : 32). ஆபிரகாம் கூறியது போலவே கர்த்தர் அங்கு பலியிட வேண்டியதை ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார். வேலைக்காரரை ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி அவர்களிடம் “நானும், பிள்ளையாண்டானும் தொழுது கொண்டு திரும்பி வருவோம்” என்று அவர்களை அங்கேயே நிறுத்தி விட்டுச் சென்றார். அதனால் அவர்களுக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. இவ்வாறு ஆபிரகாம் கூறியது ஆபிரகாமின் உறுதியான விசுவாசத்துக்கு ஒரு சாட்சியாகும்.
“திரும்பி வருவோம்” என்று கூறியபோது தன்னுடைய மகனோடு திரும்பப் போவதை அவன் விசுவாசித்ததைப் பார்க்கிறோம். ஆபிரகாம் ஈசாக்கைக் குறித்தத் தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேறுமென்றும், அவன் மூலமாய் சந்ததிகள் பெருகும் என்றும் (ஆதியாகமம் 21 : 12) பூரணமாக நம்பினான். தகனபலிக்கான கட்டைகளை ஈசாக்கின் மேல் வைத்து எடுத்துச் சென்றதிலிருந்து, ஈசாக்கு கட்டைகளைச் சுமக்கும் அளவுக்குள்ள வாலிபனாக இருந்தான் என்றறிகிறோம். இயேசுவும் சிலுவை மரணத்திற்குச் செல்லும் போது தானே தன்னுடைய சிலுவையைச் சுமந்து கொண்டு சென்றதை யோவான் 19 : 17 ல் பார்க்கிறோம். மேலும் ஆபிரகாம் இங்கு கூறும் போதும், கர்த்தர் கூறும் போதும் பிள்ளையாண்டான் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பதால் ஈசாக்கு அப்பொழுது வாலிபனாக இருந்திருப்பான் என்றறிகிறோம். ஆபிரகாமும் ஈசாக்கும் மட்டும் தனியாக கர்த்தர் சொன்ன இடமாகிய மோரியா மலைக்குச் சென்றனர்.
மோரியா மலையில் நடந்தது:
ஆபிரகாம் மூன்று நாள் பிரயாணம் பண்ணின பின்பு தன்னுடைய கண்களை ஏறெடுத்து கர்த்தர் தன்னிடம் கூறிய இடத்தைத் தூரத்திலே பார்த்தான். இதேபோல் ஆதியாகமம் 31 : 11 ல் யாக்கோபிடம் தேவதூதன் அவனுடைய கண்களை ஏறெடுத்துப் பார்க்கச் சொல்லித் தான் அவனுக்காக ஏற்படுத்தி வைத்திருப்பதைப் பார்க்கக் கூறியதைப் பார்க்கிறோம். கர்த்தர் குறிப்பிட்ட மோரியா மலைக்குச் சென்று, தான் கொண்டு சென்ற விறகுகளை வைத்து பலிபீடம் கட்டினான். அதன்பின் ஆபிரகாம் ஈசாக்கின் கைகளையும் கால்களை யும் கட்டினான். ஈசாக்கு கைகளையும், கால்களையும் கட்டும் போது தன்னு டைய தகப்பனிடம் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. தன்னுடைய சுய பலத்தால் தடுத்திருக்கலாம் அல்லது அதைத் தட்டி விட்டு ஓடியிருக்கலாம். அப்படியெதுவும் செய்யாமல் தன்னுடைய தகப்பனின் சொல்லுக்கு அப்படியே கீழ்ப்படிந்தான். கீழ்ப்படிகிற குணமுள்ளவன் ஈசாக்கு என்று இதிலிருந்து அறிகி றோம். பிதாவின் சித்தத்தை இயேசுவானவர் நிறைவேற்ற உலகத்துக்கு வந்து பாடுகளைப் பெற்றதைப் போல, ஈசாக்கும் தந்தையின் விருப்பத்தை நிறை வேற்ற தன்னையே ஒப்புக்கொடுத்தார் (பிலிப்பியர் 2 : 5 – 8, மத்தேயு 26 : 39, 53, 54). ஈசாக்கு கிறிஸ்துவின் முன்னடையாளமாக அமைந்தான். ஆபிரகாம் தன்னு டைய ஒரே மகனை வெட்டும்படிக்குக் கத்தியை எடுத்தான். இதைத்தான் யாக்கோபு,
யாக்கோபு 2 : 21 “நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்?”
என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். இவ்வாறு இத்தனை தைரியம் ஆபிரகாமுக்கு வந்ததென்றால், ஈசாக்கின் பிறப்பில் தேவனளித்த வாக்குறுதி எவ்விதத்திலும் நிறைவேற்றியே தீரும் என்றும், ஈசாக்குக்கும் சந்ததி உண்டெ ன்று ஆதியாகமம் 17 : 19, 21 : 12 ல் கூறியதையும் நினைவில் கொண்டிருந்தான். இந்த விசுவாசமே ஆபிரகாமின் கீழ்ப்படிதலின் இரகசியமாகும். அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் ஆபிரகாமே, ஆபிரகாமே என்று இரண்டு தடவை பெயர் சொல்லி அழைத்தார். மோசேக்கு முட்செடியில் காட்சியளிக்கும் போதும், ஆகாருக்கும், கிதியோனின் அழைப்பிலும், சிம்சோனின் பெற்றோருடனும், சகரியா நூலிலும் கர்த்தருடைய தூதனானவர் என்று வெளிப்படுவதைப் பார்க்கிறோம் (ஆதியாகமம் 16 : 7, யாத்திராகமம் 3 : 2, 14, நியாயாதிபதிகள் 6 : 12, 14, 13 : 22, 23 சகரியா 3 : 1, 2). இவர் கர்த்தரால் அனுப்பப்பட்ட கிறிஸ்து ஆவார். கிறிஸ்துவின் அவதாரமாக்குதலுக்கு முன்பு இவ்வாறு செயல்பட்டார். அவதார மான பின்பு புதிய ஏற்பாட்டில் கர்த்தருடைய தூதனானவர் என்ற சொல்லைக் காணமுடியாது. கர்த்தருடைய தூதனானவர் சொன்னது,
ஆதியாகமம் 22 : 12 “அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.”
தூதனானவர் ஆபிரகாமே, ஆபிரகாமே என்று இரண்டு தடவை கூப்பிட்ட போது, ஆபிரகாம் இதோ அடியேன் என்று மட்டும் பதிலளித்தாரே தவிர நீங்கள் என்னிடம் கூறியபடி செய்து முடிக்கப் போகிறேன் என்று அழுது புலம்பலை. ஆபிரகாம் தன்னுடைய ஒரே மகனைப் பலியிடத் தொடங்கிய போது, அவன் தன்னுடைய இருதயத்தில் இறுதி அர்ப்பணம் செய்து விட்டான் என்று கர்த்தர் அறிந்தார். ஆபிரகாம் தன்னுடைய மகனைப் பலியிட முற்பட்டது பிதா தன்னுடைய ஒரே பேறான மகனாகிய நமது பாவம் போக்கும் பலியாக சிலுவையில் பலியிட ஒப்புக்கொடுத்ததற்கு முன்னடையாளம். ஆபிரகாமின் மகனைப் பலியிடப் படாமல் காத்த தேவன் தன்னுடைய மகனைப் பலியிட அனுமதித்தார். இதைத்தான் பவுல்,
ரோமர் 8 : 32 ல் “தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி?”
என்கிறார். இயேசு பலியாகவில்லையெனில் நாம் நித்திய வாழ்வைப் பெற்றி ருக்க முடியாது. ஆபிரகாமின் செய்கையைப் பார்த்த கர்த்தர், அவன் தனக்குப் பயப்படுகிற மனுஷன் என்று அறிந்து கொண்டார். அவனுடைய எண்ணம் அனை த்தும் தேவனுடைய சித்தத்தைச் செய்வதாகவே இருந்தது. ஆபிரகாம் அந்த இடத்திற்கு யெகோவாயீரே என்று பெயரிட்டார். இந்தப் பெயரின் பொருள் கர்த்தருடைய பர்வதத்தில் பார்த்துக் கொள்ளப்படும் என்பதாகும். .
முடிவுரை:
எபிரேயர் 11 : 17 – 19 எபிரேய ஆக்கியோன் தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.”என்கிறார்.”
நாமும் நம்முடைய சரீரங்களை ஜீவனுள்ள பலியைப்போல் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்து வாழணும் (எபிரேயர் 13 : 15). எபிரேயர் 11 : 28, 29 ல் கூறியது போல, நாம் விட்டுவிட வேண்டிய காரியங்களை விட்டுவிடும் போதுதான் கர்த்தர் நம்மைப் பரிபூரணமாக ஆசீர்வதிக்க முடியும். யாக்கோபு 2 : 21 ல் கூறியதுபோல, ஆபிரகாம் நீதிமான் என்று தன்னுடைய ஒரே மகனைப் பலியிட ஒப்புக்கொடுத்துச் செயலிலும் காட்டி விட்டார். தேவன் நம்முடைய இருதயத்தைப் பார்க்கிறவர். நாம் தேவன் மேல் வைத்திருக்கிற அன்பு, பக்தி, எல்லாம் உண்மையானதா என்று சோதித்தறிகிறார். தேவன் தான் அழைத்துத் தெரிந்தெடுத்த பிள்ளைகளை மட்டுமே சோதிப்பார். அது எதற்காக என்றால் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்தவும், அவருக்குள் நம்மை உறுதிப்படுத்தவும், அவருடைய கரங்களில் விசேஷித்த பாத்திரமாகவும் மாறவும்தான். எனவே நாம் தேவனுடைய சித்தத்துக்கு ஒப்புக்கொடுத்து, தேவனுடைய வார்த்தையையின் படி வாழ நம்மைத் தேவனுடைய கரத்தில் ஒப்புக்கொடுப்போம். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…